காலா எதிர்ப்பு பற்றவைப்பது எதை?

கடந்த சில நாட்களாக காலா எதிர்ப்பு, ரஜினி எதிர்ப்பு என்கிற பெயரில் #BoycottKala என்று மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள் எனக்குள் பெரும் வியப்பையும், நம் சமூகத்தில் ‘நேர்மையான அரசியல்’ பற்றிய கண்ணோட்டத்தில் காணப்படும் முரண்பாட்டினால் நகைப்பையும் ஏற்படுத்துகிறது. ரஜினியின் பார்ப்பனிய இந்துத்துவ பாசிச அரசியல் கண்டிப்பாக எதிர்க்கப்பட வேண்டியதே. தோற்கடிக்கப்பட வேண்டியதே. ஆனால் பா.இரஞ்சித் எதிர்ப்பென்பது அவரின் அரசியல் அணுகுமுறை மீதான முரண்பாடுக்கப்பால் ஏதோ ஒரு வெறுப்பரசியலாக மாறி வருகிறது. தவறானவர்கள் சினிமாவில் வளர்ந்து அல்லது சினிமாவைப் பயன்படுத்தி […]

யாருங்க நீங்க . . . . . . . . . . ?

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, யாருக்குமே பிரயோஜனம் இல்லாத அந்த சூப்பர் ஸ்டார் என்ற பிம்பத்தோடு சேர்த்து, ரஜினிகாந்த்தும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார். ஒரேயொரு கேள்விதான் நேற்று ரஜினிகாந்த் கிளப்பிய அனைத்து களேபரங்களுக்கும் அடிப்படையாக இருந்தது. இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘#நான்தான்பா_ரஜினிகாந்த்’ முதலிடத்தைப் பிடித்து, ரஜினியை அம்பலப்படுத்தவும் அந்த ஒற்றைக் கேள்வியே காரணமாக அமைந்தது. தூத்துக்குடியில் ஸ்ட்ரெலைட் போராட்டத்தின்போது அதிகார வர்க்கம் நடத்திய அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆறுதல் சொல்லப்போவதாக நேற்று கிளம்பிச்சென்றார் நடிகர் ரஜினிகாந்த். ‘ஒரு நடிகனான […]

பிரியமுள்ள பத்ம பூஷண் ரஜினிகாந்த் அவர்களுக்கு!

பிரியமுள்ள பத்ம பூசன் ரஜினிகாந்த் அவர்களுக்கு வணக்கம். உங்கள் அபிமான ரசிகனின் கடிதம் இது. இந்த கடிதத்தை தாங்கள் பார்க்க வாய்ப்பில்லை என தெரிந்தும் எழுதுகிறேன். உங்கள் திரைப்படம் வெளியாகும் தினத்தில் வீட்டில் உணவில்லை. எனினும் உங்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் லட்சக்கணக்கான ரசிகர்களை தாங்கள் எப்படி அறிய முடியாதோ அப்படி இந்த கடிதமும் உங்கள் கண்களில் படாமல் போகலாம். ஆனால் நமக்குள்ளான உறவு 30 ஆண்டுகாலம் என்பதை மறந்துவிடாதீர்கள். அதாவது எனது 10 வயதில் போக்கிரி ராஜா ரிலீஸ் […]