“என் பெயர் சா.ராஜலட்சுமி”

சேலம் நெடுஞ்சாலையில் ஆத்தூரை கடக்கும் போது இடது பக்கம் தென்படும் மலை பகுதியின் கடைசி குன்றில் தான் அந்த கிராமம் இருக்கிறது. இந்தியாவின் அரசியலைமப்பு சட்டத்திற்க்கோ, வளர்ச்சிக்கோ, பொருளாதாரத்திற்கோ எந்த வகையிலும் தொடர்பற்ற ஒரு கிராமம், பட்டேல் சிலையின் மிக உயரமான 182 மீட்டர் உயரத்தில் இருந்து பார்த்தால்கூட அதிகார அமைப்பின் கண்ணுக்கு புலப்படாத ஒரு சேரி, முதலமைச்சரின் மாவட்டம், அதிமுகவின் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி தான் இந்த தாளவாய்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஈச்சம்பட்டி. தாளவாய்ப்பட்டியில் இருந்து […]

நீயா? நானா? வின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டதா . . . . . ?

விஜய் டிவி யின் நீயா நானா நிகழ்ச்சி மற்றும் அதன் தயாரிப்பாளர் ஆண்டனி மீது என்னைப் போல் பலரும் மதிப்பு வைத்துள்ளனர். ஆனால் நேற்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் விவாதம் கவனித்த என்னைப் போன்ற பலரும் ஆண்டனியின் அணுகுமுறை கண்டு அதிர்ச்சியடைந்தோம். கேரளப் பெண்கள் அழகா ? தமிழகப் பெண்கள் அழகா ? என தலைப்பிட்ட விவாதத்தின் முன்னோட்டமே ஆட்சேபனைக்குரியதாக இருக்க அது வாக்கெடுப்பிற்கும் விடப்பட்டது என்பது மறைக்கப்பட்ட சேதியே! ஆண்டனி மற்றும் நீயா? நானா? இயக்குநர் […]

தோல்வி கருத்தியலாகவே நிலைத்திருக்கப் போகிறதா பெண்ணியம்?

கொலைகளையும் பிணங்களையும் பார்த்து பார்த்து பழக்கப்பட்ட, மனித உரிமை மீறல்களோடு போராடும் கதிர் (Vincent Raj) கலைச்செல்வியை பார்த்தப் பின்னர் ’தன் அனுபவத்தில் இப்படியொரு கொடூரத்தைக் கண்டதில்லை’ என்கிறார். அந்த வரிகள் உண்டாக்கிய பதற்றம் அடங்கவே இல்லை. தலித் பெண்கள் இவ்வாறே கொடூரமாக சிதைக்கப்பட்டு கேட்பாரற்று மறக்கப்படுகின்றனர். நிர்பயா, சுவாதி போன்ற ஆதிக்க சமூகத்தை சேர்ந்த பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்படும் போது அதை தனக்கு நடந்த கொடூரத்தைப் போல கொந்தளிப்பவர்கள் சுரேகா-பிரியங்கா, ஜிஷா, கலைச்செல்வி […]