கொசஸ்தலை ஆறு & பள்ளிக்கரணை சதுப்பு நிலம் . . . . . . . தீர்வென்ன?

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப மனித வாழ்வோடு அதிக தொடர்பு கொண்டது ஆறுகள். மனிதனின் நாகரிக வளர்ச்சியானது ஆற்றோரங்களில் தான் தொடங்கின. இயற்கை கொடுத்த அருங்கொடைகளில் ஆறுகளும் அடங்கும்.  ஆறுகள் மனிதர்களுக்கு குடிநீர் தேவையை மட்டுமன்றி அவர்களது வாழ்வியல் தேவைகளையும் நிறைவு செய்கின்றன. வேளாண்மை மற்றும் பல வகையான தொழிற்சாலைகள் தண்ணீரையையே நம்பியுள்ளது. இவ்வாறு, பல அற்புதங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஆறுகளை அரசு முறையாக பராமரிக்காமல் அதில் தொழிற்சாலை கழிவுகளையும், குப்பைகளையும் கொட்டுகின்றனர்.   […]