கத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு

காஷ்மீரின் கத்துவா என்கிற கிராமத்தைச் சேர்ந்த 8 வயது குழந்தையை, ஒருவாரம் கோவிலிக்குள் அடைத்துவைத்து வன்புணர்ந்து, கொடூரமாகக் கொன்றிருக்கிறார்கள் சிலர். “குற்றவாளிகளைக் கொல்லவேண்டும்” “குற்றவாளிகளைத் தூக்கில் போடவேண்டும்” “அவர்களது ஆணுறுப்பை அறுத்து எறியவேண்டும்” போன்ற குரல்கள் நாடுமுழுவதும் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றன. எந்தவொரு குற்றம் நிகழ்ந்தாலும், குற்றம் செய்தவர், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்று இருதரப்பை மட்டுமே உலகிலுள்ள அனைத்து சட்டங்களும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. குற்றங்களை விமர்சிக்கும் நாமும் அதே அளவுகோளைத்தான் வைத்திருக்கிறோம். ஆனால் குற்றம் நிகழ்வதற்கான சமூகக் […]

நீதிமன்றத்தை கேவலப்படுத்திய சாதியும், வேடிக்கை பார்த்த அரசும் – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

திருநாள்கொண்டசேரி கிராமத்தில் நடந்திருக்கும் அவலம் சாதிபேதமற்ற சமூகத்தைக் கனவு காண்போர் மீதான பேரிடி. ”இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?” என்று கேட்கும் அப்பாவிகளுக்கு இப்போதைய சாட்சி. சாதி என்பது அரசியல்வாதிகளை, ஆட்சியாளர்களை, அரசு அதிகாரிகளை தன் முன் மண்டியிடவைக்கும் என்பதற்கான மீண்டுமொரு உதாரணம்!