பால்புதுமையினருக்கான சமூகநீதி . . . . . . . . . . . . . . !

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானதைத்  தொடர்ந்து  ராஜாஜி ஹாலில் பெரும்திரளான திருநங்கைகள் அவருக்கு அஞ்சலி செலுத்தியதையும், காவேரி மருத்துவமனையிலிருந்து கருணாநிதியின் இல்லத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டபோது அந்த ஊர்வலத்தில் திருநங்கைகள் கலந்துகொண்டதையும் காணமுடிந்தது. தங்களுக்கு கவுரவமான வாழ்வை உறுதிப்படுத்துவதில் கலைஞர் முனைப்போடு செயல்பட்டார் எனத் திருநங்கைகள் நன்றி தெரிவித்த பேட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. முன்னெந்த அரசியல்தலைவருக்கும் இல்லாத அளவில் “கலைஞருக்கு திருநங்கைகள் நன்றி” எனத்தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன. அது உண்மையும் கூட. […]

சமூகநீதி காத்த கலைஞர் . . . . . . . . . !

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு மு. கருணாநிதி காலமானார். கருணாநிதியின் மறைவு என்பது வெறுமனே ஒரு தனிமனிதனின் மறைவாக மட்டுமே சுருக்கி விடமுடியாதது. அந்த பெயர் தனக்குள் அரைநூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றை சுமந்து கொண்டிருக்கிறது. திருவாரூர் வீதிகளில் 14 வயதில் சமூக நீதிக்காக ஒலிக்கத் தொடங்கிய கருணாநிதியின் குரல், அவரது இறுதிமூச்சு வரை தொடர்ந்து ஒலித்தது. கருணாநிதியின் மீது ஆயிரம் ஆயிரம் விமர்சனங்களை சுமந்து கொண்டிருந்தவர்களை கூட, கலங்கி நிற்கச் செய்துள்ளது அவரோடு நீங்கள் எத்தனை […]