பழம்பெருமைகளில் நிரம்பிக் கிடக்கும் ஆணாதிக்கக் கூறுகள் . . . . . . . . !

பெண்கள் உடலுழைப்பில் ஈடுபடுவது, அவர்களை நோயிலிருந்தும் சிசேரியன் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் காக்கும் என்பது போன்ற விவாதங்களை சமூக ஊடகங்களில் அடிக்கடி காண நேர்கிறது. நான் சொந்த வாழ்க்கையில் இருந்தே இதைப் புரிந்துகொள்ள முயல்கிறேன். எனது சிறுவயதில், குழந்தைகள் நாங்கள் மட்டும் ஐந்து பேர். அப்பா அம்மா தாத்தா பாட்டி சேர்த்தால் ஒன்பது பேர். தோப்பில் மட்டை முடையும் ஆட்கள், வயலில் வேலை செய்யும் ஆட்கள் என வாரத்தில் இரண்டு நாட்களுக்கு குறைந்தது பத்து பேர் கூடுதலாக […]

சானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்

மாதவிடாய் இரத்தம் மற்றும் அதன் புனிதம் பற்றி பேசும் முன், புனிதம், சுற்றுச்சூழல் சம்மந்தமான உங்கள் கருத்து உருவாக்கத்தை உங்கள் மூளையில் இருந்து கழற்றி விடுங்கள். இதை படிப்பதற்கு முன் உங்கள் சாதி சாயம் படிந்த மூளையை தூர வையுங்கள். ஏனென்றால், நீங்கள் தீர்ப்புகளை பகிர்ந்தளிக்கும் நபர் அல்ல.
கோவிலுக்குள் நுழையக் கூடாது. உணவை தொடக்கூடாது போன்ற பல விலக்குகள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன.

வரலாற்று புரிதலொடு மாற்றத்தை எதிர்கொள்வோம் துணிச்சலோடு – பேரா. சுபா

இடஓதுக்கீடு மற்றும் வயதுவந்தோருக்கான வாக்குரிமை என்ற நோக்கங்களோடு போராடி 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின்படி 6 மில்லியன் பெண்கள் வாக்குரிமை பெற்றனர்.

கவுரவத்தின் பெயரால் கனவான்களே! – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

சாதிய சமூகத்தில் தங்களின் கவுரவத்தை கட்டிக்காக்கவும், அதற்காக எந்த விலையையும் தருவதற்கு தயாராய் இருக்கும் குடும்பங்களே பெரும்பாண்மையாய் இருக்கிறது.

நிர்பயா தினமும் நில்லாத பயமும் – சுசீந்திரா

உலக அளவில் நாள்தோறும் 35 சதமான பெண்கள் அதாவது சராசரியாக 3 க்கு 1 பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனக் கூறுகிறது சமீபத்திய உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. அதிலும் 30 சதம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதையும் நிரூபித்துள்ளது. இவர்களில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களில் 38 சதம் பெண்கள் தங்களுக்கு தெரிந்த நபர்களாலேயே வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனவும் கூறுகிறது அவ்வறிக்கை. “உணர்வுள்ள அனைவருக்கும் உயிர்த்தல் பொதுவானதே” என்கிற போது ஒரு பாலினத்தின் மீது மட்டும் இத்தனை வன்முறையென்பது எந்த நியாயத்தை கூற முடியும்?

உச்சத்தை தொட்ட சாதனைப் பெண்கள் – இரா.சிந்தன்

ஆர்.எஸ்.எஸ் பின்பற்றும் சித்தாந்தம், எந்த வகையான சீர்திருத்தங்களுக்கும் எதிரானது. பெண்களைக் குறித்து பிற்போக்கான சித்தாந்தங்களையே கொண்டிருக்கிறது.

கேள்விக்குறியாகும் நம் குழந்தைகளின் எதிர்காலம் – அன்பு வாகினி

முதல் ஆயிரம் நாட்களில் கொடுக்கப்படும் ஊட்டச்சத்தானது குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை மற்றும் அறிவு சார்ந்த வளர்ச்சி, வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி அக்குழந்தையின் எதிர் கால வாழ்நாள் முழுவதற்கும் வழங்குகிறது.

திரைமறைவில் இருக்கும் உழைப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் – சுசீந்திரா

இந்திய நாட்டில் 27 சதம் பெண் தொழிலாளர்கள் பொருளாதார சந்தையில் ஓர் உற்பத்தி அங்கமாக உள்ளனர் என உலக பெண்கள் அறிக்கை கூறுகிறது. ஆனால் அவர்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக ஒரு நாளில் ஊதியமில்லாமல் 400 நிமிடங்கள் உடல் உழைப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றனர் எனவும் கூறுகிறது அவ்வறிக்கை.
எனில் ஓர் பெண் தொழிலாளரின் மொத்த உழைப்பும் பொருளாதார சந்தையில் உற்பத்தி கணக்கில் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது எனலாம்.

கல்வி நிலையங்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள் – வசந்தி

இந்தியாவில் ஓன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் 100 ஆண் குழந்தைகளில் 39 குழந்தைதான் எட்டாம் வகுப்பவரை பள்ளியில் தக்க வைக்கப்படுகின்றனர்கள். அதிலும் 23 குழந்தைகள் மட்டுமே பத்தாம் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கின்றனர். இதே 100 பெண்குழந்தைகளில் வெறும் 17 குழந்தைகளே எட்டாம் வகுப்புவரை போகிறார்கள். கல்லூரிக்கு மூன்று பேர்தான் அடியெடுத்து வைக்கிறார்கள்.

கொலை செய்வது கௌரவமானதா?

விலங்குகள் கூட உணவுக்காக மட்டுமே மற்ற விலங்கை கொல்கிறது. அதுவும் கூட தன் இனத்தைக் கொல்வது கிடையாது. ஆனால், மனிதர்கள்? குடும்பக் கலாச்சாரத்தையே தன் அடையாளமாகக் கொண்டுள்ள நம் நாட்டில் தான் தாத்தா, தந்தை, தாய் மற்றும் சகோதரரால் தங்கள் வீட்டுப் பெண்களை கொலை செய்யும் “உயர்ந்த” கலாச்சாரம் இருக்கிறது.