அரசியல் சமூகம்

அவரவர் வானம் – சரக்கும் பெண்களும் கொஞ்சம் கலாச்சார அடிப்படைவாதமும்

இருபது ஆண்டுகள் இருக்கும் என நினைக்கிறேன். கேரளாவை ஒரு புத்தகம் கலக்கியது. நளினி ஜமீலா என்ற பாலியல் தொழிலாளி எழுதிய சுயசரிதை நூல் அது. எந்த விதமான அனுதாபத்தையும் எதிர்பார்க்காத புத்தகம். ஒரு இலக்கியமறியாதவரின் சுய சரிதை, அதனுள் ஊடுபாவும் இயல்பான பாலியல் உணர்வு, சமூக இயல்பு கட்டமைப்பு ஆகியவற்றாலேயே இலக்கியமாகிப் போனது.

அதில் தானா என்று நினைவில்லை, ஒரு பெண் இருப்பார். ஆண்கள் உலகத்தில் தன்னால் செய்ய ஆசைப்பட்டவைகளை செய்ய முடியவில்லை என்ற ஏக்கம் சிறு வயது முதலே இருக்கும். இந்த ஆண் பெண் பிரிவினை அவருக்கு புரியவில்லை. ஆணைப்போல உடையுடுத்தி சிகை எல்லாம் வைத்து தான் ஒரு ரயிலில் சென்ற போது, தள்ளிப்படு தம்பி என ஒருவர் உரிமையோடு தன் பெர்த்தில் உட்கார்ந்து கொண்ட போது தான் சமமாய் உணர்ந்தேன் என்பார். இதை மொண்ணைகள் ‘கூப்டா வருவான்ல’ என நக்கல் அடிக்கலாம். ஆனால், அவர் காமமின்றி தன்னை ஒரு ஆணாக நினைத்து அருகில் அமர்வதை சொல்கிறார்.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் ஜாதிக்கும், கலாச்சாரத்துக்கும், ஆணாதிக்கத்துக்கும் பெரும் தொடர்பு உண்டு. எல்லாம் பிரிக்க முடியாத வண்ணம் கலந்தவை. தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் நிறைய ‘Opening up’ நிகழ்ந்துள்ளது. இது மிடில் க்ளாஸ் பெண்கள் வெளியே சுதந்திரமாக வருதல், தலித்துகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னேறுதல் என இருக்கும். இதற்கு எதிராக அடிப்படைவாத இயக்கங்கள் – காவி, பச்சை அல்லது ஜாதி இயக்கங்கள் கையில் எடுத்தது மூன்று விஷயங்களை – 1. கலாச்சாரம் 2. நாடகக் காதல் 3. ஜாதி கெத்து (ஆணவம்)

இடைநிலை ஜாதிகளில் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் எப்படி இருந்தன என எல்லோருக்கும் தெரியும். இப்போது வன்னியர்களும், கவுண்டர்களும், தேவர்களும் ஆண்ட ஜாதி ஆகிப்போயினர். இவர்கள் தங்கள் இன ஆண்களுக்கு ஜாதி வெறியும் அதோடு ஆணாதிக்கமும் (கலாச்சார போர்வையில்) சேர்த்தே ஊட்டி விடுகின்றனர். இவர்களின் கருத்தியல், பெண் என்ற ‘பொருள்’ படைக்கப்படுவதே அதே சாதி ஆணின் குழந்தையை சுமந்து பெற்று வளர்க்கத்தான்.

பெண்ணை தெய்வமெனவோ, பெரும் சக்தியெனவோ வர்ணித்து தன்னை நியாயப்படுத்திக் கொள்ளும் இவர்களில் ஒரு பிரிவு, மலம் அள்ளுவதை உயர்ந்த தொழில்தான் என்பவன் எப்படி அதை ஒரு நாளும் தான் செய்ய மாட்டோம் என்பதை அறிந்தவனோ, அதேதான் இவர்களின் தர்க்கமும். பெண்ணை தெய்வமாக்கி அடிமைப்படுத்துதல். பெண் இவர்களுக்கு புனிதப் பசு. ஆனால் அதே பெண் சொந்தமாய் காதலிக்க, தன் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் தருணம் பரத்தையாகிவிடுவாள். இந்த நூற்றாண்டில் நிகழும் ஆணவக் கொலைகளையும், வளர்த்தெடுக்கப்படும் ஆண்களின் ஜாதி கெத்தையும் – ஆணாத்திக்கச் சிந்தனையையும், அது முன்வைக்கும் பெண்-புனிதம்-கலாச்சாரம் என்கிற கோணத்தையும் ஒரு சேரத்தான் புரிந்து கொள்ள முடியும்.

இது போன்ற என்னற்ற க்ரூப்புகளில் இணையத்தில் (https://www.facebook.com/groups/551232318366953/) இவர்களின் அடிப்படை மன நிலையைக் காணலாம். பெண்கள் ஏன் குடிக்க கூடாது? என்ற கேள்வியை இவர்கள் அறிவு ரீதியாக எதிர்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதே முட்டாள்தனம். அறிவு வேண்டுமல்லவா?

இவர்கள்தான் இப்படி எனில் பெண்களுக்கு தீர்வு சொல்பவன் என்னும் பேர்வழிகள்  ‘எல்லாம் சரி. ஆனா குடிக்கறது தப்பு. ஆண்கள் குடிக்கறதே தப்பு. பெண்கள் போய்’ என்பார்கள். இந்த குடிக்கற”தே”வில் இருக்கும் அழுத்தமே அவர்கள் எந்தப் பக்கம் என்று சொல்லிவிடும். பெண்களின் சுதந்திரம் என்பது, அவர்கள் செய்ய வேண்டியதை அவர்களே தீர்மானிப்பதுதான். ஆண்-பெண் என்னும் பிரிவினை மனதளவில் உள்ளவர்களிடம், இந்த தலைமுறையில் புரிதலை எதிர்பார்ப்பதே முட்டாள்தனம்.

சராசரியாக படித்த ஆண்களில் இருபதில் ஒருவர்தான் பெண்ணை சமமாக மதிக்கிறார். மீதமுள்ளவர்கள், தி.இ.நயன் படத்துல வர ஜீ.வி மாதிரி கேரக்டர்கள். ஆனால் பீப் பாட்டுக்கெல்லாம் பொங்கியவர்கள், இந்தப் படத்தை கொண்டாடினார்கள் கவனித்தீர்களா? பிரச்சனை கெட்ட வார்த்தைதான். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு ‘ஒழுக்கமான’ சமூகத்தில் வாழ்வதாக ஒரு மித்தை கொடுக்க விரும்பினர். மற்றபடி திரிஷா இல்லன்னா நயன் தாராவில் வரும் ஹீரோ சொல்லும் கருத்துக்கள்தான் இன்றைய சராசரி இளைஞன் ஒருவனின் (100 இல் 90) கருத்து.

இவர்கள் இப்படி இருக்க பெற்றோர், சுற்றம், வளர்ப்பு, கல்லூரி, நட்பு (எந்த கல்லூரில டா ஒழுங்கா இரு பாலருக்கும் நியாயமா சட்டம் வெச்சீங்க?), பெண்களுடன் பழக, அவர்கள் உலகம் அறிய வாய்ப்பில்லாமை என பல காரணம் இருக்கலாம். இதற்கான நீண்ட கால தீர்வு கல்வி, கல்வி கற்கும் இடங்களில் ஆண்-பெண் பேதமில்லாமல் பழகுதல் – சமூக அறிவை கல்வி வாயிலாக கற்றல் – சுய ஜாதி மறுப்பு – தானே யோசித்து செய்யும் திருமணம் என பலபாற்பட்டது. ஆனால், தற்போதைய ஒரே ஒற்றுமை இந்த மொன்னைகளை திருத்த முடியாது என்பதுதான். தன்னைப்போல பலர்  இருப்பது மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தி மேன்மேலும் இவர்கள் உளற வழி செய்யும்.

என்னதான் செய்யணும் என்கிறீர்களா? சிம்ப்பிள். நீங்கள் உங்கள் விருப்பம், வாழ்க்கைக்கு மதிப்பு கொடுப்பவரெனில் உங்கள் அலைவரிசையை ஒத்ததொரு நட்பு வட்டம், காதலன்/துணை உருவாக்கிக் கொள்ளுங்கள். வேலை போன்ற லௌகீக விசயங்களால் பேச வேண்டி வரும் நபர் இப்படி லூசானால், கருத்தை பதிவு செய்துவிட்டு அகன்று விடுங்கள். பல பெண்களால் நிச்சயம் இத்தளைகளை விட்டு வெளியேற முடியும். All you need to do is ignore the majority, which might sadly include your dad mom aunty and uncle. இது முடியாதவர்கள், கட்டாயத் திருமணத்தில் இருந்தெல்லாம் தப்பிக்க முடியாதோர் உண்டு. ஆனால், சதவிகிதம் குறைவு. நிறைய ஆசை உண்டு, ஆனால் என இழுக்கும் Banglore days நஸ்ரியாக்களே அதிகம்.

பெண்கள் செய்ய வேண்டிய அனைத்திற்கும் ஒரே தடை இந்த சமூகம் அதை அங்கீகரிக்கணும், ஏற்றுக் கொள்ளணும் என்கிற முனைப்புதான். மயிரானுங்க பேசிட்டு போறானுங்க, உங்க வாழ்க்கைல தலையிட்டா செருப்பாலடிங்க. மத்தபடி, இந்த மாதிரி கருத்துக்களை, Ignore செய்க.

எனக்கு சில பெண்களைத் தெரியும் இப்படியான ஆண்களை பெற்றோருக்ககவோ, சில சமயம் காதலித்துவிட்டோமெனவோ கட்டி வாழ்ந்து, ஆசைகளை பூட்டி செத்துப் போகும் எஸ்.ராவின் ஜி.தேவிகாக்கள். என் வரையில், உங்கள் உரிமைக்காக நீங்கள் உன் comfort zoneஐ, உங்கள் சுற்றத்தை தூக்கி எறிய முடியாதெனில், You deserve a shitty life.

குறிப்பு :

இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள தீர்வு இதை இணையத்தில் படிக்குமளவு, இது சென்று சேருமளவு உள்ள ஆடியன்ஸுக்கு. இதைத் தவிர ஜாதி ரீதியில் கொடுமை அனுபவிக்கும் தலித் பெண்கள், விளிம்பு நிலை மக்களின் பிரச்சனைகளும் தீர்வுகளும் வேறு தளத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை.

Related Posts