பரியேறும் பெருமாள் பி.ஏ பி.எல் மேல ஒரு கோடு . . . . . . . . . . !

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி பதம் பார்த்தது. அந்தக் கவிதை சுமந்து வந்த அன்பு, மனிதம், கோபம், வலி எல்லாமே அப்பழுக்கில்லாத நேர்மையை பிரதிபலித்தது. அந்த நேர்மையை கட்டித் தழுவலாம், முத்தமிடலாம், பிரதிபலன் பாராத அன்பினைத் தரலாம். அந்தக் கவிதையின் தலைப்பு “பரியேறும் பெருமாள்”, எழுதியவர் மாரி செல்வராஜ். வரவேற்பும், வாழ்த்துகளும் மாரி செல்வராஜுக்கு. […]

சாதியாதிக்க அரசியலும் தொட்டியபட்டி வன்முறையும் – ஒரு கள ஆய்வு . . . . . . !

2017, மார்ச் 30 , மாலை 6 மணி அளவில், ராஜபாளையம் பக்கத்தில் உள்ள தொட்டியபட்டி கிராமத்தில், அருந்ததியர் காலனி  வீடுகள் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டன. தமிழக வரலாற்றில் இன்னொரு கருப்பு நாள். ஏப்ரல் 1 அன்று நாங்கள் அங்கு சென்று அறிந்த சம்பவத்தின் பின்னணி, “”தொட்டியபட்டி கிராமம், கொத்தங்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது. தனித்தொகுதி. தொட்டியபட்டியில் ஏறக்குறைய 400 குடும்பங்கள் கம்பளத்து நாயுடு சாதியினர். 50 குடும்பங்கள் அருந்ததியினர். கடந்த 30.03.2017 அன்று,  அருந்ததியினர் காலனி குடியிருப்பில் உள்ள […]

“சாதி தேசத்தின் சாம்பல் பறவை” – நம் சமகால சமூக வரலாற்று ஆவணம்.

இந்தியப்பண்பாடு – கலாச்சாரம் – நாகரிகம் தொடர்பாய் ஆயிரம் நல்ல சங்கதிகள் சொல்லமுடிந்தாலும் இந்த மண்ணின் ஒற்றைக் கொடுமையானது அவற்றையெல்லாம் ஒன்றும் இல்லாமல் செய்ய முடிகிறது என்றால் அதன் பெயர், “சாதி”. உலக அளவில் சாதியை விட வீரியமும், விசமும் கொண்ட இன்னொரு சமூகக் கொடுமை இருக்கிறதா என்றால் சந்தேகமே. இந்த சாதிக்கொடுமை குறித்து- அதைக் களைந்தெடுத்து மானுடம் பேணுவது குறித்து ஒட்டுமொத்த சமூகமும் கள்ளமௌனம் சாதிப்பதையே இங்கே காண முடிகிறது. குடும்பம், நட்பு, பொதுவெளி, கல்விக்கூடம், […]

ஜனநாயக தேசத்தில் மனித நேயம் கிடைக்குமா?

தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பெருமிதம் பேசும் இந்திய தேசத்தில் மலக்குழுிகளுக்குள்ளே மனிதனை இறக்கி உயிரை துறக்க வைக்கும்  மனித இழிவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. உலகத்தின் மிக பெரும்பான்மையான நாடுகளில் இந்த இழிவு ஒழிக்கப்பட்ட பின்பும் இன்னும் இந்திய துணைக்கண்டத்தில் நீடிக்கிறது. இந்தியாவின் சாபக்கேடான சாதியமும் இதோடு இணைந்துள்ளது . வர்க்க ஒடுக்குமுறை, சாதிய ஒடுக்குமுறை, பெண்களாக இருந்தால் பாலியல் ஒடுக்குமுறை என பலவிதமான ஒடுக்குமுறைகளாலும் தாக்கப்படுபவர்களான தலித் மக்களே பெரும்பாலும் இந்த இழிவுக்கு பலியாகி […]

புதிய ஆசிரியன் – ஜூன் 2015 தலையங்கம்

தமிழ்நாட்டில் தீண்டாமைக் கொடுமை பல் வேறு வடிவங்களில் நடந்துவருவதை கள ஆய்வுகள் அம்பலப்படுத்து கின்றன. ஆதிக்க சாதிகளின் வாக்கு வங்கியைத் தக்க வைக் கும் நோக்கில் தமிழகத்தை ஆண்ட, ஆளும் கட்சிகள் இதைக் கண்டு கொள்வதில்லை. இது தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கும் அரசியல் சட்டத்திற் கும் செய்யும் துரோகமே தவிர வேறல்ல.

ஈஸ்வர அல்லா தேரே நாம் – பேராசிரியர் அருணன்

வி.பி.சிந்தன் ஒரு சித்தாந்தவாதியாக மட்டுமின்றி களப் போராளியாகவும் வாழ்ந்து காட்டினார். அவர் நினைவாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரிகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான வரிகள். கடவுளைப் பார்த்து ஈஸ்வரனும் நீதான், அல்லாவும் நீதான் என்று கூறுவது உண்மையான மதநல்லிணக்கவாதிகளுக்குத்தான் சாத்தியம். கடவுளுக்கு இந்த இரண்டு பெயர்கள் மட்டுமல்ல, வேறு பல பெயர்களும் உண்டு என்ற நல்ல புத்தியை எல்லோருக்கும் கொடு (சப்கோ சன்மதி தே பகவான்) […]

விஷவாயு மரணச் செய்திகளும், தோட்டியின் மகனும் …

(எழுத்தாளர் சுந்தரராமசாமியின் பிறந்த நாளன்று, எழுத்தாளர் ‘தகழி சிவசங்கரன்’ எழுதி, சுந்தரராமசாமியின் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘தோட்டியின் மகன்’ நாவல் அறிமுகத்தை வாசிப்புக்காக வழங்குகிறோம்.) வாசிக்கும் பழக்கம் அறவே விடுபட்ட நிலையில் மீண்டும் ஏனோ இதன் மேல் ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொள்ள, எளிமையான தமிழ் புத்தகங்களை வாசிப்போம். என்று ஆரம்பித்து ச.தமிழ்செல்வன் நூல்களை வாசிக்கலானேன். எங்கள் பழைய புத்தக அலமாரியில் சில புத்தகங்கள் வாசிக்கும் பட்டியலை நீட்டியது. அப்படி அகப்பட்டது தான் “தோட்டியின் மகன் “. இந்த வார்த்தை, […]

தனியார்மயத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள்: தலித் – பிற்படுத்தப்பட்டோரே!

இடஒதுக்கீடு என்பது வெறும் கொள்கை சார்ந்ததோ, அரசியல் வித்தையோ அல்லது கருணை அடிப்படையிலானதோ அல்ல, இடஒதுக்கீடு என்பது சட்டபூர்வமான கடப்பாடு என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார். மனு(அ)தர்மத்தை பின்பற்றும் பிராமண சமூகம், மக்கள் அனைவரையும் சமமாகக் கருதாமல், பிறப்பால் இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்று வகைப்படுத்தியுள்ள வர்ணாசிரமத்தை இச்சமூகத்திலிருந்து அழித்தொழிப்பதே இடஒதுக்கீட்டின் முக்கிய அம்சம். மனு(அ)தர்மத்தின் படி தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் கடைநிலை சாதியினருக்கு கல்வி கற்க உரிமையில்லை. அடிப்படை உரிமையான கல்வி மறுக்கப்பட்ட காரணத்தினாலேயே பெரும்பான்மையான […]

மனிதம் மறுக்கும் மொழிகள் ! (சிறுகதை)

தார் சாலை சூடாக இருந்தத்து. சாலையோரத்தில் நீண்ட இடைவெளிகளில், கிடைத்த மர நிழல்களில் அவ்வப்போது ஒதுங்கி நின்றபடி, குழந்தை ராகவனை இழுத்துக்கொண்டு விருவிருவென நடந்தாள் பத்மா. ராகவனுக்கு இப்போதுதான் 4 வயது, பள்ளிக்கு அனுப்ப முடியாது.  ‘இருக்குற கஷ்டத்துல இதையும் நடத்திக் கூட்டிக்குட்டு அலைய வேண்டியிருக்கு’ என பத்மாவின் மனசு புலம்பியது. தோளில் ஒரு குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது.