கௌரி லங்கேஷ் – நம் காலத்திய அக்கம்மாதேவி

கௌரியின் சித்தாந்தங்கள் எவ்வித அமைதியுமின்றி இம்மண்ணில் கிடத்தப்பட்டுள்ளது. நிச்சயம் ஒருநாள் அவருடைய சித்தாந்தங்களும் கருத்துக்களும் உயிர்த்தெழும்

மாரீச மான் – க.கனகராஜ்

இந்துத்துவாவை வரையறுத்த சாவர்க்கர் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நாத்திகர். அவரது மனைவி மரணமடைந்த போது இந்து முறைப்படி அடக்கம் செய்யக்கூடாது என்றும், சடங்குகள் எதுவும் செய்யக்கூடாது என்றும் உறுதியாக மறுத்து விட்டார். அவருடைய இந்துத்துவாவை கடைபிடிப்பவர்கள்தான் இந்துத்துவா என்பதை இந்து மதத்தோடும், மக்களோடும், கடவுளோடும் சில உணவுப்பழக்க வழக்கங்கள், உடை பழக்க வழக்கங்களோடும் இணைத்து மக்களை மோத விடுகிறார்கள்.

தமிழிசைக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

பாரதிய ஜல்சா சாரி பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க.. நாடாளும்(?) வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக் வாட்சப்ல.. சங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட தெரியாத ஆசாமியார் கூட உக்காந்து பேச துப்பில்லாத ஒரு எம்பியைவும் அதுக்கான சாதியையும் அந்த சாதியை […]

இந்தியாவை ஆள்வது மத, சந்தை பொருளாதார அடிப்படைவாதமங்கள் – பி.சாய்நாத்

இன்றைய இந்தியாவில் 100 பில்லியனர்கள் இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் அதாவது 80 கோடி மக்களின் சொத்துக்களை விட இந்த 100 பேரின் சொத்து மதிப்பு அதிகம்.

அய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..

“ஹேவ் எ கோக், வாட்ச் த கல்ஃப் வார் அலைவ்” (கோகோ கோலா அருந்துங்கள், வளைகுடா போரை நேரடி ஒளிபரப்பில் கண்டு களியுங் கள்) என்று எழுதி வைத்திருந்ததை பத்திரிகையாளர் பி. சாய்நாத் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார்.

மதம் அதன் இயல்பில் இல்லாதபோது

இப்போது பிரச்சினை மதம் அல்ல. மதவாதம்தான். காந்தியை விட சிறந்த இந்து மதப்பற்றாளர் யாரும் இல்லை. ஆனால் அவர் மதத்தை தனக்கான தனிப்பட்ட பண்பாக வைத்திருந்தார். அதனால்தான் அவரது பிராத்தனைக் கூட்டங்களில் ஈஸ்வர அல்லா தேரே நாம் என முழங்க முடிந்தது.

ஈஸ்வர அல்லா தேரே நாம் – பேராசிரியர் அருணன்

வி.பி.சிந்தன் ஒரு சித்தாந்தவாதியாக மட்டுமின்றி களப் போராளியாகவும் வாழ்ந்து காட்டினார். அவர் நினைவாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரிகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான வரிகள். கடவுளைப் பார்த்து ஈஸ்வரனும் நீதான், அல்லாவும் நீதான் என்று கூறுவது உண்மையான மதநல்லிணக்கவாதிகளுக்குத்தான் சாத்தியம். கடவுளுக்கு இந்த இரண்டு பெயர்கள் மட்டுமல்ல, வேறு பல பெயர்களும் உண்டு என்ற நல்ல புத்தியை எல்லோருக்கும் கொடு (சப்கோ சன்மதி தே பகவான்) […]

மதமாற்றப் பிரச்சனைக்கு ஒரு ‘மார்க்கெட்’ தீர்வு !

மதமாற்றத்திற்கு கையாளும் பணத்தில் 100 சதவீதம் ஸ்டாம்ப் டியூட்டி செலுத்த வகைசெய்யும் வழியில் பதிவுச் சட்டத்தை திருத்த வேண்டும். அரசாங்கத்திற்கும் நல்ல வருமானம் கிடைக்கும். இப்படிப் பதிவு செய்துவிட்டால்தான் அவர்கள் ஏமாற்றப்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும்.

மேற்கு உ.பி கலவரங்கள்; சஹரான்பூரில் நடந்தது என்ன?

பதற்றம் நிலவும் பகுதி என்று தெரிந்தும், ஜாட் இன மக்களை அணிதிரட்டும் நோக்கத்துடன் வழக்கமான சாதிப்பஞ்சாயத்தாக நடைபெறுகிற ஜாட் இன மகா பஞ்சாயத்தை மொராதாபாத் மாவட்டத்திலுள்ள காந்த் எனும் நகரில்நடத்துவதற்கு பாஜக முயற்சி மேற்கொண் டது. இதையொட்டி காந்த் நகரிலும் சர்ச்சைகளும், கலவரச்சூழலும் எழுந்தது.

மாம்பழக் கலர் சட்டையும் மதச் சார்பும்!

சரவணம்பட்டியில சுப்பரமணியத் தெரியாத ஆளே இருக்க முடியாதுங்க. “அன்னாடும் மாம்பழக்கலர் சட்ட போட்டிருப்பானே, அந்த சுப்பரமணி வூடெது”ன்னு கேட்டீங்கன்னா, ஊளைமூக்கொழுக்கீட்டிருக்கற கொழந்த கூட ரெண்டாவது தெரு மூணாவது வூடுன்னு செரியாச் சொல்லிப்போடும்ங்க. எனக்கு வெவரந்தெரிஞ்ச நாள்லருந்து அவன் மாம்பழக் கலர் சட்டை தான் போடுவானுங்க.