இதழ்கள் இளைஞர் முழக்கம்

அரசியலற்றவர்களின் அரசியல் – செல்வராஜ்

சென்னையை உலக தரம் வாய்ந்த ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற போகிறார்களாம் மத்திய அரசு அறிவிக்கிறது. சென்னையில்தான் படித்தவர்கள்யிருக்கிறார்கள், அறிவாளிகள்யிருக்கிறார்கள், கல்வி, வேலை, சுகாதாரம் என அனைத்து வசதியும் இருக்கிறது என்று கிராமத்தில் மக்கள் பேசிகொள்கிறார்கள். அப்படிபட்ட தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில்தான் தங்களுடைய வாக்களிக்கும் கடமையை செய்யாத மக்கள் 40 சதவீதம் பேர். தமிழ்நாட்டில் குறைந்த சதவீதம் வாக்குபதிவான மாவட்டம்.

எப்படியோ தேர்தல் முடிந்துவிட்டது. எப்ப பாரு எங்களுக்கு ஓட்டு போட்டா அதை செய்வோம், இதை செய்வோம் என்று தினமும் வீட்டில் வந்து நிம்மதியா டிவிய கூட பார்க்கவுடாம ஓட்டு கேட்டு தொல்லை செஞ்சிகிட்டுயிருந்தாங்க இந்த கட்சிகாரங்க. இதல தேர்தல் ஆணையம் வேறு 100 சதவீதம் ஓட்டு போடு, போடு என்று அவங்க ஒரு பக்கம். இருந்தாலும் இந்த வாட்டி எல்லாரும் ரொம் ஓவரா பண்ணிட்டாங்கபா. இது ஒரு சாரார் மக்களின் மனநிலை.

தேர்தலில் ஓட்டு போடரதும் போடாததும் எங்க விருப்பம், இதல நீ ஓட்டு போட்டேதான் ஆக வேண்டும் என்று கட்டாயம் எதுக்கு பண்ரீங்க என்று புலம்பி கொண்டே தபால் ஓட்டு போட பஸ்ஸில்யிருந்து இரங்கி சென்றார் ஒரு பொறுப்புள்ள காவல் அதிகாரி. நான் இந்த வாட்டி ஓட்டு போட போகவில்லை, வீட்ல வேலை பாக்கிறதுகே நேரம் சரியா இருந்துச்சு என்று பதில் அளித்தார் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர். ஓட்டு போட்டு என்ன ஆக போகுது அதனால இந்த வாட்டி நான் ஓட்டு போட போவதில்லை,  என்று சொல்லி சென்றார் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞர். இந்த ஜனநாயக குரல்கள் எல்லாம் தேர்தல் காலத்தில் நான் ஆங்காங்கே காண நேர்ந்த காட்சிகள். இதையும் தான்டி இந்தமுறை 73 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர் (2011 சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவோடு குறைவு).

இப்படி அரசியல் மீது மக்களுக்கு இவ்வளவு வெருப்பு வர யார் காரணம்? அரசியல் என்றால் என்னவென்று போதுமான கல்வியை மக்களுக்கு சொல்ல தவறிய தேர்தல் ஆணையமா, அரசாங்கமா, அரசியல் கட்சிகளா, இல்லை அரசியல் தேவையற்றது என்று தவறாக புரிந்து கொண்ட மக்களின் அறியாமையா? தேர்தலில் ஓட்டு போட்டு ஒன்றும் ஆக போவதில்லை என்று வைத்து கொண்டாலும், தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதனால் என்ன மாற்றம் வந்துவிட போகிறது? தேர்தல் ஏன் நடத்த படுகிறது என்ற கேள்வியை நாம் நம்மை பார்த்தே திருப்பி கேட்டால், அதற்கான சரியான பதிலை தேடினால், நாம் இவ்வளவு பொறுப்பற்றவர்களாக் இருக்க மாட்டோம் என்று நம்புகிறேன். வாக்களிப்பது ஒரு தனி மனிதன் சம்பந்தம்பட்டதல்ல, அது தன் கடமையை சரியாக செய்யாத மக்களை மட்டும் பாதிக்காது, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்ககூடியது,

நாம் போதுமான அரசியல் அறிவுயில்லாதது நமக்கு சாதகமாக அமைய போகிறதா என்ன? கண்டிப்பாக இல்லை. இது நம்மை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகளுக்குதான் சாதகமாகயிருக்கும். அதைதான் அவர்களும் விருப்புகிறார்கள். மக்கள் அரசியல் அறிவு பெற்றுவிட்டால் நம்மை தூக்கியெரிந்துவிடுவார்கள் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் அரசியலுக்கும் நம் வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பொது மனநிலையை அவர்கள் பல்வேறு வகையில் உருவாக்குகிறார்கள். இன்றும் நூறு, இரநூறு ரூபாய்க்கு ஓட்டு போடுகிறார்கள் என்றால், அவர்கள் இந்த நூறு ரூபாய்யாவது இந்த அரசியலால் நமக்கு கிடைத்ததே என நினைக்கிறார்கள் போல.

இன்றும், மூன்று வேலை உணவை பார்க்காத மக்கள், கல்வி என்பது கணவிலேயே பார்க்கிற மக்கள், சொந்த வீடு என்பதை கணவிலும் நினைக்க முடியாத மக்கள் இந்த தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டுதான்யிருக்கிறார்கள். இதற்கு காரணம் யார்? நம்மை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் இல்லையா? இதைகூட நம்மால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு நம்மை மாய உலகத்தில் வைத்திருக்கிறார்கள் அரசியல் கட்சிகள். லேப்டாப் கொடுத்தது இந்த அம்மாதானே, டிவி கொடுத்தது கலைஞர்தானே என்று சில ஆயிரம் ரூபாய் பொருளுக்காக நாம் வாக்கை செலுத்துகிறோம். இதெல்லாம் அவர்கள் சொந்த பணத்தில்யிருந்தா மக்கள் கஷ்டபடுகிறார்கள் என்று கொடுத்தார்கள். நாம் ஒரு ரூபாய் தீப்பெட்டி வாங்கினாலும், ஒரு கிலோ அரிசி வாங்கினாலும் அதற்கு இந்த அரசாங்கம் செயல்பட நம்முடைய பங்காக வரி என்ற பெயரில் பணம் செலுத்துகிறோம். கோடி கோடியாக பணம் மக்களை ஏமாற்றி சம்பாதித்துவிட்டு, அரசாங்க சலுகைகளை அனுபவித்துவிட்டு நாட்டை விட்டு ஓடி போகிற பெரும்பணக்காரன் இல்லை.

2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 232 எம்எல்ஏக்களில் 170 நபர்கள் கோடீஸ்வரர்கள். மக்களுக்காகவே தவ வாழ்வு வாழ்கிற தமிழக முதல்வருக்கு பட்டியலில் 3 வது இடம். திருக்குவளை என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த கலைஞருக்கு 4 வது இடம். இந்த உன்னதமான எம்எல்ஏக்கள்தான் நம்மை ஆளபோகிறார்கள்.தேர்தலில் கோடிக்கணக்கான பணம் அதிமுக, திமுக, பாமக, பஜாக ஆகிய கட்சிகளால் செலவு செய்யட்டது. இவர்களுக்கு எங்கிருந்து வந்தது இந்த பணம் என்று யாரும் கேட்பதில்லை. இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே மக்களிடம் வசூல் செய்து கட்சியை நடத்துகிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இல்லாத ஒரு சட்டமன்ற அடுத்த ஐந்தாண்டுகள் தமிழக மக்கள் பார்க்க போகிறார்கள்.

நாங்கள்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூண், நாங்கள் உண்மையை மட்டும்தான் மக்களுக்கு சொல்கிறோம் என்று பெருமைபட்டுகொள்ளும் தொலைகாட்சிகளும், பத்திரிக்கைகளும் இந்த தேர்தலில் என்ன செய்தன. கருத்துகணிப்பு என்ற பெயரில் தங்களுடைய கருத்தை மக்களிடம் திணித்தார்கள். அதிமுக, திமுக என்ற இரு கட்சிகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தால்தான் நம்முடைய தொழில் பாதிக்காது, நமக்கு விளம்பரம் என்ற பெயரில் அதிகமாக பணம் கிடைக்கும் என்ற தங்களுடைய சுயநலத்துகாக பணத்தை வாங்கி கொண்டு அதிமுக, திமுக, ஆகிய கட்சிகளின் செய்தியை மட்டும் மக்களிடம் கொண்டு சென்றார்கள்.

இந்த தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம்  வேறு. அதுனுடைய விதிமுறைகள் பல முரண்பட்டதாகவே இருக்கிறது. தேர்தலில் வேட்பாளர் குறிப்பிட்ட தொகையைதான் செலவு செய்ய வேண்டும், ஆனால் கட்சிகள் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். 51 ஓட்டுகள் வாங்கியவன் வெற்றி பெறுகிறான், ஆனால் 49 ஓட்டுகள் வாங்கியவன் தோல்வி அடைகிறான். அப்பொழுது அந்த 49 ஓட்டுகளுக்குகான பிரதிநிதித்துவம் எங்கே என்றால் பதில் இல்லை. இதில் எனக்கு யாரும் பிடிக்கவில்லை என்று பதிவு செய்ய நோட்டா பட்டண் வேறு. எனக்கு யாரும் பிடிக்கவில்லை என்று நோட்டாவை அழுத்தும் நபர்கள் அந்த தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களை பற்றி தெரிந்துதான் வாக்களிக்கிறார்களா என்றால் பதில் இல்லை என்றே கிடைக்கும்.

ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வருவோம், ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசமாக கொடுக்க நடவடிக்கை எடுப்போம், ஊழல்யில்லா, கூட்டணி ஆட்சியை அமைப்போம் போன்ற முற்போக்கான முழக்கங்களால் பாதிக்ககூடிய சில தனிநபர்கள் ஒன்று சேர்ந்து, திட்டமிட்டு இந்த மக்கள் நலக் கூட்டணியை மக்களிடம்யிருந்து அன்னியபடுத்தியுள்ளனர்.

இப்படிபட்ட முரண்பட்ட, அறசியலற்ற, சுயநலமான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டுயிருக்கிறோம். இந்த நாட்டை நாம் தெரிந்தே தீயவர்களிடம் ஒப்படைக்கிறோம். “அரசியலில் நாம் தலையிடவில்லையென்றால், அது நம் வாழ்க்கையில் தலையிடும்” என்று ரஷ்ய புரட்சியாளர் மாமேதை லெனின் சொன்னார். ஆக நம் வாழ்கையில் தலையிடும் அரசியலில் நாம் தலையிடவோம், நல்லவர்களை நாம் தேடி கண்டுபிடிப்போம். அப்பொழுதுதான் இந்த நாட்டில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கின்ற ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும். அதில் நம்மால் முயன்ற முயற்சியை செய்வோம்.

Related Posts