தீபாவளி கொண்டாடுவது யார்? யாருக்காக? -பேரா.தொ.ப.

இன்று தமிழ் நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளியாகும். நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி,எண்ணெய்,மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச்சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால், இது தமிழர்களின் “தேசியத் திருவிழா” போலக் காட்டப்படுகிறது. தீபாவளி, தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத் தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும். பார்ப்பனீயத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியைக் குறிக்கும் வெடி, அதன் மூலப்பொருளான வெடி […]

தீபாவளி “பண்பாடும் பொருளாயதக் கட்டுமானமும்” . . . . . . !

தீபாவளி – தீபம்+ஆவளி,  தீபங்களின் வரிசை. இருளை விலக்கி, ஒளியை வரவேற்கும் விழா. அனைத்து தரப்பினரும் ஏதோ ஒருவகையில் பங்கேற்கும் பண்டிகை. எத்தனை விமரிசனங்கள், எத்தனை எதிர் அரசியல்கள், எத்தனை மாறுதல்கள், எத்தனை சமய அடையாளங்கள், அத்தனையையும் தாண்டி பெருஞ்செல்வாக்குடன் வருடந்தோறும் கழிகிறது தீபாவளி நாள். மிகமுக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய செய்தி தீபாவளி நாட்களின் வர்த்தகம். அரிவாள்மனையிலிருந்து, ஆடை ஆபரணங்கள் வரையிலும் விற்பனையில் சக்கைபோடும் விழா தீபாவளி. குதூகலம், உற்சாகம் தொற்றிக்கொள்ளும் வகையில் காலந்தோறும் மாற்றம் பெற்று,  தன்னை […]