அனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . ! – 1.

இந்திய நாடு அந்நிய ஏகாதிபத்தியத்திடமிருந்து 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் அரசியல் விடுதலை பெற்று, 70ஆண்டுகள் முடிந்து 71-ஆவது ஆண்டு கடந்து கொண்டிருக்கிறது. பல்லாயிரம் ஏற்றத் தாழ்வுகள் மிக்க, பல்வேறு நாடுகளின் குடிமக்களாயிருந்தவர்கள், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு தேச மக்களானார்கள். அவர்களுக்கென ஓர் அரசியல் சட்டம் வந்தது. அது ஜனநாயக உரிமைகள் சிலவற்றைக் கொண்டு வந்தது. மன்னர்கள் இந்திய நிலப்பரப்பை ஆட்சி செய்வதிலிருந்து ஒழிந்தார்கள். ஆனால் மன்னராட்சிக்கால விழுமியங்கள் இன்றும் தொடர்கின்றன. பல நூறு ஆண்டுகால […]