பரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . ?

பரியனைத் தெரியுமா உங்களுக்கு? எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? எதையோ கற்றுக் கொள்ளப் போகிறோம் என்ற ஆர்வத்தோடு அரசுப்பள்ளியில் சேர,  வகுப்பறைகளில் வரிசையாக எழுந்திருக்க சொல்லி, சாதிப்பெயரை கேட்கும் போது, எல்லோரும் சத்தமாக தங்கள் சாதிப்பெயரை சொல்லி அமர, சக மாணவ மாணவிகள் & ஆசிரியர் முன்னால் தன் சாதிப் பெயரை மென்று முழுங்கி சொல்லி விட்டு, புழுவைப்போல் கூனிக்குறுகி ஒருவன் அமர்ந்திருப்பான். ”அப்பா என்ன பண்றாங்க” எனும் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல், செருப்பு தைத்தோ, மலம் அள்ளியோ, சாக்கடை […]

பரியேறும் பெருமாள் பி.ஏ பி.எல் மேல ஒரு கோடு . . . . . . . . . . !

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி பதம் பார்த்தது. அந்தக் கவிதை சுமந்து வந்த அன்பு, மனிதம், கோபம், வலி எல்லாமே அப்பழுக்கில்லாத நேர்மையை பிரதிபலித்தது. அந்த நேர்மையை கட்டித் தழுவலாம், முத்தமிடலாம், பிரதிபலன் பாராத அன்பினைத் தரலாம். அந்தக் கவிதையின் தலைப்பு “பரியேறும் பெருமாள்”, எழுதியவர் மாரி செல்வராஜ். வரவேற்பும், வாழ்த்துகளும் மாரி செல்வராஜுக்கு. […]