பிற

அறிவியலுக்கு எதிரான தாக்குதல்

அறிவியல் என்றாலே மதவாதிகளுக்கு கிலி எடுக்கும்.காரணம் ஏன் எதற்கு என கேள்விகளை அடிப்படையில் அறிவியல் தான் உருவாக்கியது. மதங்களின் வேரையே ஆட்டம் காண வைக்கும் திறன் அறிவியலுக்கு மட்டுமே உண்டு. கற்பனைகட்டுகதைகளை புரட்டி போட்டு மனித வாழ்வின் உயர்வுக்கு வித்திட்ட அறிவியலின் உணமை வாதங்களுக்கு பதில் பேச முடியாமல் முச்சந்தியில் நின்று தோற்று போன மதங்கள் தங்களின் தளங்களை காப்பாற்றி கொள்ள பல்வேறு முயற்சிகளில் அன்றாடம் ஈடுபடுகின்றன. மதத்தை அரசியல் பிழைப்புக்காக பயன்படுத்தும் பி.ஜே.பி க்கு அறிவியல் ,விஞ்ஞானம் வளர்வது தங்கள் தத்துவத்துக்கு எதிரானது என்பது தெரியும். அதனால் தான் தங்களின் வேத கால கதைகளை அவ்வப்போது திரித்து விடுவார்கள்.

வானூர்திக்கு முன்னோடி புஷ்பக விமானம் என மோடி சொன்னார். மருத்துவத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறைக்கு முன்னோடி விநாயகர் என்றார். அப்படி அவர் பேசிய போது பல விஞ்ஞானிகள் பிரதமர் இப்படி பேசக்க்கூடாது, அறிவியல் முரண் என சொன்னார்கள். அப்போது கூட அரசியல் கட்சிகளில் இட்து சாரிகளை தவிர யாரும் விமர்சிக்க வில்லை. மார்க்சிஸ்ட் கட்சி இப்படி பிரதமர் பேசுவதில் உள்நோக்கமும் உள்ளார்ந்த அரசியலும் மறைந்துள்ளது, அது நம்மை பழமைவாத்த்திற்கு இட்டு செல்லும் என கோடிட்டு காட்டியது. யாரும் அதை பெரிதாக பேசவில்லை. ஆனாலும் சத்தமில்லாமல் தன்னுடைய மறைமுக அஜெண்டாவின் ஒவ்வொரு புள்ளியையும் சங்பரிவாரத்தின் வழிகாட்டுதலில் அற்புதமாக செய்து வருகின்றது. இந்த கட்டுரை அதை தான் சொல்ல போகின்றது.

அறிவியலை குலைக்கும் சித்தாந்தம்…

இந்துத்துவாதிகளுக்கு அறிவியல் என்றாலே எட்டிக்காய் தான்,காரணம் இந்துயிசம் எனும் சொல்லாடலுக்கு பின் ஏராளமான புராணங்களும் இதிகாசங்களும் உள்ளது என்பதும் அனைவரும் அறிந்த்தே…இதில் நல்லொழுக்கம் கற்று தருகிறோம் என்னும் பேரில் கட்டுகதைகள் அதிகம். இதை அனைத்தையும் கேள்வி கேட்டு அதனின் சூட்சுமங்களை அதிகாரத்துடன் சொல்ல கூடிய திறன் அறிவியலுக்கு உண்டு. அதன் நீட்சி தான் மத்திய அறிவியல் விஞ்ஞான அமைச்சகம் தனக்கு கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆய்வகங்கள் இனிமேல் புதிய ஆய்வுகளை மேற்கொள்ள நிதியை தாங்களாகவே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என சொல்லிவிட்ட்து.

இதற்கும் சப்பை கட்ட ஒரு உப்பு பெறாத காரணத்தை அரசு தெரிவிக்கின்றது. அதாவது ஆய்வகங்கள் பொறுப்போடு செயல்படுவது தேவையாம். ஆனால் அது தான் காரணமா? இல்லவே இல்லை..   இப்படி செய்வது ஒரு வளரும் நாட்டின் வளர்ச்சியை முற்றிலுமாக முடக்கும் வேலை. ஏன் அதை அவசரமாக மோடி அரசு செய்கிறது….வேறென்ன….நாக்பூரின் வழிகாட்டுதல் தான் .

டேராடூனில் சில மாதங்களுக்கு ”சிந்தன் சிவிர்” ( சிந்தனை கருத்தரங்கம்) கூட்ட்த்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது .இம்முன்மொழிவை ஆர்.எஸ்.எஸ் தான் யோசனையாக பரிந்துரைத்துள்ளது.

நிதியை தாங்களே உருவாக்கி கொள்ள வேண்டும் என கூறியது மட்டுமல்லாமல் , அரசின் சமூக மற்றும் பொருளாதார அஜெண்டாவை கணக்கில் வைத்து தான் இம்முடிவு மேற்கொள்ளப்பட்ட்து எனவும் சொல்லிவிட்ட்து. எல்லா நாடுகளுமே தங்கள் நாட்டின் அறிவியல் தொழில் நுட்ப வசதிகளை மேம்படுத்திகொள்ள நிதிகளை தாராளமாக ஒதுக்கும். ஆனால் மோடி அரசு இதிலும் விதிவிலக்கு… ஆனால் நாட்டுக்கு அபாயம்

அறிவியல் கண்டுபிடிப்புகளை முடக்கும் கீழ்தரமான மதவாத அரசியல் இதை விட வேறென்ன இருக்கு….

மதங்கள் கலிலீயோவை, நியூட்டனை, ஐன்ஸ்டனை, எப்படியெல்லாம் நடத்தியது என்பது வரலாறு. ஆனால் காலங்களை கடந்து அவர்களின் அற்புத கண்டுபிடிப்புகளால் தான் இன்று உலகமே இயங்கி வருகின்றது. எந்த கலீலியோவை கிறித்துவம் மறுத்ததோ. அதை மறுதலித்து ஏற்று கொண்டது. அது தான் அறிவியலின் மேன்மை.

ஆனாலும் காவி கூட்டத்தின் அரசியல் என்ன என்பதை இன்னமும் நாம் புரிந்து கொள்ளாமல் இருக்கலாமா?  ஒரு பிற்போக்கு ,சனாதன ,கற்காலத்தை நோக்கி இந்தியாவை அழைத்து செல்லும் வேலை.

உண்மைகள் மறைக்கப்பட…

இந்தியாவில் பல துறைகளில் விவரங்களை சேகரிக்க, உணமை கள நிலைகளை அறிந்து கொள்ள புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, விவரங்களாக தொகுக்கப்பட்டு வெளியிடப்படும். இதை வைத்துக்கொண்டு அரசுகள் மக்கள் நல பணிகளை செய்யும் (நம்புவோமாக) . அப்படிப்பட்ட ஒரு துறை தான் தேசிய ஊட்டசத்து கண்காணிப்பு ஆணையம். இதன் பிரதான பணி மாநில வாரியாக ஊட்டசத்து பெறவேண்டிய கருவுற்ற தாய்மார்கள், குழந்தைகள் எவ்வாறு அதை பெற முடிந்த்து…..அரசின் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்பட்டன, எத்தனை சத மக்களுக்கு கிடைக்கிறது, பாதிக்கப்படவர்கள் பட்டியல் என பல தகவல்களை அளிக்கும். சுருங்க சொன்னால் மத்திய மாநில அரசுகளின் லட்சணம் தெரிய வரும்.

கடந்த ஐக்கிய முற்போக்கு ஆட்சி காலத்தில் மன்மோகன் சிங் தன் கடைசி காலத்தில் இந்தியாவில் குழந்தைகளுக்கு போதிய ஊட்டசத்து கிடைக்கவில்லை , அதனாலேயே அந்த பச்சிளம் குழந்தைகள் இறக்கின்றன என எண்ணும் போது வருந்துகிறேன் என சொன்னார்.

அதன் பின் தேர்தல் பரப்புரைகளின் போது மோடி மன்மோகன் சொன்னதை மையமாக கொண்டு காங்கிரஸ் அரசின் கொள்கைகளை சாடினார். வோட்டும் வாங்கினார். ஆட்சியிலும் அமர்ந்தார்…. ஆனால் இருவருக்கும் கொள்கை வேறுபாடு இல்லையே….

மன்மோகன் ஆட்சி காலத்தில் இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் எப்படியெல்லாம் உணமை நிலை இருந்த்து எனபதை அறிந்து கொள்ள முடிந்த்து…..

மோடி வித்தியாசமானவர் தானே…..தெரிந்தால் தானே அரசியல் கட்சிகள், மக்கள் நல அமைப்புகள் அவர் அரசை விமர்சிப்பார்கள்….. ஒட்டுமொத்தமாக மூடிவிட்டால்….

அந்த வேலையை தான் இப்போது மோடி அரசு தெளிவாக செய்துள்ளது. ஊட்டசத்து கண்காணிப்பு ஆணையத்துக்கு அரசு இனிமேல் நிதி உதவி செய்யாது. வாய்ப்பிருந்தால் அவர்களே நிதியை உருவாக்கி கொள்ளட்டும். என்ன கொடுமை….இதில் அரசியலும் இல்லாமல் இல்லை.. பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில் பெரும்பான்மையாக ஊட்டசத்து பிரச்சினை அதிகமாகவே உள்ளது.குறிப்பாக குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இதனால் பெரும் பாதிப்புகளும் உண்டு. ஆணையத்தை மூடிவிட்டால் இதுவும் மறைக்கப்படும்.

இந்த நாட்டின் காவிமயமாக்கலுக்கு எதையெல்லாம் நாம் இரையாக்குகிறோம் பாருங்கள்…

ஏற்கெனவே பல புதிய அறிவியல் திட்டங்களுக்கு தனியார் பங்கேற்பை எதிர்பார்கிறது மத்திய அரசு..லாவகமாக அரசு தன் பங்கிலிருந்து நழுவிக்கொண்டு மற்றவர்க்கு கதவுகளை திறந்து விடுகின்றது. அறிவியல் துறையில் நாம் எவ்வாறு பயணித்துகொண்டிருக்கிறோம் எனப்தை ஏனைய உலக நாடுகள் நம்மை உன்னிப்பாக பின்பற்றுகிறது. இந்த வேளையில் இப்படி மோடி அரசு அறிவிப்பது நாட்டுக்கு நல்லதல்ல….

மோடி அரசு பதவி ஏற்ற நாள் முதல் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வில் பெரும் அக்கறை காட்டவில்லை என புகழ் பெற்ற மருத்துவ இதழான “ லான்சட்” டின் (THE LANCET) முதன்மை ஆசிரியர் ரிச்சர்ட் மார்டன் கூறியுள்ளது கவனிக்கதக்கது. மோடி இதை கேட்க மாட்டார்…அவரென்ன மோகன் பகவத்தா…அல்லது சுரேஷ் பையாஜியா?

அடுத்த ஐந்து ஆண்டுகளில்……

மோடி அரசு ஒரு பக்கம் சங்பரிவாரத்தின் அறிவுரைகளை கேட்டு, நாட்டின் பல நல்ல திட்டங்களை முடக்கலாம். அறிவியலின் வியத்தகு வளர்ச்சிகளை சகல பகுதி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே ஒரு ந்ல்ல அர்சின் திட்டமாக இருக்க வேண்டும் .ஆனால் அதற்கு நேர்மாறாக ஒரு அரசு பயணிக்கிறது .

ஊட்டசத்து கண்காணிப்பு ஆணையத்தின் பணிகளை முடக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட உடனேயே, பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் குழந்தகளுக்கு வழங்கப்படும் முட்டை கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. முட்டை ஒரு அடிப்படையான ச்த்துணவு…அதையும் நிறுத்துகிறது அரசு….காரணம் இனிமேல் மாநில விவரங்களை யார் தொகுக்க போகிறார்கள் எனும் தைரியம் தான்……இது எதிர்காலத்துக்கு நல்லதல்ல…..

பொதுவாகவே தங்கள் ஆட்சிக்கு எதிராக ஏதேனும் ஒரு கருத்து அல்லது அவதூறோ பரவும் பட்சத்தில் புள்ளிவிவரங்களை அரசுகள் முடக்கும் அல்லது திசை திருப்பும். இனி அந்த பிரச்சினை பிஜேபி க்கு இல்லை..இந்த நாட்டின் எதிர்கால தலைமுறை எப்படி போனால் என்ன எனும் நிலைக்கு கொள்கை முடிவுகள் ஒவ்வொன்றாக வருகின்றது. இது மேலும் பல ஆபத்துகளை உருவாக்கும். நிதிக்காக தனியாரை அணுகும் போது சுயசார்பை இழக்ககூடும். மதங்கள் எதுவானாலும் அறிவியலை மறுதலிப்பது தான் இயல்பு.

இதெல்லாம் அரசியலாக்கி ஒரு சித்தாந்தம் உருவாக்க நினைக்கும் மதவாதிகளின் எண்ணங்களை அறிவியலால், பகுத்தறிவால் உடைத்தெறிவோம்…..

-சிவகுரு

Related Posts