அலி வஸீர் – போராட்டமும், தியாகமும்…….!

சமீபத்தில் நடந்துமுடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹிரிக்-இ-இன்சாஃப் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இது இம்ரான் கான் பிரதமராகும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் தினத்தன்றே வெடிகுண்டுத் தாக்குதல்களால் உயிரிழப்புகள் நடக்குமளவிற்கு தீவிரவாதம் பரவிக்கிடக்கும் பாகிஸ்தானில், இந்தமுறையும் நிலப்பிரபுக்கள், ஊழல்வாத முதலாளிகள், ராணுவ மற்றும் நீதித்துறை கைக்கூலிகள்தான் நிரம்பியிருக்கிறார்கள் என்கிறது களநிலவரம். இருப்பினும், பஸ்துன் தஹாஃபஷ் இயக்கத்தின் சார்பில் இரண்டு இடதுசாரி பிரதிநிகள் நாடாளுமன்றத்தில் மக்கள் குரலாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாகிஸ்தான் மக்களிடையே […]

இது நமக்கான போர் அல்ல…!

இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்குள்ளும் தொடர்ந்து காஷ்மீர் எல்லை தொடர்பான பிரச்சனை நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. காஷ்மீர் இந்தியர்களுக்கா? இல்லை பாகிஸ்தானுக்கா? என்று ஏதோ இரு குழந்தைகள் ஒரு பொம்மைக்கு சண்டையிடுவது போல் மாறி மாறி உரிமை கொண்டாட முயல்கின்றன.  குழந்தைகளாவது உயிர், உணர்ச்சியற்ற ஒரு பொம்மையுடன் விளையாடுகின்றன, ஆனால் காஷ்மீர் என்று பெயர் கொண்ட இடத்தில் உயிருள்ள, உணர்ச்சியுள்ள ஒரு பெருந்திரள் மக்கள் கூட்டமே வசித்து வருகிறது. பொம்மையிடம் விருப்பம் கேட்க முடியாது, ஆனால் […]

பாகிஸ்தான் பிரதமரை மோடி அழைத்தது ஏன்?

(சார்க் நாடுகளின் பிரதிநிதிகளை தனது பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருக்கிறார் நரேந்திர மோடி, தேர்தல் பிரச்சார காலத்தில் அவர் அண்டை நாடுகள் குறித்து என்ன பேசினார் என்பதை நாம் அறிவோம். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நடந்திருப்பது தலைகீழ் மாற்றம்தான். இந்த மாற்றத்திற்கான காரணத்தை நமக்கு அறிவிக்கிறது ‘ட்ரூத் ஆப் குஜராத்’ இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையைத் தழுவிய இந்த பதிவு)