மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 6

மதுரையில் பிரதம சங்க சிக்ஷா வர்க்:    1995-ம் ஆண்டில் தான் சி.பி.ஐ.எம் தலைவர் இ.பி.ஜெயராஜனைக் கொல்ல முயற்சி நடந்தது. ரயிலில் ஆந்திரப் பிரதேசத்தில் வைத்து தான் அந்த சம்பவம் நடந்தது. துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. ஆனால் ஜெயராஜனை சுட்டவனுக்கு குறி தவறியது. நவீன, தீவிர சிகிச்சையின் பலனாக ஜெயராஜன் உயிர் பிழைத்தார். விக்ரம்சாலில் சசி, வேட்டை தினேசன் ஆகியோரை சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கிகளுடன், ரயில்வே போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவருமே […]

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 5

தெய்யம் – ஆர்.எஸ்.எஸ்-சின் உரிமை கொண்டாடல்      மடப்புரை திறப்பு நடத்துவதென்று ஆர்.எஸ்.எஸ் தீர்மானித்தது. கோவில் தலைவராக சுதாகரனையும் செயலாளராக தாசனையும் நியமித்துள்ளதாக சாகாவில் அறிவிக்கப்பட்டது. மார்ச்-22 ம் தேதி தெய்யம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 10 ரூபாய் வசூல் சீட்டுகளுடன்(கூப்பன்) சிறுவர்களாகிய நாங்கள் வீடு வீடாகச் சென்று வசூல் செய்தோம். தம்புரான் சாகாவுக்கு வந்து எல்லா வாக்குறுதிகளையும் எங்களுக்குத் தந்தார். பள்ளியில் 10-ம் பத்தாம் வகுப்புத் தேர்வு நடந்த நேரமென்பதால் சிறுவர்களாகிய எங்களுக்கு பள்ளியில் […]

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 4

ஆர்.எஸ்.எஸ். என்னும் வடிவம்: விராடனை  மாதிரியாக்கிய செயல் திட்டம்       ஆர்.எஸ்.எஸ் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ள அதன் அமைப்பு வடிவத்தையும் இயக்க முறைகளையும் பற்றி அறிந்து கொள்வது தேவையான ஒன்றாகும். பிரதேசத்தின் தன்மைக்கேற்றவாறு  நான்கோ ஐந்தோ மண்டலங்களாக உருவெடுக்கும்.  அப்படி, ஏழோ எட்டோ மண்டலங்கள்  இணைந்தால் ஒரு தாலுகாவாக கருதப்படும். ஏழு அல்லது எட்டு தாலுகாக்கள் ஒரு “விபாக்” ஆகும் (மாவட்டம் என்பதன் சங் பரிவார் மொழி). கண்ணூர் மாவட்டம் என்பது சங் பரிவாரைப் பொறுத்த […]

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 3

எனது ஊர்….. எனது குடும்பம்      கண்ணூர் மாவட்டம் கூத்துபறம்பு நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள ஆயித்தரை என்பது நான் பிறந்த ஊர். காடும் மலையும் நதியும் இணைந்து வசீகரிக்கும் இயற்கை எழில் நிறைந்த அழகிய பகுதி. ஆழியில் அலைகள் போன்று சமவெளிகளும் குன்றுகளும் கலந்து நிறைந்து நிற்கும் பகுதி என்பதால் தான் ஆழியில் திரை(அலை) என்ற பதம், பின்னர் மருவி ‘ஆயித்தர’ என்று மாறியிருக்கலாம். பின்னர் எப்பொழுதோ பேருந்துகளில் ஆயித்தரை  என்று எழுதிய போது சிலர் […]

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 2

சுதீஷ் மின்னியின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அணிந்துரை எழுதி, பி.ஜெயராஜன் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.        உலகெங்கிலும் மனிதக்குரோதங்களின் நச்சு விதைகளை தூவி வளரச் செய்து கொண்டே தான் பாசிசம் உலக அரங்கில் அறிமுகமானது. ஹிட்லரும் முசோலினியும் எல்லாம் சரித்திரத்தின் இருண்ட பக்கங்களாயினர். மத பிரிவினையின் தீய விஷத்தை இவர்களிலிருந்து உள்வாங்கி செயல்படும், பாசிச குணமுள்ள ஒரு இயக்கம் இந்தியாவிலும் உள்ளது. அதன் பெயர் தான் ஆர்.எஸ்.எஸ். அதாவது ஹிட்லரின் சிந்தனைகளும் முசோலினியின் இயக்க நடைமுறைகளும் ஒன்று சேர்ந்தால் ஆர்.எஸ்.எஸ் -சின் […]

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 1

சுதீஷ் மின்னி: ஒர் அறிமுகம்     கேரளத்தில கண்ணூர் மாவட்டத்திலுள்ள தலசேரி தாலுகா கண்டங்குந்நு கிராமத்தில் ஆயித்தரை என்ற இடத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.   ஆரம்பக் கல்வியை ஆயித்தரை மம்பறம் பள்ளியிலும் தொடர்ந்து பல்வேறு கல்வி நிலையங்கள் மூலம் மேல்படிப்புகளையும், கணிதத்தில் முதுநிலை பட்டத்தையும் பெற்றுள்ளார். திருமணம் ஆகவில்லை. தந்தை: பொனோன் ஸ்ரீதரன், தாய்: மின்னி சுலோச்சனா மூத்த சகோதரர்: மின்னி சந்தோஷ்.    RSS-ன், ஒருங்கிணைந்த ஆரம்பப் பயிற்சி, முதல்வருட சங்க பயிற்சிப் […]