தாமிரபரணி எங்கள் ஆறு . . . . . தண்ணீரை விற்க நீ யாரு . . . . ?

காவேரி தென்பெண்ணை பாலாறு வையை கண்டதோர் பொருநை நதி – என மேவிய யாறுபல வோடத் – திரு மேனி செழித்த தமிழ்நாடு என பாரதி பாடிய ஆறுகள் பலவும் நீரின்றி வறண்டு கிடக்கிறது. உலகின் பறவைகள் எல்லாம் தங்கிச் சென்ற வேடந்தாங்கலும், கூந்தங்குளமும் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கிறது. முப்போகம் விளைந்த நெல்லைச்சீமையில் ஒருபோகமும் இல்லாமல் கழனியெல்லாம் பொட்டல் காடாய் காட்சியளிக்கிறது. குளங்களும், கன்மாய்களும் வானம் உதிர்க்கும் ஒரு சொட்டு மழை நீருக்காக வாய் பிளந்து கிடக்கிறது. […]

‘இதுதான் வளர்ச்சி என்றால் இந்த வளர்ச்சி எங்களுக்குத் தேவையில்லை’ (நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’) -எஸ்.கவிவர்மன்

மாவட்டத்தின் மிகச் சிறந்த விவசாய பூமியான நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நமது நீர் – நமது உரிமை- நக்கீரன்

தண்ணீர் குறித்த முடிவுகள் என்பது உள்ளூர் மக்களால் எடுக்கப்பட்ட நிலையிலிருந்து மாறி இன்று உலகவங்கியால் எடுக்கப்படும் அளவுக்கு மாறிவிட்டது.

நிலத்தையும், நீரையும் பாதுகாக்க கரம் கோர்ப்போம் – பெ.சண்முகம்

தமிழ்நாட்டை பொருத்தவரை நெல்உற்பத்தி செய்யப்படும் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டால் வாங்குபவர் விவசாயம்தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், நிலங்கலெல்லாம் கான்கீரிட் காடுகளாக மாறி, பெரும்பான்மையாக இருக்ககூடிய விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பலரும் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுவர். எனவே, வேளாண்விளை நிலங்கள் பாதுகாக்கப்படுவது முதல் தேவை.

தண்ணீர் அரசியல்: மழையும் ஆயுதம் …

செயற்கை மழையானது தொழில்நுட்ப சொற்களில் ‘மேக விதைப்பு’ என அழைக்கப்படுகிறது ஆனால், உண்மையில் இதை ‘மேக திருட்டு’ என அழைப்பதே பொருத்தமாகும்.

தண்ணீர் அரசியல் பேசுவோம் – தண்ணீர் நாடாளுமன்றம்

இத்தனை ஆண்டுகளாக ஆறு வறண்டிருந்தபோது எட்டிப்பார்க்காத அரசாங்கம், தண்ணீர் இல்லாமல் தவித்த போது கண்டுக்கொள்ளாத அரசாங்கம், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சொந்த முயற்சியில் ஆற்றை மீட்டதும் பலனை மட்டும் அறுவடை செய்ய வருகிறதா?

தண்ணீர் + அரசின் ஒரு இலவச இணைப்பு

நிலத்தடி நீர் குறைந்த மாவட்டங்களாக நாமக்கல், கோவை, பெரம்பலூர், இராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், வேலூர் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் வேணாந்தூர் கிராமத்தில் நிலத்தடி நீர் 1500 அடிக்கும் கீழே இறங்கிவிட்டது.

தண்ணீர் – கந்தர்வன் சிறுகதை

ரயில்களில் இந்த வசதியில்லை, அந்த வசதியில்லை என்று இந்திரா எதைப் பற்றியும் நினைத்ததில்லை. ஏனென்றால், ரயிலில் இதுவரை பயணமே செய்ததில்லை.

அரிசி இலவசம், தண்ணீர் பத்து ரூபாய்… எது சாதனை?

தவித்த வாய்க்கு தண்ணீர் கேட்டால் கூட தரத்தயங்கும் மனநிலைக்கு தமிழக மக்களை மாற்றியதும் அதிமுக அரசின் பெருஞ்சாதனையென்றே நிச்சயம் கூறலாம். பேருந்திலொ அல்லது ஏதேனும் பயணங்களிலொ தண்ணீர் இல்லையென்றால், யாருக்கும் இப்போதெல்லாம் அருகில் இருப்பவரிடம் கேட்கத்தோன்றுவதில்லை. அப்படியே கேட்டாலும் சிலர் கொடுப்பதில்லை. கொடுப்பவர்களோ எனக்கு இன்னைக்கு புல்லா வேணும், சும்மா வாயை நனைச்சிட்டு கொடுத்துருங்க என்று சொல்லிக்கொடுக்கும் நிலை பலருக்கு. சும்மா சும்மா தண்ணிய குடிச்சிக்கிட்டே இருக்காதே, பாட்டில காலி பண்ணிடாதே, தவிச்சதுன்னா ஒரு மடக்கு குடிச்சுக்கோ என குழந்தைகளைப் பார்த்து பெற்றோர்கள் சொல்லும் நிலை.

பழனியும் பறவைகளும்..

பழனியில் இருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் கொங்கூர் குளத்திற்கு குளிர் காலங்களில் ஏராளமான பறவைகள் வருவது பற்றி அறிந்து கொண்டேன். 2011 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் முதல் முறையாக கொங்கூர் சென்றேன். பழனியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் தாசநாயக்கன்பட்டி என்ற ஊரில் இருந்து 3 கி.மீ மேற்கு நோக்கி சென்றால் கொங்கூர் குளத்தை அடையலாம். குளத்தை நெருங்குவதற்கு முன்பே சாலையின் குறுக்கே கௌதாரிகள் (Grey Francolin) கடந்து சென்றன. பறந்து விரிந்திருந்த குளத்தில் நீர் நிரம்பி இருந்தது. பவளக்கால் உள்ளான்களை முதல் முறையாக பார்த்தேன். அவை குளத்தின் கரையில் நீர் குறைவான இடங்களில் நின்று கொண்டிருந்தன.