பிற

அமெரிக்காவுக்கு‍ இந்தியா பதிலடி? புதுசு கண்ணா புதுசு?

செய்தியும் சில கேள்விகளும் – 1

அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே பொது இடத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நியூயார்க் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் தேவயானி கோப்ரகடேவை, விசா மோசடி வழக்கில் அந்த நாட்டு போலீஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.

பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு திரும்பியபோது பொது இடத்தில் போலீஸார் அவரைக் கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் அடையாள அட்டைகளை உடனடியாக தரவேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த விமான நிலையத்துக்கான ‘பாஸ்’ அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா விவரங்கள், அந்த பள்ளிகளில் பணிபுரியும் இந்தியர்களின் ஊதியம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் இந்தியர்கள் குறித்த விவரங்கள், அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் ஆகியவை குறித்தும் தகவலைத் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரகம் சார்பில் இறக்குமதி செய்யப்படும் மது உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் இனி விமான நிலையத்தில் சோதனையிட்டு சரிபார்த்தபிறகே அனுமதிக்கப்படும்.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சாலையில் தடுப்புகளை வைத்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இப்போது எழுந்துள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, அந்த தடுப்புகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. அந்த தூதரகம் அமைந்துள்ள பாதையை பொது போக்குவரத்துக்கு போலீஸார் திறந்துவிட்டனர்.

இது இன்றைய தி இந்து செய்தி…

செய்தியில் எழுந்த கேள்விகள் இவை:

  1. திடீரென அமெரிக்காவின் மீது இந்திய அரசுக்கு கோபம் ஏன் வந்தது?
  2. இந்த நாட்டின் ஜனாதிபதியை கேவலப்படுத்திய போது வராத கோபம்..
  3. நமது நாட்டின் மிகச்சிறந்த நடிகனை அசிங்கப்படுத்திய போது வராத கோபம்…
  4. மக்களின் வாழ்க்கையை சூறையடிய போது வராத கோபம்…

இப்போது வரக் காரணம் வருகின்ற பாராளுமன்ற தேர்தல்தானே… காங்கிரசுக்கு எப்போதும் மானம் மரியாதை குறித்து கவலை இருந்ததாக பதிவுகள் இல்லை. ஆக தேர்தல் .. வாக்கு.. ஆட்சி .. இவைகளுக்காகவாவது அமெரிக்காவை கிச்சுகிச்சு மூட்டுவதை ரசிக்கலாம்தனே…

Related Posts