சூது கவ்விய கனவுகளும் மரித்துப் போகும் கலையரசிகளும் . . . . . . !

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சத்யா மாலை மயங்குவதைக் கண்டு குச்சியை எடுத்து ‘ஹேய்.. ஹேய்’ என இரண்டு அதட்டல் போட்டு ஆடுகளை முன்னோக்கி ஓடவிட்டாள். வழக்கமான திசையில் அவை வீட்டை நோக்கி நடை போட்டன. பால்குடி மறவா கருவாயன் பின்தங்கியதைப் பார்த்து குரலைக் குழைத்து பா.. பா.. என பாசமாய் அழைத்தாள். என்னை விட்டுட்டு போறியே … அப்பிடியென்ன அவசரம் சத்யா .. என உரத்த குரலில் கேட்டபடி தன் மந்தையை விரட்டியபடி வந்து அவளுடன் சேர்ந்தாள் […]