இதழ்கள் இளைஞர் முழக்கம்

அவசர காலத்தை நோக்கி இந்தியா – ராகுல் (ஆராய்ச்சி மாணவர், ஜேஎன்யூ)

அவசர காலத்தை நோக்கி இந்தியா –  ராகுல் (ஆராய்ச்சி மாணவர், ஜேஎன்யூ)

                கடந்த இரண்டு வாரங்களாக நாட்டினுடைய அனைத்து ஊடங்கங்களும், அதன் விளைவாக மக்களும் ஒரு பல்கலைக்கழகத்திற்குள் சுருக்கப் பட்டிருக்கிறார்கள். இதற்கான  காரணம் என்ன என்பதை அறிய விழையும் பொழுது  இன்று இந்த நாட்டின் ஆளும் அரசும் கட்சியும் இந்த நாட்டை எங்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான விடை அடங்கி இருக்கிறது என்பதும் புரிய வரும். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இடது சாரி மாணவர் அமைப்புகளின் கோட்டை என்ற நிலை மாறி இந்திய அரசியல் களத்தில் பாசிச தாக்குதலினுடைய போர்க்களமாக மாறி  இருக்கிறது. இந்த தாக்குதலினை இங்கு  நடந்த சம்பவங்களினூடே தேசிய அரசியல் சூழலில் பொருத்தி விடை காண்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

அப்சல் குரு தூக்கில் இடப்பட்ட 2013 பிப் 9 ஆம் நாளின் 3ஆம் நினைவு ஆண்டாக 10 மாணவர்களின் ஒருங்கிணைப்பில் “அஞ்சல் அலுவலகமற்ற தேசம்” என்ற தலைப்பில் அப்சல் குரு மற்றும் மக்பூல் பட் ஆகிய இருவருக்கும் அளிக்கப் பட்ட மரண தண்டனையை எதிர்த்து நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டு அனுமதியும் பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் சமீபத்தில் னுளுரு எனும் மாவோயிஸ்ட் ஆதரவு மாணவ அமைப்பிலிருந்து பிரிந்து வந்தவர்கள்.  இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க வந்த பெரும்பான்மையானோர்  டில்லி வாழ் காஷ்மீர் மாணவர்கள். முதலில் அனுமதி அளித்த நிர்வாகம் பிறகு ஹக்ஷஏஞ இன் குறுக்கீடால் அனுமதியை ரத்து செய்தது. இப்படி அனுமதி கொடுப்பதும் பின்பு ரத்து செய்வதும், அதை மீறி நிகழ்ச்சிகளை நடத்துவதும் சமீபகால துசூரு அரசியலின் நடைமுறைகளில் ஒன்றாக மாறிவிட்டது. பிரச்சனையை உருவாக்கி அதை ஒளிபரப்பி அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு ஜீ நியூஸ் போன்ற பிஜேபி மீடியாக்களை மதியம் மூன்று மணிக்கே வளாகத்தில் கொண்டு  வந்து சேர்த்தனர் ஹக்ஷஏஞ யினர். ஹக்ஷஏஞ உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கு எதிராகவும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராகவும், அவதூறாக முழக்கம் எழுப்பவும் ஒருங்கிணைப்பாளர்கள் மற்ற இடதுசாரி மாணவர் அமைப்பினரை தொடர்புகொண்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் கருத்து சுதந்திரத்தை நிலை நாட்டவும் ஹக்ஷஏஞ ஆல் நேரக் கூடிய வன்முறையை தவிர்க்கவும் அனைத்து இடதுசாரி மாணவர் அமைப்பினரும் மாணவர் சங்க பிரதிநிதிகளும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். மாணவர் சங்கத் தலைவர் என்ற பொறுப்புணர்வோடு கன்ஹையா குமார் இந்த நிகழ்ச்சியை நடத்த உறுதுணை நிற்கவும் ஹக்ஷஏஞ  யினரை சாடவும் செய்தார். இதன் பிறகு ஹக்ஷஏஞ யால் இந்த நிகழ்ச்சி நடத்த முடியாமல் போக ஹக்ஷஏஞ யை கண்டிக்கும் விதமாக ஊர்வலமும் நடைபெற்றது.  உடனுக்குடன் இது மீடியாவில் பரப்பப்பட்டு மொத்த துசூரு பல்கலைக்கழகத்திற்கு எதிராக ஒரும் பெரும் சதியே வடிவமைக்கப்பட்டது. ஹக்ஷஏஞ யை எச்சரிக்கும் கன்ஹையாவின் பேச்சும் முழக்கங்களும் தேசதுரோக குற்றங்களாக திரிக்கப்பட்டன. காஷ்மீரி மாணவர்கள் கொடுத்த முழக்கங்கள் கன்ஹையாவின் வீடியோவில் பொருத்தப்பட்டன. ” விடுதலை கேட்கிறோம்; பசியில் இருந்து, விடுதலை; நிலவுடைமையில் இருந்து விடுதலை; பார்ப்பனியதிலிருந்து விடுதலை; ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை; கேரளா கேட்கிறது விடுதலை, தமிழகம் கேட்கிறது விடுதலை, (இதன் தொடர்ச்சியாக) காஷ்மீர் கேட்கிறது விடுதலை”  போன்ற முழக்கங்கள் கூட காஷ்மீர் பிரிவினைவாத முழக்கங்களாக திரிக்கப்பட்டன. இந்தியா முழுதும் இந்த திரிபுகள் உண்மைகளாக பரப்பப்பட்டன.

அடுத்த இரு தினங்களில் மக்கள் உணர்வுகள் தூண்டப்பட்டன. இச்சம்பவங்களை கண்டிக்கும் வகையாக 11 ஆம் தேதி நிர்வாகத்தின் முன்பாக மாணவர் போராட்டம் நடந்தது. (இங்கு கன்ஹையா நடத்திய உரை பல மொழிகளில் இப்போது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது). தேர்ந்த பேச்சாளரான கன்ஹையா அரசியல் கேள்விகளை தொடுத்து விட்டார். அடுத்த நாள் கன்ஹையா பல்கலைக்கழக  வளாகத்திற்குள்ளேயே போலிசாரால் கைது செய்யபட்டார். புதிதாக நியமனம் செய்யப்பட்ட துணை வேந்தர் வளாகத்திற்குள் யாரை வேண்டுமானாலும் கைது செய்ய அனுமதி அளித்தார். போலிசாரின் வேட்டையை அறிந்த இடதுசாரி மாணவர்த் தலைவர்கள் அனைவரும் தலைமறைவாகச் சென்றனர். சட்டவுன் துசூரு (துசூரு வை இழுத்து மூடு) எனும் பேச்சு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பூதாகரமாக பரப்பப்பட்டன. காவிப்படைகள் பல்கலைக்கழக வாயிலில் கூட்டங்களும், கூச்சல்களும் போட்டன. அப்சல் குரு தூக்கிலேற்றப்பட்ட பிப் 9, கடந்த மூன்று வருடங்களாக நடந்து வரும் வாடிக்கையான நிகழ்ச்சி திட்டமிட்டே ஹிந்துத்துவா தேசியவாதத்தின் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

டில்லி நகரம் முழுதும் மக்கள் மத்தியில் துசூரு பயங்கரவாதிகள், அப்சல் குரு ஆதரவாளர்கள் என்ற பிம்பம் எழுப்பப்பட்டது. துசூரு மாணவர்கள் எங்கு சென்றாலும் தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர். முக்கியமாக இந்த ஆளும் கட்சி அரசின் சூழ்ச்சிக்கு பெருவாரியான ஹிந்தி  ஊடகங்கள் முக்கியமாக ஜீ நியூஸ், இந்தியா டிவி போன்றவையும், டைம்ஸ் நவ் போன்ற ஆங்கில ஊடகங்களும் போட்டி போட்டு தேசத்துரோக வழக்கை ஸ்டுடியோக்களிலேயே நடத்தி முடித்து விசாரணைக்கு முன்பாகவே தீர்ப்பையும் வழங்கி விட்டார்கள். இதை மீடியா தேசபக்தி என்றெல்லாம் தவறாக புரிந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஏற்கனவே எழுதி வைத்திருந்த திரைக்கதையை கச்சிதமாக ஒவ்வொரு நாளும் அரங்கேற்றினர் என்றே கூற வேண்டும். ஒவ்வொரு நாளும் கிடைத்த வீடியோக்களில் ஒவ்வொன்றிலும் தெரியும் உருவங்களை ஒரு ஆதாரமும் சேகரிக்காமல் வாய்க்கு வந்தார் போல் கதைகள் புனையப்பட்டன. மாவோயிஸ்ட் ஆதரவாளர் உமர் காலித் அவர் பெயர் ஒன்றின் காரணமாகவே இஸ்லாமிய தீவிரவாதியாக புனையப்பட்டார். பாஸ்போர்ட் கூட இல்லாத உமர் 2 முறை பாகிஸ்தான் சென்றதாகவும், ஜெயிஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவராகவும் சித்தரிக்கப்பட்டார். நா கூசாமல் ஊடக போர்வை போர்த்திய காவி கை கூலிகள் இஸ்லாமியர் விரோத நஞ்சை உமிழ்ந்தனர். மக்கள் வரிப்பணத்தில் தேசவிரோதம என்று குளுகுளு அறைகளில் கோட்டு போட்டு அமர்ந்து உயர், மத்திய வர்க்க உணர்வுகளை உசுப்பி விட்டனர். தேசிய உள்துறை அமைச்சர் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய ஹபிஸ் சயீத் பேரில் உள்ள ஒரு போலி ட்விட்டர் அக்கௌன்ட்டில் வந்த செய்தியை  உளவுத்துறை ஆதாரமாக அறிவித்தது உண்மையில் கீழ்த்தரமான செயல் என்றே கூற வேண்டும். ஊடகங்கள் ஒருபுறம் இப்படி இருக்க சோசியல் மீடியா மூலமாக தாக்குதல்கள் தொடுக்க பட்டன. மாணவர் பேரவைத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக விவாதத்தில் பங்கேற்ற கன்ஹையாவின் புகைப்படத்தை போட்டோஷாப்  மூலம் பயங்கரவாத முகாம் ஒன்றில் அவர் பேசுவது போன்ற படங்கள் பரப்பப்பட்டன.

இந்த சூழலில் தான் மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் எதிரான தாக்குதல்களை கண்டித்து ஆசிரியர்கள் சங்கம் களத்தில் இறங்கியது. தினம் தினம் வளர்ந்து வரும் ஊடகங்களின் அவதூறுகளையும், ஆளும் கட்சியின் சூழ்ச்சியையும் புரிந்துகொண்ட மாணவர் சமூகம் ஒன்று சேரத் துவங்கியது. மாணவர்கள் தினமும் நிர்வாக வளாகம் முன் கூடி முழக்கங்கள் எழுப்பத் துவங்கினர். மாணவர்களுக்கு எதிரான இந்த அடக்குமுறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, ஊஞஐ தேசிய தலைவர் டி.ராஜா, காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவையும் அளித்தனர். இடதுசாரிகளுக்கும் ஜனநாயக மாணவர் அமைப்பினருக்கும் எதிரான பிரச்சாரம் இந்த வேளையில் நாடு முழுவதும் துசூரு விற்கு எதிரான தாக்குதலாக பரிணமித்தது. பெற்றோர்களிடம் இருந்தும், நண்பர்களிடம் இருந்தும் தொடர்ந்து போன் கால் கள் வந்த வண்ணம் இருந்தன. துசூரு  வின் முத்திரை பதித்த இந்த பல்கலைக்கழக மாணவர்கள் பெருமையுடன் அணிந்திருந்த கோட்டை(கோட்) வெளியில் போட்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. மனித சங்கிலிக்கான அறைகூவலில் சுமார் 4000 மாணவர்களும் துசூரு ஆதரவாளர்களும் வளாகம் முழுவதுமாக அணிவகுத்தார்கள். மாணவர் பேரவை மையத் தலைவர்கள் தலைமறைவான சூழலில் அவர்களுக்கு அடுத்த தலைமையான ஸ்கூல் ஒருங்கிணைப்பாளர்களும் எஸ்.எப்.ஐ தோழர்களான  சதரூபா சக்ரவர்த்தியும், அமல் புல்லார்காட்டும் தலைமையேற்று கூட்டங்களை நடத்தத் துவங்கினர். ஆசிரியர்களாலும், மாணவர் சங்கத்தாலும் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. தினமும் நிர்வாக வளாகம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடும் இடமாகவும், போராட்டக் களமாகவும் மாற்றப்படுகிறது.  இதற்கிடையே தோழர் கன்ஹையா இரண்டு நாட்களும் பாட்டியாலா கீழ் நீதிமன்றத்தில் வக்கீல் கோட் அணிந்த காவி குண்டர்களால் தாக்கப்படுகிறார். அவருடன் அவருக்கு ஆதரவு அளிக்க வந்த ஆசிரியர்களும், பத்திரிகையாளர்களும், ஹஐளுகு அமைப்பின் அகில இந்திய தலைவர் விஸ்வஜித்தும், உயீi ஊழியரும் தாக்கப் படுகின்றனர். வெறும் 20 பேர் கொண்ட ஒரு மாணவர் கூட்டம் எழுப்பிய முழக்கத்திற்கு ஒட்டு மொத்த பல்கலைக்கழகத்தையும் அதன் மாணவர்களையும் தேசத்துரோகிகள் என முத்திரை குத்தும் முயற்சி அரசின் உண்மையான நோக்கத்தையும், ஒரு பல்கலைக்கழகத்தைப் பார்த்து ஒரு அரசாங்கம் எவ்வளவு பயப்படுகின்றது என்பதையும் வெட்ட வெளிச்சம் ஆக்கின. அனைத்தையும் மத்திய அரசுக்கு கீழ் இயங்கும் தில்லி போலிஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டே குண்டர்களுக்கு உதவி புரிந்தது. இதை போலிஸ் ஆணையர் பஸ்ஸி தொடர்ந்து நியாயப்படுத்தவும் செய்தார். பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் ஆளும் கட்சியின், சுளுளு சின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தவும் ஊடகங்களின் பெரும் பகுதி அரசுக்கு எதிராக திரும்பத் தொடங்குகின்றன. பெருகி வரும் ஆதரவின் வெளிப்பாடாக டில்லி நகரில் சுமார் 10000 ஆர்வலர் பங்கெடுத்த நாடாளுமன்றம் நோக்கிய  பேரணி நிறைவேறியது. இவ்வனைத்து போராட்டங்களிலும் அளவுக்கதிகமான அழுத்தங்கள் இருந்தும் மாணவர் சமூகம் ஒற்றுமையோடும் பெரும் பொறுமையோடும் தங்களைத் தாங்களே வழி நடத்தி வருகிறது.    இவ்வளவு பெரிய தாக்குதலை ஒரு பல்கலைக்கழகம் முழுமையின் மீதும் தொடுக்க இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, துசூரு உருவான காலம் தொட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு எதிராக புரிந்து வரும் கருத்து மற்றும் மாணவர் அரசியல். இரண்டாவது நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரசாங்க விரோத மக்கள் உணர்வை தங்கள் கருத்தியல் மற்றும் அரசியலின் பால் திசைதிருப்புவது. இவ்விரு நோக்கங்களையும் ஒரே பிரசாரத்தின் மூலமாக அடைவதே சுளுளு ஹிந்துத்துவா அரசின் நோக்கமாகும்.

1969 இல் உருவான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் இருந்தே இடது சாரி மாணவர் அரசியலின் களமாக திகழ்கிறது. கலந்துரையாடல்களும் விவாதங்களும் மற்றும் பிரச்சாரங்கள்  மூலமாகவே இங்கு மாணவர் அரசியல் நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துகளையும் முன்வைக்க ஏதுவாக இங்கு ஒரு ஜனநாயக சூழல் நிலவுகிறது. மாணவர் சேர்க்கையில் இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் சட்டபூர்வமாக  கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இரவு பகலென பாராமல் பெண்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியில் இறங்கி நடக்க எந்த ஒரு தடையும் இல்லாத வளாகம். இரவு இரண்டரை மணிக்கு கூட தேனீர் கடைகளில் அமர்ந்து ஆண்களும் பெண்களும் கலந்துரையாடுவதை இங்கு காணலாம். மாணவர்களோடு மிகச்சிறந்த வரலாற்றாசிரியர்களையும், சமூக அறிவியலாளர்களையும் ஆசிரியர்களாகக் கொண்ட நிறுவனமாக துசூரு திகழ்கிறது. மாற்று அரசியலை முன்வைக்கும் அனைத்து அரசியல் நீரோட்டங்களுக்கும் கருத்தியல் ரீதியான ஆய்வகமாக இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. ஆசிரியர் மாணவர் என்று பிரிவினை பாராமல் பழகும் ஏராளமான உறவுகளை கொண்ட கல்விச்சமூகமாகவும் துசூரு திகழ்கிறது.

ஆனால் இந்த கலாசாரம் பல காலங்களாகவே வலதுசாரி சக்திகளை பெரும் கோபத்திற்கு ஆளாக்கி வந்திருக்கிறது. ஒரு பாஜக தலைவரும் வர தைரியம் காட்டாத ஒரு கோட்டையாக திகழ்கிறது. வந்தால் கருப்பு கொடிகளுக்கும், முழக்கங்களுக்கும், கேள்விக்கணைகளுக்கும்  ஆளாக வேண்டி வரும் என்ற காரணத்தினாலேயே இங்கே வர எந்த பாஜக தலைவர்களும் முனைவதில்லை. இதனோடு  ஹிந்துத்துவா மத வெறிக்கெதிரான சக்திவாய்ந்த கருத்தியல் தளமாகவும் துசூரு நிலைகொள்கிறது. சுளுளு வரலாற்று திரிபுகளை தோலுரித்து காட்டும் வரலாற்றாசிரியர்களான ரொமிலா தாபர், தணிகா  சர்க்கார், பிபன் சந்திர, கே என் பணிக்கர் போன்றவர்களும், இடதுசாரி பொருளாதார அறிஞர்களான பிரபாத் பட்நாயக், உட்சா பட்நாயக், ஜயதி கோஷ், சி பி சந்திரசேகர் போன்றோரும்  சமூக நீதி அரசியல் ஆய்வாளர்களான விவேக் குமார்,  ஜோயா ஹசன், கோபால் குரு போன்றவர்களும் இந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் ஆவர். இப்படி கள அரசியலிலும், கருத்து அரசியலிலும் தொடர்ந்து வலது சாரிகளுக்கு எதிரான நிலை எடுத்து வருவதால்  துசூரு இவர்களின் தாக்குதல் திட்டங்களுக்கு கடந்த பல காலங்களாகவே இரையாகி வருகிறது. துசூரு தேசத்துரோகிகளின் கூடாரம் என பல முறை இதற்கு முன்பும் சுளுளு அமைப்பினரால் முத்திரை குத்தப்பட்டு இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் சுளுளு இதழான பாஞ்சஜன்ய த்தில் துசூரு விற்கு எதிராக ஒரு கட்டுரையே எழுதப்பட்டது. இதே போன்ற ஒரு கட்டுரை பயனியர் ஆங்கில நாளிதழிலும் வெளியாகி இருந்தது. இப்படி நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் தாக்குதல்களின் நீட்சியாகவே இந்த சமீபத்திய ஒடுக்குமுறையையும் காணவேண்டும்.

இந்த தாக்குதலுக்கு வேறு இரண்டு சமீப காரணங்களும் உள்ளன. கடந்த மூன்று மாதங்களாக துசூரு மாணவர்களும் பல்வேறு மத்திய பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து ஆக்கு பை ருழுஊ எனும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய பலகலைக்கழக மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவித்தொகையை பெறுவதற்கான பயனாளிகளுக்கான  எண்ணிக்கையை குறைக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக பல்கலைக் கழக மானியக் குழு வளாகத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி இந்த அரசின் உயர் கல்வி தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் சவால் விடுத்தனர். இந்த போராட்டங்களை பல முறை தடியடியும் கண்ணீர் புகை குண்டுகளும் வீசி ஒடுக்க நினைத்தும் அரசால் கட்டு படுத்த முடியாமல் போனது. தற்போதைக்கு அந்த முடிவை தள்ளிப் போட மாணவர் போராட்டங்களால் முடிந்தது. இப்போராட்டங்களை தலைமை தாங்குவதில் துசூரு மாணவர் இயக்கம் பெரும் பங்காற்றி இருக்கிறது. இந்த போராட்டம் நிலுவையில் உள்ள நிலையில் தான் ஹைதராபாத் மத்திய பலகலை கழக தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் நிறுவனக்கொலையும் அதை சுற்றி அதற்கு காரணமான பாஜக அரசுக்கு எதிரான மாணவர் இயக்கமும் உருவாகியது. இவ்வியக்கத்தின் துஹஊ  உறுப்பினர்களாகவும் தில்லி யில் போராட்டங்கள் நடத்துவதிலும் துசூரு மாணவர்கள் பெரும் பங்காற்றினர்.

இப்போராட்டம் அனைத்து தரப்பு தலித் ஆதரவாளர்கள் மற்றும் பலகலைக்கழக மாணவர்களை ஒருங்கிணைத்து நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் பொழுது தில்லியில் பெரும் பேரணியும் போராட்டமும்  நடத்த தீர்மானிக்கப் பட்ட நிலையில் தான் துசூரு விற்கு எதிரான இந்த தாக்குதல் தொடுக்க பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் இயக்கம் மீதான இந்த தாக்குதல் ஹிந்துத்துவா சக்திகளுக்கு அவர்களின் நாஜி தேசிய கருத்தியலை உசுப்பவும் அவர்களின் அணியினரை களத்தில் இறக்கவும் உருவாக்கப்பட்ட திட்டம் மட்டுமே. இதன் விளைச்சல்களை வரும் கால அரசியலில் அறுவடை செய்ய நிலத்தை உழுது வைக்க  சமூக மனதில் தேசியம் மற்றும் கருத்து சுதந்திரம் குறித்த புதிய பாசிசத்தை நோக்கிய புரிதல்களை விதைக்க முயற்சித்துள்ளனர்.  இந்த சதியில் ஊடகங்கள் கோயபல்சின் பாத்திரத்தை கச்சிதமாக நிறைவேற்றி வருகிறன்றன. சுருக்கத்தில் இப்பொழுது துசூரு தேசிய அரசியலின் மைய நீரோட்டத்தில் பலவந்தமாக தூக்கி எறியப் பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் பாசிசத்திற்கும் ஜனநாயக சக்திகளுக்கும் இடையிலான இந்த அரசியல் போரில் இன்னொரு களமாக இந்த பல்கலைக்கழகம் மாற்றபட்டுள்ளது. கன்ஹையா மற்றும் ஏனைய மாணவர்களின் ஜாமீனோடு, விடுதலையோடு கூட இந்த தாக்குதல் நின்று விடாது. ஒரு நீண்ட தொடர் போராட்டங்களுக்கு துசூரு மாணவர் சமூகம் தயார் ஆகி வருகிறது. ரோஹித் வெமுலாவை மீட்டெடுப்பத்தின் மூலமாகவும் இந்த அரசின் பொருளாதார சமூக பாசிச கொள்கைக்கு எதிராக மக்களை அணி திரட்டி இந்த அரசின் பாசிச நடவடிக்கைகளை தோற்கடிப்பதே இந்திய ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

Related Posts