ஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . ! – 4

பெண்கள், இட ஒதுக்கீடு, தீண்டாமை முதலியன குறித்த ஆர்.எஸ்.எஸ் அணுகல் முறைகள் தான் ஏற்பு வழங்கியுள்ள இணை அமைப்புகளிடையே மாற்றுக் கருத்துக்கள் உருவாகும்போது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அதை எப்படிக் கையாள்கிறது? எடுத்துக்காட்டாக சுதேசி ஜாக்ரான் மஞ்ச் வெளிநாட்டு மூலதனம் கூடாது என்கிறது. பா.ஜ.க அரசு வெளிநாட்டு மூலதனத்திற்குச் சலுகை அளித்து வரவேற்கிறது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் என்ன செய்யும்? இரண்டுக்கும் இடையே சமரசம் (balance) பண்ணுவதுதான் அதன் நிலை என்கிறார் ஆன்டர்சன். ஒரு இடைத்தரகாக இருந்து […]

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . ! – 3

சாவர்க்கர் கூட இது இந்துக்களுக்கான நாடு மட்டுமல்ல, முஸ்லிம்கள் உட்பட இங்கு பிறந்த எல்லோருக்குமே இந்த நாடு உரியது என்கிற கருத்தை நோக்கி வந்தார் என ஆன்டர்சன் சொன்னதை வார்ணே உடனடியாக மறுக்கிறார். சாவர்க்கரைப் பொருத்தமட்டில் இந்துக்கள் /இந்தியர்கள் என்பன ஒரே பொருளைக் குறிக்கும் இரு சொற்கள். இந்தியாவில் பிறந்திருந்தாலும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்தியர்கள் இல்லை. ஏனெனில் இந்தியர்களை வரையறுக்க அவர் அளிக்கும் மூன்று அத்தியாவசியமான பண்புகளில் இரண்டு மட்டுமே இந்தச் சிறுபான்மைச் சமூகத்தினர்களுக்குப் பொருந்தும். “பூமி” […]

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . ! – 2

ஆர்.எஸ்.எஸ் சின் அமைப்பு வடிவம் ‘ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்’கின் (RSS) இணைப்பு அமைப்பாக (affiliated organization) முதன் முதலில் தொடங்கப்பட்டது மகளிருக்கான ‘ராஷ்ட்ரீய சேவிகா சங்’ தான். இது 1930 களில் தொடங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் 1925ல் தொடங்கப்பட்டது என்பதை நாம் அறிவோம். காந்தி கொலைக்குப் பின் ஒரே சமயத்தில் காங்கிரசிலும் ஆர்.எஸ்.எஸ் சிலும் உறுப்பினராக இருக்க இயலாது என்கிற நிலையைக் காங்கிரஸ் எடுத்தபோது, 1950 களின் தொடக்கத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் கட்சியாக ‘பாரதீய ஜனசங் […]

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . ! – 1

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து “ஒரு உள் பார்வை” என ஒரு ஆய்வு நூல் வெளி வந்துள்ளது. The RSS: A View to the Inside எனும் இந்நூலை வாஷிங்டனில் உள்ள ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசியராக உள்ள வால்டர் கே.ஆன்டர்சனும் ஸ்ரீதர் டி.டாம்லே என்பவரும் இணைந்து எழுதியுள்ளனர். நான் இந்த நூலை இதுவரையும் படிக்கவில்லை. ஆனால் ஆன்டர்சன் 1971ம் ஆண்டு EPW இதழில் நான்கு வாரங்கள் ஆர்.எஸ்.எஸ் பற்றி தொடராக எழுதிய நான்கு கட்டுரைகளைப் பல […]