அய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..

எஸ்.வி. வேணுகோபாலன் …

கடற்கரை மண்ணில் இன்னோர் அப்பாவி சிறுவனின் சடலம்

இன்னும் எத்தனை எத்தனை கோரம்..இன்னும் எத்தனை முறை?
இத்தனைக்கும் நடுவேவேறொரு பக்கம் முகத்தைத் திருப்பியபடி

தத்தம் சுகங்களைத் தேடியபடி,

உலகம் உறங்க முடிவது எப்படி சாத்தியமாகிறது ?….
(ஆயுதங்களாலும், போர்களாலும்)
அச்சத்தையும் பகைமை உணர்ச்சியையும் தூண்டுவதற்குப்

பணத்தை வாரி இறைப்போரே நினைவில் கொள்ளுங்கள்,
அதன் விளைவுகள் அனைத்தும் உங்கள் வாசலுக்கே வந்து சேரும்

அமைதிக்காக செலவழியுங்கள் ஒடுக்குமுறைகளை ஆதரிக்காதீர்கள் உலகத்தின் ஆன்மாவில் ஏற்பட்ட காயங்களை, அதன் பதட்டத்தை கொஞ்சம் ஆற்றுப் படுத்துங்கள்…..
– சாகிப் ஹுசைன்
அந்தக் கடற்கரை என்ன தவறு செய்தது? தயக்கத்தோடும், ஆனால் தீராத ஆசையோடும், கொஞ்சம் அச்சத்தோடும் தத்தித் தத்தி வந்து நிற்கும் ஒரு குழந்தையின் பிஞ்சுப் பாதங்களை வாரி வாரித் தனது கரங்களால் முத்தமிட்டே தனது ஜென்மத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அந்தக் கடல் அலை கள் என்ன பாவம் செய்திருக்கக் கூடும் – செல்லம் கொஞ்ச வேண்டிய குழந்தையின் மரணப் போர்வையாக உருவெடுக்க நேர்ந்ததற்கு!
அய்லான் குர்தி இப்போது உலக றிந்த பெயர்… ஆனால் அவனுக் காகக் கண்ணீர் சிந்த இந்த உல கிற்கு என்ன தகுதி இருக்கிறது? உண்மையில் கணக்கு வைத்து அழத்தொடங்கினால், கடந்த சில பத்தாண்டுகளில் இப்படி ஈவிரக்க மின்றி காவு வாங்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளுக்காக மட்டுமே சிந்து வதற்கு பூவுலகின் கடல்கள் அனைத் திலும் ததும்பும் உப்பு நீர் மொத்தம் சேர்த்தாலும் காணுமா? போர்களை ரசித்து, போர்களை சுவாசித்து, போர் களை ருசித்து, போர்களைத் தின்று தனது உடல் கொழுத்துத் திரிந்து கொண்டிருக்கும் ஆதிக்கவெறியின் பலி பீடத்தில் ஒன்றா இரண்டா அய் லான் குர்திகள்? டாலரின் மதிப்பு பெருக்கம், தங்கத்தின் திரட்சி, தக தகக்கும் எண்ணெய் வயல்கள் இவற்றுக்கான பேராசையின் மதில் சுவர்களின் கீழ் புதையுண்டு கிடக் கிறது மனிதம்.
சிரியா நாட்டின் உள்நாட்டுப் போரில் கடந்த நான்காண்டுகளில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடக்கக் கூடும் என்று சொல்லப்படுகிறது. சுமார் 40 லட்சம் மக்கள் அகதிகளாகி விட்ட னர். சிரியாவில் ஆட்சியாளர்க்கு எதிராகப் புறப்பட்ட எதிர்ப்பலைக்கு அரேபிய வசந்தம் என்று அழைக்கப் படும் எகிப்து-லிபியா-துனிசியா என அரபு நாடுகள் பலவற்றில் கொந்த ளித்து எழுந்த போராட்டங்களுக்கான அதே வயது.  2011இல் தொடங்கிய இந்த எதிர்ப்பலைகள் அரபு நாடு களில் ஒரு ஜனநாயக உருக்கொள் ளாமல் சிதறிப் போனதற்கு இஸ் லாமிய அடிப்படைவாத அரசியல் ஒரு பெரிய காரணம். எகிப்தில் மட்டு மல்ல, சிரியாவிலும் அதன் பிரதிபலிப் புகள் உண்டு.
மேற்கு ஆசியாவில் புவியியல்-அரசியல் விளையாட்டில் ஈடுபட்டிருக் கும் ஆதிக்க சக்திகளுக்கு, ஒரு கேளிக்கைதான் இந்தப் போராட்டங் களும், பலியாகும் மனித உயிர்களும். வளைகுடா யுத்தம் நடந்த தொண் ணூறுகளில், மிகப் பெரிய ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் ஸ்டார் தொலைக்காட்சியில் மட்டுமே அதைக் காண முடியும் என்பதால், “ஹேவ் எ கோக், வாட்ச் த கல்ஃப் வார் அலைவ்” (கோகோ கோலா அருந்துங்கள், வளைகுடா போரை நேரடி ஒளிபரப்பில் கண்டு களியுங் கள்) என்று எழுதி வைத்திருந்ததை  பத்திரிகையாளர் பி. சாய்நாத் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸாத் ஆட்சிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் குழுக் களுக்கு தங்களது சொந்த நலனைக் கருத்தில் கொண்டு சவூதி அரேபியா, கத்தார் நாடுகள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆட்சி மாற்றத் திற்கு ஆதரவு என்ற செயல் திட்டத் தோடு அமெரிக்காவும், பிரிட்டனும் தமது பங்களிப்பைச் செய்து கொண்டி ருக்கின்றன. துருக்கி தனது புவியி யல் சார்ந்த விரிவாக்கத்தின் சிறப்பு தூண்டுதலோடு போராட்டக் குழுக் களுக்கு உதவி புரிந்து வருகிறது. ஆனால் இப்போது ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாத மையத்தின் கட்டுப்பாட்டில் விஷயங் கள் சென்றுவிட்டன. இன்னொரு பக்கம், அஸாத் அரசு தரப்பில் பயங் கரவாதத்தை நிகழ்த்திக் கொண்டி ருக்கிறார், சொந்த மக்கள்மீது. திரும்பக் கடக்க சிரமமான தூரத்தை மேற்கு அராபிய அரசியல் கடந்து கொண்டிருக்கிறது என்கிறது தி இந்து தலையங்கம்.

தேசத்தின் பாதிப் பகுதி ஐ எஸ் கட்டுப்பாட்டில். அதிபர் அஸாத் கட்டுப் பாட்டில் டமாஸ்கஸ் உள்ளிட்ட முக் கிய பரப்பு. இடையே ஒரு தாயகம் அழிந்து கொண்டிருக்கிறது. சிதறி ஓடிக் கொண்டிருக்கும் மக்களின் உயிர் அவர்கள் வசம் இல்லை. காடு, மலை, தரைவழி, கடல் ஏதோ ஒரு வாசல். ஏதோ ஒரு திறப்பு. எந்தப் பக்க மாகவோ ஒரு விடுதலை. யார் மூல மாவது மறுவாழ்வு. இப்படியாக மத் திய தரைக் கடல் வழி கிரீஸ் சென்ற டைய தப்பி ஓடிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தின் செல்லக் குழந்தை தான் அய்லான். அவனது சடலத்தின் புகைப்படம் ஏற்படுத்திய அதிர்ச்சி அய்ரோப்பிய நாடுகளின் மனச்சாட்சி யைத் தட்டி எழுப்பிக் கொண்டிருக் கிறது. இதற்குமேலும் ஓட முடியாது.

இதற்குமேலும்  கால் வைக்க பூமி இல்லை. இதற்குமேலும் திறக்கக் கதவுகள் இல்லை. இதற்கு மேலும் விடுவதற்கு எங்களிடம் உயிர் மிச்ச மில்லை என்றபடிக்குக் கிடக்கிறது ஒரு மூன்று வயது சிறுவனின் உடல். ஆத்தோரம் மணலெடுத்து அழகழ காய் வீடு கட்டி, தோட்டம் இட்டு செடி வளர்த்து ஜோராகக் குடியிருப்போம்… என்று பாடவேண்டிய குழந்தை மூச் சின்றிக் கிடக்கிறது. கரையொதுங் கிய உலக மனசாட்சி என்று வருணிக் கின்றனர் ஆற்றாமையில் கொதிக் கும் படைப்பாளிகள். அந்தக் காட்சி யின் அரசியலை, அதன் சமூக அவ லத்தை, ஒரு குழந்தைமை பறி கொடுத்த வாழ்க்கையை ஓவியர்கள் கோபாவேசத்தோடு தீட்டிக் கொண் டிருக்கின்றனர். ஒடிஸ்ஸா மாநிலத் தின் பூரி கடற்கரையில் சிற்பி சுதர்சன் பட்நாயக், மணல் சிற்பத்தின் மூலம் கண்டனத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். அன்று ஒரு பெண் குழந்தை வியத் நாமில் தனது உடல் திடீரென்று தீப்பற்றி எரிய வீதிகளில் இப்படித் தான் அமெரிக்காவின் ரசாயன ஆயுதத்தை நிரூபித்து ஓடி வந்தாள். ஆதிக்க சக்திகளால் மருந்துகள் அனுப்பத் தடை செய்யப்பட்டிருந்த இராக்கில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமலேயே சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளை வெளியே எடுத்தனர். இலங்கையில் மகிந்த ராஜபட்சே ஆட்சியின்போது தமிழ் மக்கள் அழித் தொழிக்கப்பட்ட ஈவிரக்கமற்ற நிகழ் வொன்றில், பிரபாகரன் மகன் சிறுவன் பாலசந்திரன் உடல் இப்படித்தான் கிடைத்தது. அய்லான் உடல், அய்ரோப்பிய கண்டத்தை அசைத்தது. அமெரிக்க கண்டத்தின் போர்வெறியை, ஆதிக்க ஆணவத்தை அம்பலப்படுத்தியது. உலக நாடுகளில் வாழும் மக்கள் வாழ்க்கை குறித்த விமர்சனத்தை அந்த மணலில் காட்சிப்படுத்தி விட் டது.

அந்த உடலின் புகைப்படம் உலுக்கி எடுத்த அடுத்த நொடியில், எப்படியேனும் அகதிகளை வர வழைத்து குறைந்தபட்ச வாழ்வாதார மும், உயிர் தரிக்க உணவும் உடை யும் கொடுத்துக் காக்க வேண்டிய தேவையை அய்ரோப்பிய நாடுகள் வேகமாக உணரத் தொடங்கின. மனிதம் சரிந்து போய்விடவில்லை என்பதை எப்போதும் எளிய மக்களே உணர்த்திக் கொண்டிருக்கின்றனர். மதவெறி சக்திகளின் கட்டுப் பாட்டின் கீழ் சாதாரண மக்கள் சிக்கிக் கொள்வது ஆபத்தானது. அப்படியான அபாயம் தொடர்ந்தால், சிரியா ஒரு போதும் நிம்மதியான வாழ்க்கையை அந்த மக்களுக்கு ஏற்படுத்தித் தர முடியாது. சொந்த மண்ணில் அந்நிய மாக கருதப்படும் ஒரு தருணம் எந்தக் குடிமக்களுக்கும் நேராதிருக்கட்டும். துருக்கி, சவூதி அராபியா உள்ளிட்ட நாடுகள், சிரியாவில் தொடரும் வன் முறை ஆட்டத்தைத் தடுத்து நிறுத்த முன்முயற்சி எடுக்க முடியும். தன்பங் கிற்கு சொந்த மக்களுக்கு எதிராக பெரும் வன்முறையைக் கட்ட விழ்த்துக் கொண்டிருக்கும் அதிபர் அஸாத் அவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, போராடும் குழுக்களோடு உருப்படியான ஒரு பேச்சு வார்த்தைக்கு முன்வர கட்டா யப்படுத்தப் படவேண்டும்.

நாம் களிமண்ணில் இருந்து இரும்பு எஃகு செய்வோம்  / அதிலிருந்து எழுப்புவோம், பறவை களாகவும் – ஒரு தேசமாகவும்  – இல்லமாகவும் – காற்றாகவும் – மழையாகவும் உருவெடுக்கும்  ஒரு புத்தம் புது நேயத்தை …..
என்று அராபிய வசந்த போராட்ட காலத்தில் துனீசியாவில் இசைப் பாடல் ஒலித்த அமல் மத்லூதி கவிதை வரிகளே நினைவுக்கு வருகின்றன…..
கடற்கரையில் உற்சாகமாக எழுந்து வரும் அலையின் நீரில் நனைக்க மட்டுமே இனி ஒரு குழந்தையின் பயணம் கடற்கரை நோக்கி இருக்கட்டும். அய்லான் உடலைப் பார்க்கக் கிடைத்த புகைப் படம், நமது மனிதம் மீட்டெடுக்கப் பட்டதன் சாட்சியமாக உறைந்து போகட்டும்.
(94452 59691 – sv.venu@gmail.com)