நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதிக்கு அஞ்சலி நிகழ்ச்சி …

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் சென்றிருந்தேன். ஐடி இளைஞர்கள் முன் நின்று ஏற்பாடு செய்த அஞ்சலி நிகழ்விற்காக. ஸ்வாதியின் குடும்பத்தாரும் வந்திருந்தனர். நானறிந்த சிலரும், நான் அறியாத பலரும் வந்திருந்தனர். மிஞ்சிப்போனால் 100 பேர் இருக்கும்.

#ஸ்வாதி – கொலை, வெறுப்பை எப்படி வீழ்த்துவது?

இந்த வெறுப்பை வீழ்த்தாமல்… கொலைகளை எப்படி வீழ்த்துவோம்? வெறுப்புக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுவது நம்மால் முடியும்தானே?

தாஜ்மஹால் – கட்டியவர்களின் விரல் வெட்டப்பட்டதா?

தாஜ் மஹால் பற்றி பல கதைகளும் நிலவிவருகின்றன… முதலாவது, இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட கலைஞர்களின் கரங்கள் வெட்டப்பட்டதாக சொல்லப்படுவதாகும்.

மதிப்பெண்களுக்கு எதிராக ஒரு ஆசிரியரின் புத்தகம் …

சிவகுரு முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே…. புத்தகத்தின் தலைப்பே சற்று வித்தியாசமாக இருந்த்து. அப்படி என்ன தான் இப்புத்தகத்தில் உள்ளது என சில பக்கங்களை புரட்டினால் ஏற்படும் பாதிப்புகள், கண்ணீர் சிந்த வைக்கும் சில உண்மை சம்பவங்கள், நெகிழ்ச்சியூட்டும் தருணங்கள் மற்றும் 159 பக்கத்தில் கல்வி முறையில் நாம் காண வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்நூல் வெவ்வேறு தளங்களில் நின்று பேசுகிறது. நூலாசிரியர் நா.முத்துநிலவன் தமிழகம் முழுதும் அறியப்பட்ட நல்ல நாகரீக பேச்ச்சாளர் , முற்போக்கு […]

பெருச்சாளிகளும், போலீசாரும் உலவிய ஒரு நாள் இரவின் கதை!

இரவு செல்லச் செல்ல – மாடுகள் வந்து மழைக்கு ஒதுங்கின … அவை கூடாரத்தை நெருங்கியபோது விரட்டிவிட்டோம். கொசுக்கள் படையெடுத்தன. செய்வதற்கு ஒன்றுமில்லை. பூச்சிகல் உலவத் தொடங்கின. அதுவொரு நல்ல இரவல்ல. படுத்திருந்தோர் மீது பெருச்சாளிகள் உலவிக் கொண்டிருந்தன. விரட்டிவிட்டோம். அசந்தால் உயிரைக் கொல்லும் மிக மோசமான இடம் அதுவென்பதை எங்களுக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தது ஒவ்வொரு நிமிடமும். உணவின்றி மயங்கிக் கிடக்கும் தோழர்களை நினைத்து, மனம் பதபதைத்தது. அருகிலிருந்து ஒரு நிமிடமும் அகலத் தோன்றவில்லை.

ஈஸ்வர அல்லா தேரே நாம் – பேராசிரியர் அருணன்

வி.பி.சிந்தன் ஒரு சித்தாந்தவாதியாக மட்டுமின்றி களப் போராளியாகவும் வாழ்ந்து காட்டினார். அவர் நினைவாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரிகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான வரிகள். கடவுளைப் பார்த்து ஈஸ்வரனும் நீதான், அல்லாவும் நீதான் என்று கூறுவது உண்மையான மதநல்லிணக்கவாதிகளுக்குத்தான் சாத்தியம். கடவுளுக்கு இந்த இரண்டு பெயர்கள் மட்டுமல்ல, வேறு பல பெயர்களும் உண்டு என்ற நல்ல புத்தியை எல்லோருக்கும் கொடு (சப்கோ சன்மதி தே பகவான்) […]

புதிய தலைமுறை தொலைக்காட்சி மீதான தாக்குதலுக்கு ‘சரிநிகர்’ கண்டனம்!

ஒரு ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்திய இந்து மதவாத அமைப்பினரை சரிநிகர் வன்மையாகக் கண்டிக்கிறது. தங்கள் தரப்பு வாதங்களை மக்களிடையே எடுத்துச் செல்வதற்கு மாறாக, இப்படி வன்முறையின் மூலமாகவும் மத்திய ஆட்சியில் தங்களுக்கு சாதகமானவர்கள் இருக்கிற அதிகார வலிமையின் மூலமாகவும் ஆரோக்கியமான விவாதங்களை முடக்குவது என்பதே அவர்களது கருத்தியல் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. மக்கள், குறிப்பாக பெண்கள் புதிய கருத்துகளைத் தெரிந்துகொள்ளவிடாமல் தடுக்கிற ஆதிக்க மனோபாவமே இது.

பெருமாள் முருகனிடம் போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்து – அதிர்ச்சித் தகவல்கள்

எழுத்தாளர் பெருமாள் முருகனை பலவந்தப்படுத்தி நாமக்கல்லை விட்டு வெளியேறுமாறு செய்ததது அந்த மாவட்டத்தின் போலீசாரே என்று எழுத்தாளரின் வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளர்ர்.சில நாட்களுக்கு முன்னதாக `மாதொருபாகன்’ என்ற நாவல் எழுதியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகன் சாதி ஆதிக்க அமைப்புகளினாலும் ஆர்எஸ்எஸ் மதவெறி அமைப்புகளினாலும் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு, அவர் எழுதிய நாவல்களை திரும்ப பெறுமாறு நிர்பந்திக்கப்பட்டார். இது மாவட்ட நிர்வாகத்தின் முன்பாகவே பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் நாமக்கல் ஊரை விட்டு தனது […]

மோடி வெட்டிய இந்தியக் கேக்!!

செய்தி: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்), ஏர் இந்தியா, இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், இந்துஸ்தான் பெர்டிலைசர்ஸ் கார்ப்பரேசன், எச்எம்டி மிஷின் டூல் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களை விற்று நிதி சேகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேற்கண்ட நிறுவனங்களை உடனடியாக மூடுவதற்கான ஆலோசனைகளை வரையறை செய்துவருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெத்தியடிக் கேள்விகள்… கேட்பீர்களா… நீங்கள் கேட்பீர்களா?

மோடி அவர்களே! ஹை-டெக் பிரதமர் நீங்கள்! பெரு நிறுவன ஊடகங்கள் உங்களைப் பாராட்டலாம். ஒபாமா உங்களுக்குத் தடபுடல் வரவேற்பை அளிக்கலாம். ஆனால், உங்கள் காதுகளில் உள்ள இயர்போனை முதலில் கழற்றுங்கள்