பிரம்மாண்ட சிலைகளின் அரசியலும் பொது உளவியலும்!

  இதோ நாடு முழுவதும் மீண்டும் விவாதமாகி இருக்கிறது போலி !? சாமியார் விவகாரம். இம்முறை சர்ச்சையில் சிக்கி இருக்கும் கார்ப்பரேட் சாமியார் தமிழகத்தில் கோவையில் ஆசிரமம் நடத்தும் ஜக்கி வாசுதேவ். யார் இந்த ஜக்கி..? ஜக்தீஷ் இதுதான் ஜக்கியின் இயற்ப்பெயர் 1957 -ல் மைசூரில் பிறந்தவர், தாய் மொழி தெலுங்கு. இதை தன்னுடைய மூன்றாவது பிறவி என்று சொல்லிக்கொள்ளும் அவர்,தன் முதல் பிறவியில் பில்வாஸ் என்னும் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தேன் என்றும், இரண்டாவது பிறவியில் சத்குரு […]

வேலைதேடும் பணியில் இணைவாரா நமது பிரதமர்?

இன்னும் 5 வருசம் இருக்கு.. எப்டியும் நம்ம எல்லாத்துக்கும் மோடி வேலையைத் தேடி தந்துடுவார்ன்னு நம்புவோம்… நம்பித்தான ஓட்டுப் போட்டோம். அந்த நம்பிக்யோட இன்னும் 5 வருசத்தோட ஒவ்வொரு நாளையும் எண்ணி எண்ணி நகர்த்துவோம்.

தொலைந்துபோன எனது பணம் ரு.28 லட்சம் …

எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட 28 லட்சத்தை தொலைத்துவிட்டிருக்கிறேன். நான் மட்டுமா, என் அம்மாவும் சேர்த்து தொலைத்திருகிறார். எங்கள் குடும்பத்திற்கென இருக்கும் ஒரே சொத்தான வீட்டின் மதிப்பு ரூ.30 லட்சம்.

எந்த முறையும் இது அவர்களின் அரசு …

முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமான வாக்காளர்கள், பல ஆண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மை அரசு, கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிய தனி நபர் துதி, மேலும் இந்த முறை ஊடகங்கள் சொன்னது நடந்தேவிட்டது. தேர்தல் முடிவுகளுக்கு முன்பே ‘பங்குச் சந்தைகள்’ வரலாறு காணாத உயர்வைக் கண்டன, உடனே செய்தித் தாள்கள் அதற்கு ‘மோடி விளைவு’ என்று பெயரிட்டார்கள். புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் 10 கட்டளைகள், 100 நாட்களுக்கான திட்டங்கள் என ஒரு பக்கம் கவர்ச்சி அறிவிப்புகள் வந்தபடியிருக்கின்றன. எதிர்பார்ப்புகள் மக்களிடம் […]

மீனவர்களுக்கானதா பாஜக அரசாங்கம்?

இலங்கையிடம் வலுவாகப் பேசி தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர்கள் பேசினார்கள். இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், மீனவர் நலன்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறதா? என்று கேட்டால், மீனவர்களே அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏன் இப்படி நடக்கிறது? உண்மையில், பாஜகவின் அணுகுமுறை, காங்கிரஸ் ஆட்சியாளர்களிடமிருந்து வேறுபட்டது அல்ல. பாஜகவின் கடந்த ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் கொல்லப்பட்ட போது, “வழி தெரியாமல் சென்றுவிடும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் […]

பாகிஸ்தான் பிரதமரை மோடி அழைத்தது ஏன்?

(சார்க் நாடுகளின் பிரதிநிதிகளை தனது பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருக்கிறார் நரேந்திர மோடி, தேர்தல் பிரச்சார காலத்தில் அவர் அண்டை நாடுகள் குறித்து என்ன பேசினார் என்பதை நாம் அறிவோம். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நடந்திருப்பது தலைகீழ் மாற்றம்தான். இந்த மாற்றத்திற்கான காரணத்தை நமக்கு அறிவிக்கிறது ‘ட்ரூத் ஆப் குஜராத்’ இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையைத் தழுவிய இந்த பதிவு)

ராஜபட்ச வருகையில் என்ன பிழை?

இந்தியாவின் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பதவியேற்பு விழாவுக்கு ராஜபட்ச வருவது விவாதப் பொருளாகியிருக்கிறது. சார்க் நாடுகள் அனைத்துக்கும் அழைப்பு அனுப்பியுள்ளோம், அண்டை நாடுகளுடன் நல்ல உறவைப் பேணுவதில் இது வொரு குறிப்பிடத்தக்க முயற்சி என்கின்றனர் மோடியின் ஆதரவாளர்கள். அவர்கள் இதனை ‘ஜனநாயகத்தின் கொண்டாட்டம்’ என்று பெயரிட்டு அழைக்கின்றனர். பேச்சுவார்த்தைக்கோ, அரசியல் ரீதியிலான சந்திப்புக்கோ ஒரு நாட்டின் பிரதிநிதி இந்தியா வருவதில் தவறில்லை, விழாவில், கொண்டாட்டத்தில் பங்கெடுக்க இலங்கை ஜனாதிபதி எதற்காக அழைக்கப்பட […]

ஃபாஸிஸத்தின் விஷ வேர்கள்

சுதந்திர இந்தியாவின் வரலாற்றை இதுவரை இரண்டாகப் பிரிக்கலாம். 1991 முன் வரை ஒரு காலம். 1991க்குப்பிறகு அடுத்த காலகட்டம். 2014 மூன்றாவது காலகட்டத்தின் தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். 1991 சோவியத் யூனியனின் சோஷலிஸ பரிசோதனை தோல்வி அடைந்த பிறகு(இது ஒரு தனிக்கதை), இந்திய முதலாளி வர்க்கம் குதூகலமாக ஒரு பாதையை தேர்ந்தெடுத்த்து. அதுதான் ஏகாதிபத்தியத்தின் சார்பாக இந்தியப்பொருளாதாரத்தை முற்றிலும் திறந்துவிடுவது என்பது. கடந்த 23 வருடங்களில் ஒரு பிரமிக்க்த்தக்க மாற்றத்தை அடைந்துள்ளது. புலி தனது இரையைப் […]

மோடி ராஜ்ஜியத்தில் போலீசின் வேலை? அம்பலத்துக்கு வந்த புதிய தகவல்கள் !

குஜராத் அரசாங்கம் தனது காவல்துறையைப் பயன்படுத்தி ஒரு இளம் பெண்ணை உளவு பார்த்த தரமற்ற நடவடிக்கை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியினர் மீது இவ்வகையான குற்றச்சாட்டுகள் புதிதல்ல என்றாலும், இவ்விசயத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமித் ஷாவும், நரேந்திர மோடியும் நேரடியாக சிக்கியுள்ளனர். இதுகுறித்த முழுமையான தகவல்களை கோப்ரா போஸ்ட் இணையதளம் வெளியிட்டிருக்கிறது.