21 ஆம் நூற்றாண்டில் தொழிலாளி வர்க்கம் என்ற ஒன்று உள்ளதா ?

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவந்து 170 ஆண்டுகள் ஆகி விட்டன. பாரிஸ் கம்யூன் உருவாகி 150 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதனை மனிதன் சுரண்டும் அவல நிலைமையில் இருந்து முதன் முதலில் மனிதனுக்கு விடுதலை தந்த 20 ஆம் நூற்றாண்டு கண்ட மாபெரும் விஞ்ஞான நிகழ்வுகளுள் ஒன்றான ரஷ்ய புரட்சி நடந்து 100 ஆண்டுகள் ஆகி விட்டன. இதன் தாக்கத்தில் பின்னர் உண்டான சீன, வியட்னாம், கியூப புரட்சி ஆகியன முடிந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. யாவற்றிற்கும் மேலாக […]

திரைமறைவில் இருக்கும் உழைப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் – சுசீந்திரா

இந்திய நாட்டில் 27 சதம் பெண் தொழிலாளர்கள் பொருளாதார சந்தையில் ஓர் உற்பத்தி அங்கமாக உள்ளனர் என உலக பெண்கள் அறிக்கை கூறுகிறது. ஆனால் அவர்கள் தங்கள் வாழ்நாளில் சராசரியாக ஒரு நாளில் ஊதியமில்லாமல் 400 நிமிடங்கள் உடல் உழைப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றனர் எனவும் கூறுகிறது அவ்வறிக்கை.
எனில் ஓர் பெண் தொழிலாளரின் மொத்த உழைப்பும் பொருளாதார சந்தையில் உற்பத்தி கணக்கில் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது அல்லது மறைக்கப்படுகிறது எனலாம்.

தகவல் தொழில்நுட்ப துறையில் தொழிற்சங்கம் – பரணி

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்யும் அனைவரும் “தொழிலாளி” என்ற வரையரைக்குளேயே வருவர் என்று தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

குறைந்த பட்ச ஊதிய சட்டம் – எஸ்.கண்ணன்

நமது அரசியல் சட்ட குறிக்கோள் அனைவருக்கும் வாழ்வூதியம் கொடுப்பது எனினும், நடைமுறையில் தொடமுடியாத அடிவானமாக இருக்கிறது, என்று நீதிபதி இதயத்துல்லா, 1966ல் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு உருவாக்குவது சாத்தியமே!!!! – எஸ். கண்ணன்

ஒட்டுமொத்தத்தில் பாரபட்சமான அனுகுமுறை அனைத்திலும் வெளிப்படுகிறது, குறிப்பாக சுரண்டலை உயர்த்திப் பிடிக்கிற கொள்கைகளுக்கு, மத்திய மாநில அரசுகள் முன்னுரிமை தருகின்றன. அது உழைப்புச் சுரண்டலாகவோ அல்லது சமூக ஒடுக்குமுறை மூலமான சுரண்டலாகவோ இருக்கிறது. வேலைவாய்ப்பிற்கான போராட்டத்துடன் உழைப்பு மற்றும் சமூக சுரண்டலையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. இதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

அன்னிய மூலதனம் ‘டிஸ்கனெக்டிங் பீப்பிள்’ …

கனெக்டிங் பீப்பிள் (Connecting people) என்ற நோக்கியா வாசகம் டிஸ்கனெக்டிங் பீப்பிள் (Disconnecting people) என மாறி 5 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் இளைஞர்களை வீட்டிற்கு அனுப்பி உள்ளது. இதற்கு நோக்கியா நிறுவனம் சூட்டிய பெயர், விருப்ப ஓய்வுத் திட்டம். அதிகமாக தமிழ் குரல் எழுப்பிய இயக்கங்களோ, தேசியக் குரல் எழுப்பிய ஆளும் வர்க்க கட்சிகளோ இந்த வேலைப் பறிப்பு குறித்து வாய் திறக்க வில்லை. காரணம் உலகமயமாக்கல் கொள்கைக்குப் பின், ஒப்பந்தம் செய்வது கொள்ளைக்குப் பின் […]

சிங்காரவேலர்

எளியோரை வலியோர் சுரண்டுவதிலிருந்து‍ விடுதலை, விஞ்ஞானம், கலாச்சாரம் ஆகியவற்றை அனுபவிக்கும் உரிமையுள்ள தொழிலாளர்கள் தம் புரட்சிக் கீதத்தை இசைக்கும் சுதந்திர இந்தியாவைப் பற்றிய கனவைக் கண்ட ம.சிங்காரவேலர் அவர்களின் பிறந்த நாள்.