வாய் ஜாலங்கள் – செ.முத்துக்கண்ணன்

இந்தியாவின் பெரிய பொதுத்துறையான ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு பதில் இன்று வரை அந்த துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையையே மோடி அரசு செய்து வருகிறது, அதன் உச்சகட்டம் இரயில்வேக்கான தனிப் பட்ஜெட்டை எடுத்துவிட்டு பொது பட்ஜெட்டோடு இணைத்துவிட்டு ரயில்வேக்கான நிதியை குறைத்து தனக்கான நிதியை ரயில்வே தானே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவு எதை நோக்கி தள்ளுகிறது.

தகவல் தொழில்நுட்ப துறையில் தொழிற்சங்கம் – பரணி

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் அனைவரும் “தொழிலாளி” என்ற வரையரைக்குளேயே வருவர் என்று தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

குறைந்த பட்ச ஊதிய சட்டம் – எஸ்.கண்ணன்

நமது அரசியல் சட்ட குறிக்கோள் அனைவருக்கும் வாழ்வூதியம் கொடுப்பது எனினும், நடைமுறையில் தொடமுடியாத அடிவானமாக இருக்கிறது, என்று நீதிபதி இதயத்துல்லா, 1966ல் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு உருவாக்குவது சாத்தியமே!!!! – எஸ். கண்ணன்

ஒட்டுமொத்தத்தில் பாரபட்சமான அனுகுமுறை அனைத்திலும் வெளிப்படுகிறது, குறிப்பாக சுரண்டலை உயர்த்திப் பிடிக்கிற கொள்கைகளுக்கு, மத்திய மாநில அரசுகள் முன்னுரிமை தருகின்றன. அது உழைப்புச் சுரண்டலாகவோ அல்லது சமூக ஒடுக்குமுறை மூலமான சுரண்டலாகவோ இருக்கிறது. வேலைவாய்ப்பிற்கான போராட்டத்துடன் உழைப்பு மற்றும் சமூக சுரண்டலையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. இதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

தனியார் துறை வேலைவாய்ப்புகள் முப்பது ஆண்டுகள் – எஸ்.பாலா

பணிபாதுகாப்புடன் கூடிய வேலை பணியிடச்சூழல் என்பது நெருக்கடி இல்லாத தன்மையிலும் பெண்கள் பாலியல்ரீதியான பாகுபாடு அற்றதாகவும் உள்ளடக்கி கௌரவமான வேலைக்கான போராட்டத்தை நடத்திட வேண்டியுள்ளது.

அனைவருக்கும் வேலை, கல்வி …தாரக மந்திரமாய்.- இரா.வேல்முருகன்

வாலிபர் சங்கம் தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை முன்னெடுப்பது மட்டுமல்ல வேலைக்கான கோரிக்கை என்றால் அது வாலிபர் சங்கத்தின் கோரிக்கை என்ற உணர்வு ஏற்படும் வகையில் இந்த போராட்டத்தை நாம் தொடர்ச்சியாக நடத்துகிறோம். வேலைக்கான இயக்கம் என்றால் அது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்தான் என்கிற அடையாளத்தை பெற்றிருக்கிறோம். இந்த அடையாளத்தை மாற்றி இந்திய நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெற்று கொடுத்த அமைப்பு என்ற பெருமை நமக்கு மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மக்களையும் இளைஞர்களையும் நேசிக்கும் அமைப்பு.

வேலை நிரந்தரத்திற்கு பொதுத் துறை அவசியம்…

இந்தியாவின் வளர்ச்சி குறித்த கனவில், பெரும் பங்களிப்பு செய்தது பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே.