சமூகம் புதிய ஆசிரியன்

அதிக பதி அதிகப்படி

டாக்டர் ஜி. ராமானுஜம்

அல்லல் படவைக்கும் அல்லோபதியை வெறுப்பவர்களுக்குக் கீழ்க் கண்ட அருமையான மாற்று மருத்துவ முறைகள் இருக்கின்றன. (இக்கட்டுரை நகைச்சுவைக்காக மட்டுமே. நோ பொங்கல் ப்ளீஸ். மாற்று மருத்துவமுறை களிலும் சிறந்த முறைகள் உண்டு என்பதை நான் மறுப்பவன் அல்ல).
1. வளையாபதி – உடலை (முதுகெலும்பை) விரைப்பாக வைத்துக் கொண்டு செய்வது. மேலதிகாரிகளுக்குப் பயந்து நடுங்கி அடிமைப் பெண் எம் ஜி ஆர் மாதிரி இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல மாற்று மருத்துவ முறை.
1ஹ. அஷ்டபதி – ஜெயதேவர் எழுதியது அல்ல. வளையாபதிக்கு நேர் மாறாக உடலை அஷ்டகோணலாக வளைத்துச் செய்வது. முறையாகச் செய்யவில்லையென்றால் கஷ்டபதியாகிக் கைகால் பின்னிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
2. வெங்கடாஜலபதி – ஒரு வெண்மையான கடாயில் ஜலத்தை ஊற்றிச் செய்வது. வெம்மையான என்றும் பாடம். இந்த வைத்தியத்தைத்தான் திருப்பதி என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் மருத்துவ சிகிச்சையின் முடிவில் குண மானால் நோயாளிக்கும் இல்லையென்றால் அவரது மகனுக்கும் போடப்படும் மொட்டைதான் `திருப்பதி என்று சொல்லும் அறிஞர்களும் உள்ளனர்.
3. கஜபதி – மன்னர் காலத்தைப் போல் யானைகளால் மிதிக்கச் செய்து மசாஜ் செய்வது. யானைகள் நல்ல மூடில் இருக்க பிள்ளையாரை வணங்கிச் செல்வது சாலச் சிறந்தது. இல்லை யென்றால் நீங்கள் சிதறு தேங்காய் ஆகிவிடக் கூடும். 4. கணபதி – கனமான பொருட் களால் மசாஜ் செய்வது. பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகப்பை மூலம் அன்றாடம் இலவசமாகக் கிடைக்கும் வைத்தியம். இதன் அருமை புரியா மல் இருக்கிறோம்.
5. அம்பிகாபதி – அம்பிகா அல்லது அவரது பதியின் கையால் அடிவாங்குவது.
6. உமாபதி – உம்மா கொடுத்தே குணப்படுத்துவது.
7. தீர்த்தபதி – தினமும் தண்ணீ ரிலேயே இருப்பது. நல்ல தண் ணீரைச் சொன்னேன். டாஸ்மாக் அல்ல. இது வியாதிகளைத் தீர்த்த தெரபி ஆதலால் தீர்த்தபதி என்ற ழைப்பர் என்றும் கூறுவதுண்டு. 8. சபாபதி – சபாக்களுக்குச் சென்று இசை கேட்டுக் குணமடையச் செய்யும் முறை. 9. சிம்பதி – செல்போனில் சிம் கார்டைப் பிடுங்கிவிட்டு நிம்மதியாகச் செய்யும் மருத்துவமுறை . செல் போனையே தூர எறிந்துவிட்டுச் செய்யும் அட்வான்ஸ்ட் லெவல் மருத் துவமும் உண்டு. 10. பசுபதி – ராமராஜனின் பாடல்களைக் கேட்டுக் குணமாக்கும் முறை. 11. பூபதி – மலர்களைக் கொண்டு செய்யும் மருத்துவ முறை. இந்த முறையில் சிகிச்சை சற்றுப் பிசகானால் அதே மலர்களை நம்மீது தூவுவார்கள் என்பது ஒரு சிறப்பம்சம்.
12. டெலிபதி – தொலைக்காட்சி யில் சமையல் குறிப்பு பார்த்துக் கொண்டே சமையல் செய்வது. சமைத்துக் கொண்டிருக்கும்போது கரண்ட் போய்விட்டால் பாதி சமைத்த அந்த வஸ்துவை என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க நேரிடும். அதுகூடப் பரவாயில்லை. தூர எறிந்து விடலாம். ஆனால் மருத்துவ நிகழ்ச்சி களைப் பார்த்துத் தானே வைத்தியம் செய்து கொண்டால், பாதி நிகழ்ச்சி யில் கரெண்ட் போய்விட்டால் என்ன செய்வது? ஆகவே 108க்கு முன்பதிவு செய்துகொள்ளல் நலம்.
13. தம்பதி – கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சின்ன மனக்கசப்புகளை விவாகரத்து , வெட்டுக்குத்து ரேஞ்சுக்கு மாற்றி விடும் உளவியல் சிகிச்சை முறை. 14. லட்சுமிபதி : கார்ப்பரேட் மருத்துவமனைகளில் இருப்பது போல் பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் மருத்துவமுறை. 15. அதிபதி – ஏகப்பட்ட மருத்துவ முறைகளைச் சேர்த்துச் சிகிச்சை அளிக்கப்படுவது.
16. சத்திரபதி – வீடுவாசலை விற்று சத்திரத்தில் தங்க வைப்பது.
இப்படியெல்லாம் மக்களை ஏமாற் றினால் நீங்கள் ஆகலாம் க்ரோர்பதி.
(இந்தப் பதிவு மக்களை முட்டா ளாக்கும் விஞ்ஞானப் பூர்வமற்ற முறைகளைப் பற்றியதே).
(ramsych2@gmail.com 9443321004)

Puthiya Aasiriyan's photo.
Puthiya Aasiriyan's photo.

Related Posts