இஸ்ரேல் ஏன் உருவானது? அதுவும் இன்றைய இஸ்ரேலிய நிலத்தில் ஏன் உருவானது?

இஸ்ரேல் உருவான வரலாற்று நிகழ்வுக்குப் பின்னால், யூதர்களின் மீதான இனவொடுக்குதல் இருப்பினும், அதனோடு சேர்ந்து முதலாளித்துவவெறியும், ஏகாதிபத்திய வெறியும் கலந்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், இஸ்ரேல் உருவானதன்மூலம், அதிக இலாபமடைந்ததும் அந்த வெறிகள்தான். இப்புள்ளியில் விவாதத்தை துவக்கிடவேண்டும் என்ற விருப்பத்தில், “பாலஸ்தீனம் – வரலாறும் அரசியலும்” நூலில் (அடிப்படை நோக்கத்திலிருந்து அதிகமாக விலகச்சென்றுவிடக் கூடாது என்பதற்காக)  இலேசாக அதனைத் தொட்டுச்சென்றிருக்கிறேன். இஸ்ரேன் ஏன் உருவானது? அதுவும் இன்றைய இஸ்ரேலிய நிலத்தில் ஏன் உருவானது? இக்கேள்விக்கு இன்று சொல்லப்படும் பதில் […]

இஸ்ரேல் உருவாகக் காரணமான ‘டேர் யாசின் படுகொலை’ (ஏப்ரல் 9)

#வரலாற்றில்இன்று #பாலஸ்தீனம் #இஸ்ரேல் #DeirYassinMassacre #9April1948 1948இல் இஸ்ரேல் என்கிற தேசம் பாலஸ்தீன நிலத்தில் உருவாக்கப்பட்டது. அதற்காக அங்கே நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்த மக்கள் அடித்துவிரட்டப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக இர்குன் என்கிற சீயோனிச பயங்கரவாதக்குழு (இன்றைய ஐ.எஸ்.ஐ.எஸ். சுக்கு இணையானது) ஜெருசலத்தின் அருகில் இருக்கும் டேர் யாசின் என்கிற கிராமத்தினைசுற்றிவளைத்தது. ஊரில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களை அங்கேயே சுட்டுக்கொன்றனர் இர்குன் பயங்கரவாதிகள். எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பதில் முரண்பட்ட தகவல்கள் நிலவுகின்றன. ஆனால் அக்கிராமத்தில் இருந்த […]

பாலஸ்தீன சண்டை நிறுத்தம் – 26 வழிகளில் மீறிய இஸ்ரேல்

‘பாலஸ்தீன இயக்கங்கள் இஸ்ரேலை தாக்கின, அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது’ என்றுதான் பாலஸ்தீனை இஸ்ரேல் தாக்குகிறபோதெல்லாம் அதனை ஆதரிக்கும் நடுநிலையாளர்களும்(?!?), இஸ்ரேலிய ஆதரவாளர்களும், அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் காலம் காலமாக நியாயம் சொல்லிக்கொண்டிருகின்றனர். ஆனால் உண்மை நிலவரம் என்ன? கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில், ‘பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ்தான் இஸ்ரேலின் மீது முதலில் தாக்குதல் நடத்தியது’ என்று பொய் பிரச்சாரம் நடத்தி, காசா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். ஹமாஸை அழிக்கிறேன் பேர்வழியென்று, 2150க்கும் மேற்பட்ட அப்பாவி […]