ஜனநாயகத்தின் வழி அன்பெனும் மரம் வளர்ப்போம். . . . . . . . . . !

ஒன்றாம் வகுப்பு சிறுவன் மற்றும் நான்காம் வகுப்பு சிறுமியிடம் உரையாடிக் கொண்டிருந்த போது இருவரும் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் என சில பெயரைக் குறிப்பிட்டனர். அதற்கான காரணங்கள் அல்ல…  ஒரே காரணம்! அந்த ஆசிரியர்கள் யாரையும் திட்டவோ,  அடிக்கவோ, தண்டனை தரவோ மாட்டார்கள் என்பதே! இவர்களைப் போன்ற பிஞ்சு மனங்களை புரிந்து அவர்களை வசப்படுத்துவது பற்றிய நோக்குடனே ஆசிரியர் மாணவர் உறவு பற்றியும் கல்வி செல்லும் திசைவழி குறித்தும் நீண்ட காலமாக பலவகை பேச்சுகளும் இருந்து வருகின்றன. […]

பொறியியல் படிப்பு ஒரு பார்வை – அருள்

தேவையற்ற, பயனற்ற, உயிரற்ற அறிவியல் திறன்களை மாணவர்களிடம் திணிப்பதும் எந்த தகவலுக்கும் சம்பந்தமில்லாத பணியையும், வாழ்வையும் மாணவர்கள் தேர்ந்தெடுப்பதும் மிக மிக கொடுமையானதாகும்.

தமிழகக் கல்வியின் உடனடித் தேவைகள் முனைவர். என்.மாதவன்

கல்வி என்பது பண்படுத்துவது, எளிமையான வாழ்க்கைக்கு இட்டுச்செல்வது என்ற கருத்தோட்டமெல்லாம் காலாவதியாகிப் போயுள்ளது. படித்து பட்டம் வாங்கி கார் பங்களாவெல்லாம் வாங்கவேண்டும் என்பது ஆண்டாண்டுகாலமாக கல்விக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த வகையில் பனிரெண்டாம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களே வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக அமைந்துவிடுகின்றன

கேம்பஸ் இன்டர்வியூ எனும் மோசடி – அலகுநம்பி வெல்கின்

இந்திய நாட்டு இளைஞர்களை மனிதர்களாக மதிக்காத அன்னிய நாட்டு நிறுவனத்தை கேள்வி கேட்க நம் நாட்டு ஆட்சியாளர்களுக்கு துப்பில்லை.
இதுவரையிலும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக் கிடந்த இளைஞர்கள் வேறு வழியின்றி வீதியில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர்.

ரோகித்தைக் கொன்ற சாதியம் – ச.நெல்சன் மண்டேலா.

பல்கலை நிர்வாகமும், மத்திய அரசும் கொடுத்திருந்த அழுத்தங்களை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னுடைய சிறப்பான எதிர்காலத்திற்கு தன்னிடமிருந்த ஒரே வாய்ப்பையும் பறிக்கப்பட்டதை ரோ`ஹித்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இத்தகைய வலுவான ஒடுக்குமுறை கட்டமைப்புகள் தான் ஒரு சமூகநீதிக்கான போராளியாக இருந்தபோதிலும், சாதியப்பாகுபாடுகளால் பாதிப்படைந்த நபராக ரோஹித்தை மாற்றியிருக்கிறது.

அவசர காலத்தை நோக்கி இந்தியா – ராகுல் (ஆராய்ச்சி மாணவர், ஜேஎன்யூ)

மத்திய பலகலைக்கழக மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவித்தொகையை பெறுவதற்கான பயனாளிகளுக்கான எண்ணிக்கையை குறைக்க எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக பல்கலைக் கழக மானியக் குழு வளாகத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி இந்த அரசின் உயர் கல்வி தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் சவால் விடுத்தனர். இந்த போராட்டங்களை பல முறை தடியடியும் கண்ணீர் புகை குண்டுகளும் வீசி ஒடுக்க நினைத்தும் அரசால் கட்டு படுத்த முடியாமல் போனது. தற்போதைக்கு அந்த முடிவை தள்ளிப் போட மாணவர் போராட்டங்களால் முடிந்தது.

உடைப்பட வேண்டிய சாதிய ஆதிக்கம் – தீபா

“நீ எல்லாம் பண்ணிமேய்க்கதான் லாய்க்கு”, “நீ எல்லாம் படிச்சு என்ன பண்ணபோற”, “உனக்கு எல்லா படிப்பு வராது”,

இந்தியாவை ஆள்வது மத, சந்தை பொருளாதார அடிப்படைவாதமங்கள் – பி.சாய்நாத்

இன்றைய இந்தியாவில் 100 பில்லியனர்கள் இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் அதாவது 80 கோடி மக்களின் சொத்துக்களை விட இந்த 100 பேரின் சொத்து மதிப்பு அதிகம்.

எரிக்கப்பட்ட கல்விக்கடன் பத்திரங்களும், எழுச்சிமிகு மாணவர் போராட்டங்களும்…

உலகிலேயே சிலி நாட்டில்தான் கல்விக்கு அரசு செலவிடும் தொகை மிகக்குறைவாக இருக்கிறது. அதிலும் உயர்கல்விக்கான செலவு மொத்தமும், ஏறத்தாழ மாணவர்களின் தலையிலேயே விழுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கழகம் என்கிற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வின்படி சிலி நாட்டின் உயர்கல்விக் கட்டணம் தான் பெரும்பாலான வளரும் நாடுகளிலேயே மிக அதிகம் என்று தெரியவந்திருக்கிறது. நார்வே, ஸ்வீடன் போன்ற ஸ்கேன்டிநேவியன் நாடுகளில், உயர்க்கல்விக்கான செலவில் 5-10% மட்டுமே மாணவர்கள் செலுத்த வேண்டும்; மீதித் தொகையினை அரசே ஏற்றுக்கொள்கிறது. அதுவே, […]

ஒரு தோழியின் கதை

ஒரு தோழியின் கதை | இரா.நடராசன் | புக்ஸ் பார் சில்ட்ரன் | பக்: 64 | விலை:40/-  ஒரு தோழியின் கதைக்குள் போகும் முன் இப்புத்தகத்தின் ஆசிரியரை பற்றி கொஞ்சம் பேசியாக வேண்டும். ஒரு பக்கம் மொழிபெயர்ப்பு பணிகள் இன்னொரு பக்கம் கல்வி சார் உளவியல் குறித்த ஆய்வுகள், அறிவியல் புனைவுகள், சிறார் இலக்கியம், கட்டுரைகள் என நீளும் படைப்பாக்கத்தின் அனைத்து தளத்திலும் தன் ஆளுமையை விஸ்தரித்திருக்கும் எழுத்தாளர் நடராசன் அவர்களின் சமீபத்திய வரவான “இது […]