என்ன தவறு செய்தார்கள் . . . . . . . . . . !

ஊரெங்கும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்கள். சேலம் மாவட்டத்தின் ஓர் மூலையில் இந்திய வரைபடத்தின் சிறு துண்டு உதாரணமாக ஊர், பின்னே கரட்டருகே அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலித் குடும்பங்களின் கொட்டகைகள். இழவு வீடு. சமீப காலமாக இந்தியாவே இழவு வீடு போல் தான் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நிலைகுத்திய கண்களுடன் பித்துப் பிடித்தவர் போல் அமர்ந்திருக்கிறார் ராஜலட்சுமியின் அம்மா சின்னப்பொண்ணு. வருபவர்கள் எல்லோரும் ஆறுதல் சொல்கிறார்கள். உடன் நிற்கிறார்கள். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டத்திற்கு பிறகு […]

நம்புங்கள் இது நாகரீக சமூகம் . . . விழுப்புரம் வெள்ளம்புத்தூர் கிராமத்தின் கொடூரம் . . . . . !

பார்த்தாலே பதைப்பதைக்கச் செய்கின்றன அந்தப் புகைப்படங்கள். கிட்டத்தட்ட முகம் சிதைந்த நிலையில் இருக்கும் அந்த உடல்களைச் சுற்றிலும் பரவிக் கிடக்கும் ரத்தத்தின் வாடை, உலகின் எந்த மூலையில் இருந்து பார்ப்பவராயினும் குமட்டலை ஏற்படுத்துகின்றன. தாய், மகள் மற்றும் மகன் என இந்தக் கொடூரத் தாக்குதலில் மகனின் பரிதாபச் சாவு நமக்குள்ளும் பாதுகாப்பற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகிலுள்ளது வெள்ளம்புத்தூர் கிராமம். இந்த கிராமத்தின் தலித் குடியிருப்பில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். […]