அறம் காண விரும்பு . . .

திருவள்ளுவர் மாவட்டம் காட்டூர் கிராமத்தை சேர்ந்த நான்கு வயது குழந்தையும் , புல்லேந்திரனின் மகளுமான தனிஷக்காவின் வாழ்வில் நேர்கோட்டில் வந்துபோனது என்பதையும் அன்றாட வாழ்வியலில் வறுமை கோட்டின் கீழ் இருக்கும் (BPL ) வர்கத்தினர் அனுபவித்து வருகிறார்கள் என்பதே “அறம்” திரைப்படம் வழியாக இயக்குனர் கோபி நயினார் உருவாக்கிய திரைக்கதை

‘ஐ’ – ய்யே -2 : தணிக்கை அதிகாரி பக்கிரிசாமிக்கு சில கேள்விகள் …

‘’ஐ’’ படம் மீதான எனது விமர்சனத்தை சிலர், ‘’மாதொருபாகனோடும்’’, கருத்துரிமை மீறல் என்றும் கூறுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது.. முதலாவதாக எந்த நிலையிலும் இந்த படத்தை நான் தடைசெய்ய கொரிக்கை வைக்கவில்லை.. இப்படத்தை புறக்கணிக்கவும், இத்திரை ஆபாசத்தை தணிக்கை துறை முதல் எழுத்தாளர்கள், ரசிகர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் அதன் மூலம் இனி வரும் படங்களில் இதுபோன்ற அபத்தங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன்.

கத்தி திரைப்படம் – முதல் பார்வை …

இதையெல்லாம் பேச எந்த தாமிரபரணியில் ஒரு நாளைக்கு 9 லட்சம் தண்ணீரை உறிஞ்சி கோக் தயாரிக்கப்படுகிறதோ அந்த கோக்கின் விளம்பரதாரராக இருந்த விஜய்-க்கு அருகதை இருக்கிறதா? கார்ப்பரேட் கம்பெனிகள் சினிமாவில் வலுவாக காலை ஊன்றி நம் பாக்கெட்டுகளை காலி செய்ய துவங்கி விட்ட காலகட்டத்தில், அதே கார்ப்பரேட் கம்பெனிக்கு படம் எடுத்து கொடுத்து பணம் சம்பாதிக்க வழிவகை செய்யும் இயக்குநர் ஏ. ஆர். முருகதாசுக்கு அருகதை இருக்கிறதா?

வேலையில்லா பட்டதாரி: இரண்டு கோணங்கள் …

இன்றைய இளைஞர்களின் முக்கியப் பிரச்சனையான வேலையின்மையையும் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் படம் ‘வேலையில்லாப் பட்டதாரி’. தான் படித்த துறையில், தனக்கான
வேலையைத் தேடி அலையும் இளைஞனின் கதையாக முதல் பாதியும், கிடைத்த வேலையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞனின் போராட்டமாக பிற்பாதியும் கதை நகர்கிறது. உண்மைப் பிரச்சனைகளை தொட்டுக் காட்டினாலே போதும், படத்துக்கு எத்தனை வரவேற்பிருக்கும் என்பதை அரங்கம் நிரூபித்தது. படித்து, வேலை தேடும் இளைஞர்களின் பெரும் கூட்டம் – ஆர்ப்பரித்தபடியேதான் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த இளைஞர்களின் ஆதரவைப் பெற்ற இந்தபடம் ஹிட் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

தேவை வருத்தப்படும் வாலிபர் சங்கம் …!

சமூகத்தின் மீது வருத்தப்பட்டும் வருத்தப்படாமல் செய்திகளை பரப்பும் ஊடகங்களின் தொகுப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெளிவந்துள்ளது. இன்றைய தமிழ் சமூகத்தின் அடையாள அரசியலுக்கு ஆயுதமாக சாதிய வெறியர்களால் காதல் எதிர்ப்பு கையிலெடுக்கப்படுகிறது. உயிரினங்களின் இயல்பான எதிர்க்கும் அவர்கள், காதல் நிறைவேறினால் தலையே போய்விட்டது போல் இயற்கைக்கு முரணான தங்கள் அரசியலை முன்னெடுப்பதை – வருத்தப்படாத வாலிபர் சங்கம் சரியாகவே சொல்லிவிடுகிறது. இரண்டரை மணிநேரத்தில் பாடலில், நகைசுவையில் இழையோடும் காட்சிகள் வயிறு குலுங்க வைத்துவிடுகின்றன… திரைக்கதை நகர்த்தலில் […]