Demonetisation – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு? – 1

சொல்லப்பட்ட நோக்கங்களும், டமாலான செயல்பாடுகளும்: 2016 நவம்பர் 8ஆம் தேதியன்று, இந்தியாவின் ஒட்டுமொத்த பணமதிப்பில் 86% அளவிற்கு இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மோடி அறிவித்தார். அதற்கு மூன்று காரணங்களையும் கூறினார். கருப்புப்பணத்தை ஒழிப்பது கள்ளநோட்டுக்களை செல்லாமல் ஆக்குவது தீவிரவாதத்தை ஒழிப்பது இம்மூன்றைத்தான் ஆரம்பத்தில் காரணங்களாக மோடி அறிவித்தார். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதற்காக, யாருக்காக, எந்த நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டது என்பதை காலப்போக்கில்தான் நாம் புரிந்துகொள்ளமுடிந்தது. திட்டம் அமல்படுத்தியவுடனேயே, ‘கண்ணாடியைத் திருப்பினா, […]

இங்கிருந்து வங்கி எவ்வளவு தூரம்?

இப்போது ‘பே டிஎம்’ (Paytm) விளம்பரம் வந்திருக்கிறது. இதில் நமது பிரதமர் தோன்றி, பணம் இல்லா சமூகத்திற்கு மாறுங்கள் (move to a cashless society) என்று கூறி இருக்கிறார். இனி ஜெய் ஹிந்த் எல்லாம் கிடையாது. இப்போது நமது பிரதமர் விளம்பரத்தில் தோன்றி ஜியோ ஹிந்த் கூறிக் கொண்டிருக்கிறார். என்ன நடந்து கொண்டிருக்கிறது?