கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

மனிதகுல வரலாற்றில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய, முதலாளித்துவத்தினை வீழ்த்துவதற்கும், பொதுவுடமை சமூகத்தினை உருவாக்கும் பட்டாளி வர்க்க புரட்சியை உண்டு பண்ணுவதற்குமான முன்னெடுப்புக்களை பரிந்துரைக்கின்ற, இன்றளவும் உலக அரசியல் நடவடிக்கையில் மிக்க செல்வாக்கை செலுத்துகின்ற, உழைக்கும் வர்க்கத்தின் புரட்சித் தத்துவத்தை முதல் தடவையாகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கிய, நாகரீக உலகில் ஒன்று திரண்டு போராடும் தொழிலாளி வர்க்கத்துக்கு உந்து சக்தியாகவும் வழிகாட்டியாகவும் திகழும், ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ (Working Men of all Countries, Unite!) என்ற உலகப் புகழ்பெற்ற வாசகத்தோடு‍, நவீன வரலாற்றைத் தத்துவார்த்த முறையில் விவரிக்கும், உலகை மாற்றியமைத்த முக்கியப் புத்தகங்களில் ஒன்றாக இன்றளவும் கருதப்படும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியான நாள். 1848 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் நாள் லண்டனில் வெளியிடப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலில் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் 1850 ஆம் ஆண்டு ஹெலன் மெக்ஃபார்லேன் (Helen MacFarlane) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றுவரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நான்கு பகுதிகளையும் 29 அத்தியாயங்களையும் கொண்டுள்ளது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம், மனித முன்னேற்றத்தில் உழைப்பின் பாத்திரம், முதலாளித்துவத்தின் பங்கு, தொழிலாளர்களின் நிலை, அவர்களுடைய எதிர்காலம் உள்ளிட்ட பல விஷயங்களை அறிக்கை விவரிக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஏழு முகவுரைகள் கொண்டது. இவற்றில் 1872, 1882 ஆகிய இரண்டு முகவுரைகளும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவராலும் எழுதப்பட்டவை. இதர ஐந்து முகவுரைகள் 1883, 1888, 1890, 1892, 1893 ஆகிய ஆண்டுகளில் மார்க்சின் மறைவிற்குப் பிறகு ஏங்கெல்சால் மட்டும் எழுதப்பட்டவை.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பற்றி லெனின்

மாமேதைக்குரிய தெளிவுடனும் அறிவுத் திறனுடனும் இந்த நூல் புத்துலகக் கருத்தை, சமுதாய வாழ்க்கையை முற்றும் தழுவிய பொருள்முதல்வாதத்தை, விரிவான ஆழ்ந்த வளர்ச்சிக் கருதுகோளான இயங்கியலை, புதிய சமுதாயத்தைத் தோற்றுவிக்கும் தொழிலாளி வர்க்கத்தின் பாத்திரத்தை எடுத்துக் கூறுகிறது…

About லீப்நெக்ட்