ஈழமும் . . . . . . சாதியும் . . . . . . !

தமிழ் தேசியம் பேசுவோரும் தனித்தமிழை முன்மொழிவோரும் சாதியத்தை கட்டிக்காப்பவர்களாவே இருக்கிறார்கள். அக்காலத்து ஆறுமுக நாவலர் தொடங்கி இக்காலத்து சீமான் வகையறாக்கள் வரை பலரை இதற்கு உதாரணங்களாக காட்டமுடியும். தமிழுணர்வு என்பது ஒருமைப்பாடு கொண்டது, அதில் சாதி வேற்றுமைகளுக்கு இடமில்லை. எல்லோரும் ஓர் குலம், இங்கு எல்லோரும் ஓர் நிரை என அடுக்கடுக்கான கட்டவிழ்ப்புகளை நூற்றாண்டுகளாக தமிழுணர்வு வெளிப்படுத்தி இருந்தாலும், தமிழுணர்ச்சி சைவ சித்தாந்தமாக மறுகட்டமைப்பு செய்யப்பட்ட காலம் முதல் இன்றைக்கு வரைக்கும் ‘தமிழுக்கும் சாதிஒருமைப்பாட்டிற்கும்’ எவ்வித தொடர்புமில்லை […]