மத்திய பட்ஜெட் 2018 – 19: ஜும்லா, பக்கோடா பட்ஜெட் . . . . . . . . . !

அவர்கள் சரியாகச் சொல்வார்கள், ஆனால் பொய் சொல்வார்கள். இது என்ன குழப்பம்? ஒரே நேரத்தில், இரண்டும் எப்படி சாத்தியம்? ஆம். அவர்கள் தகவலைச் சரியாகச் சொல்வார்கள். ஆனால், எதார்த்தத்தில் உண்மையை மறைப்பார்கள். கேளுங்கள் இதோ! “இந்தியாவில் விமானப் பயணம் மிகவும் மலிவானது. ஆட்டோ ரிக்சா பயணத்தை விட மலிவானது.” இதைச் சொல்லியிருப்பவர் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா. இதைக் கேட்டவுடன், நாளையிலிருந்து எல்லாரும் விமானத்தில் பயணம் செய்யலாம் போலத் தோன்றுகிறது […]

பஞ்ச கவ்ய மருந்துகள், அறிவியல் அவமானம் …

மோடி அரசு ஒரு பக்கம் மக்களை பணமதிப்பை குறைத்து வாட்டி வதைக்கின்றது. மறு பக்கம் சத்தமில்லாமல் பல்வேறு சித்து வேலைகளை ,இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கு பதவியில் இருக்கும் காலத்தை முழுமையாக பயன் படுத்துகிறது . விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியை முடக்குவது, அதன் பெருமைகளை சிறுமைப்படுத்துவது, அதை வேத காலத்தோடு ஒப்பிடுவது, புராணங்களிலேயே இது போன்றவை சொல்லப்பட்டுள்ளது என பொய் பிரச்சாரம் செய்வது என மோடி முதல் காவிக்கூட்டத்தின் அனைவரும் பேசி வருகின்றனர். அரசின் நடவடிக்கைகளிலேயே […]

யோகா வரலாறு.

சமீபத்தில்  அதிகமாக  விமர்சனமாக்கப்பட்ட  வார்த்தை  “யோகா”. பிஜேபி  என்ற  கட்சி உருவாவதற்கு எழுபது ஆண்டுகளுக்கு  முன்னமே  யோகா  வெளிநாட்டினரிடம்  பிரபலமாகிவிட்டது.  ஆட்சியில்  அமருவதற்கு  இருபது  வருடங்களுக்கு  முன்னமே  யோகா  வெளிநாட்டினரிடம்  பல  பரிமாணங்களை  எடுத்துவிட்டது. மருத்துவ  மற்றும் அறிவியல்  பூர்வமாக  ஆராய்ச்சிகளும் நடந்துவிட்டன.  அப்படி  இருக்கும்  போது பிஜேபி  இப்போது  யோகாவுக்கு  இவ்வளவு  முக்கியத்துவம்  கொடுப்பதின்  நோக்கம்  என்ன? பிரதமர்  மோடி  அவர்கள்  குஜராத்தின்  முதல்வராக  இருந்த  போது  தன்  மாநிலத்தில்  யோகாவை  பள்ளிகளில்  முதன்மை  படுத்தாமல் […]