ஊருக்கு நல்லது சொல்வேன் எனக்குண்மை தெரிந்து சொல்வேன் ….. பாரதி

‘ பாரதி ‘ எனும் பெயர் உச்சரித்த கணம் நினைவில் வருவது ‘ எட்டையபுரத்தானுக்கிணையான புலவனை எங்காச்சும் பார்த்தியா மாடத்தி ‘ எனும் கரிசல் கிருஷ்ணசாமியின் கம்பீரமும் மென்மையும் குழைந்த குரலில் ஒலிக்கும் பாடல் வரியே ! விநாயகரையும் சக்தியையும் காளியையும் போற்றி எழுதி உருவ வழிபாட்டில் ஆர்வம் கொண்ட பக்திமானாக அவரை அடையாளம் காட்டும் கவிதைகளே பின்னர் உண்மையும் அறிவும் அன்பும் இயற்கையுமே கடவுள் என எழுதியதில் அவரின் பரிணாம வளர்ச்சி நமக்கு அடையாளமாகிறது. குயில்பாட்டின் […]

எங்க வச்ச புத்தியை…..

மெத்தை வீட்டுக் கடையிலே கத்திரிக்கா வாங்கும்போதும் சொத்தை கித்தை வந்துரும்னு குத்த வச்சு பாப்பியே கண்ணாலம் பண்ணும் போது கலைவாணி போல இருந்தும் பொண்ண பத்தி ஊரெல்லாம் அழுங்காம கேட்டியே குத்தகைக்கு விட்டா தோப்பு நூறு கட்டு தேறுமின்னு பெத்த மகன் சொன்ன போதும் ஊரு பூராம் கேட்டியே பரிகாரம் பண்ணலைன்னா பங்கம் வர போகுதுன்னு குறிகாரன் சொன்ன போது எங்க வச்ச புத்தியை