பேரிடரும் இனி ஆளும் வர்க்கத்தின் அடியாள்தான் . . . . . . . . !

“பெருங்கடல் வேட்டத்து“ – ஒக்கி புயலின் கோரப்பிடியில் சிக்கி அரசின் பாராமுகத்தால் கொல்லப்பட்ட குமரி மாவட்ட மீனவர்களின் துயரங்களை பேசும் ஆவணப்படம். பேரழிப்பை சந்தித்த சமூகத்தின் உள்ளிருந்து கேட்கும் குரல் மட்டுமல்ல, அச்சமூகத்தை சார்ந்தவரின் பதிவு  என்பதும் இந்த படைப்பிற்கு கூடுதல் முக்கியத்துவத்தை தருகிறது. மீனவ சமூகத்தின் கடல் குறித்த மரபு அறிவையும், கடல் தொழில் மீதான அவர்களின் உரிமையையும், அரசின் மீதான  கோபத்தையும்  வெளிப்படுத்தும் பாங்கில் அதனை உணரலாம். மீனவ மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் குறித்து […]