ப்ளாஸ்டிக் அரிசி, முட்டை & பால் ஆகியவை வதந்திகளே . . . . . . . !

ப்ளாஸ்டிக் அரிசி, முட்டை, பால் ஆகியவை வதந்திகளே என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக கேள்விக்குறியுடனான தலைப்பை போடுவதும் கூட அவசியமில்லாமல் ஒரு வதந்தியை உயிரோடு வைத்திருக்கும். ப்ளாஸ்டிக் அரிசி, ப்ளாஸ்டிக் முட்டை, ப்ளாஸ்டிக் பால் என்று பலவிதமான வதந்திகள் நம்மை ஆட்கொள்கின்றன. உண்மைதானா? நாம் உணவை வாங்கிவருகின்ற ப்ளாஸ்டிக் கவரைப் போன்றதுதானா நாம் சாப்பிடும் உணவும்? … பலருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கும் இந்த செய்தி உத்திரபிரதேச ஊடகங்களால் ஒளிபரப்பப்பட்டு இன்று நாடு முழுவதும் பரபரப்பாகியுள்ளன. […]