சாதி உணவான சத்துணவு . . . . . . . . !

வெட்கமும் குற்றவுணர்வும் அருவருப்பும் இல்லாமல் சாதி நோய் பிடித்த மனிதர்களால் தலித் பெண் பாப்பாள் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவிநாசி அருகில் உள்ள திருமலைகவுண்டன்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையல்காரர் பாப்பாள். தலித் பெண் சமைக்கின்ற உணவினை எங்களது குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. அந்த பெண் சமைக்கக்கூடாது. பாப்பாள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக்கூட வளாகத்திற்குள் அத்துமீறி உள்ளே வந்து தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர் சாதி வெறியர்கள். எட்டு வழி சாலை கூடாது என்று போராடுபவர்களை தேசிய பாதுகாப்பு […]

விஷவாயு மரணச் செய்திகளும், தோட்டியின் மகனும் …

(எழுத்தாளர் சுந்தரராமசாமியின் பிறந்த நாளன்று, எழுத்தாளர் ‘தகழி சிவசங்கரன்’ எழுதி, சுந்தரராமசாமியின் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘தோட்டியின் மகன்’ நாவல் அறிமுகத்தை வாசிப்புக்காக வழங்குகிறோம்.) வாசிக்கும் பழக்கம் அறவே விடுபட்ட நிலையில் மீண்டும் ஏனோ இதன் மேல் ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொள்ள, எளிமையான தமிழ் புத்தகங்களை வாசிப்போம். என்று ஆரம்பித்து ச.தமிழ்செல்வன் நூல்களை வாசிக்கலானேன். எங்கள் பழைய புத்தக அலமாரியில் சில புத்தகங்கள் வாசிக்கும் பட்டியலை நீட்டியது. அப்படி அகப்பட்டது தான் “தோட்டியின் மகன் “. இந்த வார்த்தை, […]