தீபாவளி கொண்டாடுவது யார்? யாருக்காக? -பேரா.தொ.ப.

இன்று தமிழ் நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளியாகும். நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி,எண்ணெய்,மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச்சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் “தேசியத் திருவிழா” போலக் காட்டப்படுகிறது. தீபாவளி, தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத் தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும். பார்ப்பனீயத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியைக் குறிக்கும் வெடி, அதன் மூலப்பொருளான வெடி […]