பரியேறும் பெருமாள் பி.ஏ பி.எல் மேல ஒரு கோடு . . . . . . . . . . !

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது. படிக்க படிக்க அதன் சொற்கள் ஒவ்வொன்றும் மென்மயிலிறகாய் வருடிப் போனது. சிலவை கூரிய முனையால் இதயச் சுவர்களை கீறி பதம் பார்த்தது. அந்தக் கவிதை சுமந்து வந்த அன்பு, மனிதம், கோபம், வலி எல்லாமே அப்பழுக்கில்லாத நேர்மையை பிரதிபலித்தது. அந்த நேர்மையை கட்டித் தழுவலாம், முத்தமிடலாம், பிரதிபலன் பாராத அன்பினைத் தரலாம். அந்தக் கவிதையின் தலைப்பு “பரியேறும் பெருமாள்”, எழுதியவர் மாரி செல்வராஜ். வரவேற்பும், வாழ்த்துகளும் மாரி செல்வராஜுக்கு. […]

‘சாய்ராத்’ – ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஆவணம்…

சோகமான கதையோ, காட்சிகளோ, திரைக்கதையோ கொண்ட எத்தனையோ திரைப்படங்களை நாம் பார்க்கிறோம். அவை தரும் சோகத்திலிருந்தும் அதிர்ச்சியிலிருந்தும் மீள்வதற்கு கொஞ்ச நேரம் ஆகலாம். ஆனால் ஒரு சில திரைப்படங்களின் சோகக் காட்சிகள் மட்டுமே அந்தக் காட்சியையும் தாண்டி பலநாட்கள் நம்மை சோகத்திற்குள்ளாக்கும். அக்காட்சிகளைப் போன்ற கொடுமைகள் நமக்கு அருகிலேயே சிலருக்கு நடந்துகொண்டிருக்கிறது என்கிற அதிர்ச்சிதான் அதற்கு மிகமுக்கியமான காரணமாக இருக்கும். சமீபத்தில் அப்படியாக அதிகமாக பாதித்த திரைப்படங்கள் – தமிழில் விசாரணை, மராத்தியில் ஃபான்றி. “உனக்கு அருகிலேயே […]

ஆணவக் கொலைகளும் தமிழக அரசியலும் – பேரா.லட்சுமணன்

பெரும்பாலான சமூகக் குழுக்கள் கடைபிடித்து வரும் மரபுகள், உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், விதவை முறை, இம்மூன்று மரபுகளும் எவ்வாறு இந்திய சமூகங்களுக்குள் நடைமுறை ஆனது அதற்கான பின்புலங்கள் என்ன?