சபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . !

பெண்கள் சபரிமையில் நுழைந்து விடும் சூழல் ஏற்பட்ட போது நான் பத்திரிகையாளர் சந்திப்பில் நாங்கள் நீதிமன்ற தீர்ப்பை மீறுவோம் என கூறினேன். நான் எவரையும் அழைத்து தகவல் சொல்லும் முன்னரே நமது அமைப்பினர் பெண்களை தடுத்து நிறுத்த துவங்கினர். சில தொலைகாட்சிகளில் அது தலைப்பு செய்தியாக மாறியது. மாநில தலைவர் அறிவித்த அரை மணி நேரத்தில் இளைஞர்கள் இதை ஒரு சவாலாக எற்றுக் கொண்டு அங்கு நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்க துவங்கினர் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த […]

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . ! – 5

“இந்தோனேசிய முஸ்லிம்களும் தென்னிந்திய முஸ்லிம்களும்தான் நல்ல முஸ்லிம்கள்” – RSS இறுதியாக முஸ்லிம்கள் குறித்த ஆர்.எஸ்.எஸ் அணுகல்முறை பற்றி ஆன்டர்சன் சொல்வதைக் காணலாம். கோல்வால்கர் முஸ்லிம் ஆட்சியைப் பற்றி, “ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனம்” எனக் குறிப்பிடுவது வழக்கம். நரேந்திரமோடி இன்னும் ஒருபடி மேலே போய், “ஆயிரத்து இருநூறு ஆண்டுகால அடிமைத்தனம்” எனக் கூறத் தயங்குவதில்லை. முஸ்லிம்களின் ஆட்சி சிந்துப் பகுதியில் கி.பி 800 க்குப் பிறகும், டெல்லியில் கி.பி 1000 முதலும் நடைபெற்றது. வரலாற்றாசிரியர்கள் யாரும் பிரிட்டிஷ் […]

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . ! – 4

பெண்கள், இட ஒதுக்கீடு, தீண்டாமை முதலியன குறித்த ஆர்.எஸ்.எஸ் அணுகல் முறைகள் தான் ஏற்பு வழங்கியுள்ள இணை அமைப்புகளிடையே மாற்றுக் கருத்துக்கள் உருவாகும்போது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அதை எப்படிக் கையாள்கிறது? எடுத்துக்காட்டாக சுதேசி ஜாக்ரான் மஞ்ச் வெளிநாட்டு மூலதனம் கூடாது என்கிறது. பா.ஜ.க அரசு வெளிநாட்டு மூலதனத்திற்குச் சலுகை அளித்து வரவேற்கிறது. இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் என்ன செய்யும்? இரண்டுக்கும் இடையே சமரசம் (balance) பண்ணுவதுதான் அதன் நிலை என்கிறார் ஆன்டர்சன். ஒரு இடைத்தரகாக இருந்து […]

அடக்குமுறைக்கு எதிரான குரல்: சோபியா . . . . . . . . !

சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரே பெயர் சோபியா !. ”பாசிச பாஜக ஒழிக” என்று அவர் உதிர்த்த வெறும் மூன்று வார்த்தைகள் தான் நாடெங்கும் அவரை அறியச்செய்தது. சோபியா கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் PhD பயின்று வருகிறார். இவர் தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், 8 வழிச் சாலை என  மக்கள் மீது ஏவப்படும் அநீதிக்கு எதிரான அரசியல் பற்றிய பதிவுகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து […]

தமிழிசைக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

பாரதிய ஜல்சா சாரி பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க.. நாடாளும்(?) வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக் வாட்சப்ல.. சங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட தெரியாத ஆசாமியார் கூட உக்காந்து பேச துப்பில்லாத ஒரு எம்பியைவும் அதுக்கான சாதியையும் அந்த சாதியை […]

எந்த முறையும் இது அவர்களின் அரசு …

முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமான வாக்காளர்கள், பல ஆண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மை அரசு, கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிய தனி நபர் துதி, மேலும் இந்த முறை ஊடகங்கள் சொன்னது நடந்தேவிட்டது. தேர்தல் முடிவுகளுக்கு முன்பே ‘பங்குச் சந்தைகள்’ வரலாறு காணாத உயர்வைக் கண்டன, உடனே செய்தித் தாள்கள் அதற்கு ‘மோடி விளைவு’ என்று பெயரிட்டார்கள். புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில் 10 கட்டளைகள், 100 நாட்களுக்கான திட்டங்கள் என ஒரு பக்கம் கவர்ச்சி அறிவிப்புகள் வந்தபடியிருக்கின்றன. எதிர்பார்ப்புகள் மக்களிடம் […]

ஆர்.எஸ்.எஸ் – ஆக்டோபஸா? அரசியல் இயக்கமா?

என்னங்க பெரிய வித்தியாசத்தைக் கண்டுட்டீங்க? எல்லா கட்சிலயும் தொழிற்சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் என பல சங்கங்கள் வைத்திருக்கலாம். ஆனால் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பல பிரிவுகள் இருந்தால் தப்பா? இது போலத்தான் அதுவும்! இதைப் போய் ஏதோ மகா குற்றம் போலப் பேசுறீங்களே இது சரியா? என்று விபரம் தெரிந்தவர்களே கேட்கிறார்கள். இதைப் பற்றி சற்று விரிவாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது. இந்தியாவில் உள்ள பல கட்சிகளுக்கு இது போன்ற பல […]