இஸ்ரேல் ஏன் உருவானது? அதுவும் இன்றைய இஸ்ரேலிய நிலத்தில் ஏன் உருவானது?

இஸ்ரேல் உருவான வரலாற்று நிகழ்வுக்குப் பின்னால், யூதர்களின் மீதான இனவொடுக்குதல் இருப்பினும், அதனோடு சேர்ந்து முதலாளித்துவவெறியும், ஏகாதிபத்திய வெறியும் கலந்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், இஸ்ரேல் உருவானதன்மூலம், அதிக இலாபமடைந்ததும் அந்த வெறிகள்தான். இப்புள்ளியில் விவாதத்தை துவக்கிடவேண்டும் என்ற விருப்பத்தில், “பாலஸ்தீனம் – வரலாறும் அரசியலும்” நூலில் (அடிப்படை நோக்கத்திலிருந்து அதிகமாக விலகச்சென்றுவிடக் கூடாது என்பதற்காக)  இலேசாக அதனைத் தொட்டுச்சென்றிருக்கிறேன். இஸ்ரேன் ஏன் உருவானது? அதுவும் இன்றைய இஸ்ரேலிய நிலத்தில் ஏன் உருவானது? இக்கேள்விக்கு இன்று சொல்லப்படும் பதில் […]

சிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்? – 4

ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இதற்கு முந்தைய போர்களை விடவும் குழப்பமான சூழல் சிரியாவில் நடக்கும் போரில் நிலவுகிறது. தேசிய முற்போக்கு முன்னணியின் ஆட்சியில் இருக்கும் சிரிய அரசின் இராணுவம் ஒரு புறமும், அதனை எதிர்த்து துவங்கப்பட்ட போராட்டக்குழுக்கள் இன்னொரு புறமும் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அரசியல் ரீதியாக மோதிக்கொண்டனர். எகிப்து மற்றும் துனிசியாவைப் போன்றே சிரியாவிலும் ஒரு ஆட்சி மாற்றம் வரும் என்று அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் சிரியாவில் துவங்கிய உள்நாட்டுக் குழப்பங்களை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தனர். ஆனால், […]

இஸ்ரேலை ஆதரித்தாரா அம்பேத்கர்?

‘இஸ்ரேல் உருவாவதை அம்பேத்கர் ஆதரித்தார்’ என்கிற கருத்து சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினரால் பரப்பப்படுவதைப் பார்க்கமுடிகிறது. இது ஒரு தந்திரமான பொய் என்றுதான் சொல்லவேண்டும். ஹிட்லரால் யூதர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் காலத்தில், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கிற முயற்சியில் இருந்தனர் சியோனிசவாதிகள்.  (உலகில் இருக்கும் ஏராளமான மதங்களைப்போன்று யூதமும் ஒன்று. ஆனால் சியோனிசம் என்பது யூதர்களைத்தவிர அனைவரும் கீழானவர்கள் என்றும், பாலஸ்தீன நிலத்தில் யூதர்களைத்தவிர மற்ற எவரும் வாழக்கூடாது என்று சொல்கிற ஒரு இனவெறித்தத்துவம்). அதனால் பாலஸ்தீனத்தில் […]