பண மதிப்பிழப்பு நடவடிக்கை “ஒரு இந்துத்துவ புரிதலில் இருந்து”….!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை (Demonetisation), பிரதமராலும் அவரை முகஸ்துதி பாடிக்கொண்டு  அவருடன் இருக்கும் அவரின் சகாக்களாலும் தவறாக கணக்கிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை மாத்திரமல்ல, இந்துத்துவத்திற்கே உரித்தான தெளிவற்ற, கண்மூடித்தனமான சிந்தனைப்போக்கு இது என்பதில் சந்தேகமில்லை. இந்துத்துவம், தன்னை பொருளாதாரம் என்னும் பெரும் தளத்தில் வெளிப்படுத்திக்கொண்ட தருணம் இது. இந்தளவுக்கு மிகப்பெரிய பேரழிவை, அதுவும் உலகத்தின் மிகப்பெரிய நாடுகளுள் ஒன்றான, ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தொகை உடைய ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே முடக்கிய மிக முக்கிய நடவடிக்கையானதாலோ […]

சானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்

மாதவிடாய் இரத்தம் மற்றும் அதன் புனிதம் பற்றி பேசும் முன், புனிதம், சுற்றுச்சூழல் சம்மந்தமான உங்கள் கருத்து உருவாக்கத்தை உங்கள் மூளையில் இருந்து கழற்றி விடுங்கள். இதை படிப்பதற்கு முன் உங்கள் சாதி சாயம் படிந்த மூளையை தூர வையுங்கள். ஏனென்றால், நீங்கள் தீர்ப்புகளை பகிர்ந்தளிக்கும் நபர் அல்ல.
கோவிலுக்குள் நுழையக் கூடாது. உணவை தொடக்கூடாது போன்ற பல விலக்குகள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன.

வாய் ஜாலங்கள் – செ.முத்துக்கண்ணன்

இந்தியாவின் பெரிய பொதுத்துறையான ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு பதில் இன்று வரை அந்த துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையையே மோடி அரசு செய்து வருகிறது, அதன் உச்சகட்டம் இரயில்வேக்கான தனிப் பட்ஜெட்டை எடுத்துவிட்டு பொது பட்ஜெட்டோடு இணைத்துவிட்டு ரயில்வேக்கான நிதியை குறைத்து தனக்கான நிதியை ரயில்வே தானே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவு எதை நோக்கி தள்ளுகிறது.

பிரம்மாண்ட சிலைகளின் அரசியலும் பொது உளவியலும்!

  இதோ நாடு முழுவதும் மீண்டும் விவாதமாகி இருக்கிறது போலி !? சாமியார் விவகாரம். இம்முறை சர்ச்சையில் சிக்கி இருக்கும் கார்ப்பரேட் சாமியார் தமிழகத்தில் கோவையில் ஆசிரமம் நடத்தும் ஜக்கி வாசுதேவ். யார் இந்த ஜக்கி..? ஜக்தீஷ் இதுதான் ஜக்கியின் இயற்ப்பெயர் 1957 -ல் மைசூரில் பிறந்தவர், தாய் மொழி தெலுங்கு. இதை தன்னுடைய மூன்றாவது பிறவி என்று சொல்லிக்கொள்ளும் அவர்,தன் முதல் பிறவியில் பில்வாஸ் என்னும் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தேன் என்றும், இரண்டாவது பிறவியில் சத்குரு […]

மக்களிடமிருந்து…. மன்னர்களுக்கு….. செ. முத்துக்குமாரசாமி

பிரதமரின் இந்த அறிவிப்புகளும், அதை தொடர்ந்த நடவடிக்கைகளும் நம்முன் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அதற்கான பதில்களை பிரதமரிடம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவர் நாடாளுமன்றத்திலேயே பதில் சொல்வதில்லை.

ஆரோக்கியமாக வாழ்ந்திட யோகா மட்டும் போதுமா? – தாமு

கல்வியும், மருத்துவத்தையும், குடிநீரையும், அரசின் பொறுப்பில் இருந்து தனியார் வசம் ஒப்படைத்துள்ளதால் இவை மூன்றும் காசுள்ளவர்கள் மட்டும் பெறக்கூடி சூழலை உருவாக்கி வாங்கும் சக்தி இல்லாத பெரும் பகுதி மக்களை ஆரோக்கியமற்ற சூழலில் வாழ தள்ளப்பட்டுள்ளனர்.

மோடி அரசு: வரம் கொடுத்த மக்களுக்கு சாபங்கள்…!

என்னைத் தேர்ந்தெடுங்கள் அனைத்தையும் மாற்றிக் காட்டுகிறேன் என்று கேட்டு பிரதமராகிய மோடி அரசின் 2 ஆண்டு அனுபவம் பயங்கர கனவாய் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவுக்கு வந்துள்ள அன்னிய முதலீடு எவ்வளவு?

வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்குகிற கட்டுமான தொழிலிலோ, உற்பத்தி துறையிலோ, மின்சாரம், எண்ணெய் எரிவாயு, உலோகங்களிலோ இந்த முதலீடு பெரிய அளவில் வரவில்லை. இதை பற்றி கவலைப்படாமல் பல நூறு கோடிகள் செலவு செய்து மோடி வெளிநாட்டு சுற்று பயணம் தொடர்ந்து சென்று வருகிறார். கூட்டி கழித்து பார்த்தால், அந்நிய நேரடி முதலீட்டால் இந்தியா இழந்ததுதான் அதிகம்.

யாருக்கு பிரதம சேவகன்?

இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்கள் தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள இயலும் என நமது நிதியமைச்சர் கூறுகிறார். விவசாயிகள் தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள இயலும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறுகிறார். நடுத்தர வர்க்கத்தினரும், விவசாயிகளும் தங்களது நலனை தாங்களே பார்த்துக் கொள்வார்கள் என்ற கருத்தை கொண்டிருப்பதால், இவர்களது நலன் காக்கும் கொள்கைகளை தான் செயல்படுத்திட தேவையில்லை என மோடி அரசு கருதுகிறது

டவுசர் பாண்டிகள் மாநாட்டில் மத்திய அமைச்சர்கள்?!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் அமைச்சர்கள் மதவாத அமைப்பின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு தங்கள் துறையின் நடவடிக்கைகளை விவரிப்பதும், அந்த அமைப்பின் ஆலோசனைகளை கேட்பதும் மிகவும் ஆபத்தானது.