மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 11

நாக்பூரை நோக்கி:     சுதேசி அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் ஜெயனுடன் நைபுண்ணிய வர்க்(ஆர்.எஸ்.எஸ்-ல் முக்கியமானவர்களுக்குக் கொடுக்கும் ரகசிய குணமுள்ள பயிற்சி கூட்டம்) பயிற்சிக்கு நாக்பூருக்கு போக வேண்டுமென்று வ்யவஸ்தா பிரமுக் மோகன் ஜி கூறினார். அது 7 தினங்கள் கொண்ட பயிற்சியாகும். இரயில்வேத் துறையில் அமைப்புக்கு செல்வாக்கு உள்ளதால் பயணச்சீட்டுகள் வெகுவிரைவாக ஏற்பாடு செய்ய முடிந்தது. இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட வகுப்பில் தான் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது(எர்ணாகுளம்- புனே எக்ஸ்பிரஸ் இரயில்). அவ்வாறு நானும் ஜெயன் அண்ணனும் […]

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 10

அட்டப்பாடி:    தலசேரியிலிருந்து அட்டப்பாடிக்கு பயணம் செய்தேன். அந்த பயணம் ரசனை மிகுந்ததாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது. காட்டின் வசீகரிக்கும் தன்மையும், இயற்கை அழகும் ஒருசேர விளையாடும் இடமான அட்டப்பாடியை நோக்கி, மயில்வாகனம் என்ற பெயரிடப்பட்டிருந்த பேருந்தில் ஏறி, மன்னார்க்காட்டிலிருந்து துவங்கிய, மழைப்பிரதேச பயணம் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும். முக்காலி என்ற இடத்தை அடையும் போது சோதனைச் சாவடி ஒன்றுண்டு. அவ்விடத்தை சென்றடைந்த போது சிறு மழைத் தூறல். அந்த ஊருக்கு வரும் விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் வரவேற்க இயற்கை […]

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 9

சொந்த ஊரை நோக்கி…     எர்ணாகுளத்திலிருந்து ஊருக்குச் சென்றேன். விபாக் பிரச்சாரகர் வினோத் அண்ணன் கூறியபடி, கண்ணூர் விபாக் அலுவலகத்திற்கு வந்தேன். ஊரிலுள்ள நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதாக அவர் என்னிடம் கூறினார். ஊரில் சுயம் சேவகர்கள் நடத்திவந்த ஃபண்ட், சீட்டு போன்றவை முடங்கி விட்டதாகவும், தற்போது என்ன செய்வதென்று புரியாத நிலையிலிருப்பதாகவும் அவர் என்னிடம் கூறினார். சவினேஷ் என்ற சுயம் சேவகன் பேராவூரில் கணிணி மையம் துவங்கவும், அவனுடன் கொஞ்ச நாட்கள் இருந்து மையத்தை நடத்தவும் உதவ […]

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 8

மனதால் வெறுப்புற்ற முன்று உளவுப்பணிகள்:      மாநிலமெங்கும் கணித ஆசிரியர் என்ற பெயரில் கிறிஸ்தவ முஸ்லிம் பிரிவினர் நடத்தும் கல்வி நிலையங்களில் எப்படியாவது நுழைந்து, அங்குள்ள இந்து மாணவர்களின் விபரங்களை சேகரித்து, அவர்களை இணைத்துக்கொண்டு லட்சுமி பூஜை, வித்யா கோபாலார்ச்சனை போன்ற போலி பூஜை சடங்குகளை ஏற்பாடு செய்து “நான் ஒரு ஹிந்து” என்ற உணர்வு உருவாக்கும் செயலபாடுகள் நடத்தியிருக்கிறேன் என்று குறிபிட்டிருந்தேன்  அல்லவா? ஆனால் அதைவிட  மனதை வேதனைப் படுத்திய, மிகக் கொடூரமான உளவுப் பணிகளைப் […]

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 7

சங் பரிவார் இயக்கங்கள்:      சங் பரிவார் இயக்கங்களைப் பற்றி வித்தியாசமான சந்தேகங்கள் இன்று பொதுமக்கள் மத்தியிலும், சுயம் சேவகர்களுக்குள்ளும் உள்ளன. பிஜேபி -யும் ஆர்.எஸ்.எஸ் -ம் ஒன்றா? பிஜேபி -யை ஆர்.எஸ்.எஸ் கட்டுப் படுத்துகிறதா? என்பது போன்ற ஏராளமான சந்தேகங்கள் நிலவி வருகின்றன.    ‘ராமானுஜ சரணி’ என்ற போலிப் பெயரிலுள்ள இயக்கத்தில் எனக்கு பொறுப்பளிக்கப் பட்டிருந்தது. இதுவும் ஒரு ஆர்.எஸ்.எஸ் சார்பு இயக்கமாகும். இது போன்று வெளிப்படையானதோ அல்லாததாகவோ ஏராளமான சங் பரிவார் இயக்கங்கள் […]

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 6

மதுரையில் பிரதம சங்க சிக்ஷா வர்க்:    1995-ம் ஆண்டில் தான் சி.பி.ஐ.எம் தலைவர் இ.பி.ஜெயராஜனைக் கொல்ல முயற்சி நடந்தது. ரயிலில் ஆந்திரப் பிரதேசத்தில் வைத்து தான் அந்த சம்பவம் நடந்தது. துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது. ஆனால் ஜெயராஜனை சுட்டவனுக்கு குறி தவறியது. நவீன, தீவிர சிகிச்சையின் பலனாக ஜெயராஜன் உயிர் பிழைத்தார். விக்ரம்சாலில் சசி, வேட்டை தினேசன் ஆகியோரை சம்பவம் நடந்த இடத்தில் துப்பாக்கிகளுடன், ரயில்வே போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவருமே […]

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 5

தெய்யம் – ஆர்.எஸ்.எஸ்-சின் உரிமை கொண்டாடல்      மடப்புரை திறப்பு நடத்துவதென்று ஆர்.எஸ்.எஸ் தீர்மானித்தது. கோவில் தலைவராக சுதாகரனையும் செயலாளராக தாசனையும் நியமித்துள்ளதாக சாகாவில் அறிவிக்கப்பட்டது. மார்ச்-22 ம் தேதி தெய்யம் நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 10 ரூபாய் வசூல் சீட்டுகளுடன்(கூப்பன்) சிறுவர்களாகிய நாங்கள் வீடு வீடாகச் சென்று வசூல் செய்தோம். தம்புரான் சாகாவுக்கு வந்து எல்லா வாக்குறுதிகளையும் எங்களுக்குத் தந்தார். பள்ளியில் 10-ம் பத்தாம் வகுப்புத் தேர்வு நடந்த நேரமென்பதால் சிறுவர்களாகிய எங்களுக்கு பள்ளியில் […]

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 4

ஆர்.எஸ்.எஸ். என்னும் வடிவம்: விராடனை  மாதிரியாக்கிய செயல் திட்டம்       ஆர்.எஸ்.எஸ் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ள அதன் அமைப்பு வடிவத்தையும் இயக்க முறைகளையும் பற்றி அறிந்து கொள்வது தேவையான ஒன்றாகும். பிரதேசத்தின் தன்மைக்கேற்றவாறு  நான்கோ ஐந்தோ மண்டலங்களாக உருவெடுக்கும்.  அப்படி, ஏழோ எட்டோ மண்டலங்கள்  இணைந்தால் ஒரு தாலுகாவாக கருதப்படும். ஏழு அல்லது எட்டு தாலுகாக்கள் ஒரு “விபாக்” ஆகும் (மாவட்டம் என்பதன் சங் பரிவார் மொழி). கண்ணூர் மாவட்டம் என்பது சங் பரிவாரைப் பொறுத்த […]

மனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 3

எனது ஊர்….. எனது குடும்பம்      கண்ணூர் மாவட்டம் கூத்துபறம்பு நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள ஆயித்தரை என்பது நான் பிறந்த ஊர். காடும் மலையும் நதியும் இணைந்து வசீகரிக்கும் இயற்கை எழில் நிறைந்த அழகிய பகுதி. ஆழியில் அலைகள் போன்று சமவெளிகளும் குன்றுகளும் கலந்து நிறைந்து நிற்கும் பகுதி என்பதால் தான் ஆழியில் திரை(அலை) என்ற பதம், பின்னர் மருவி ‘ஆயித்தர’ என்று மாறியிருக்கலாம். பின்னர் எப்பொழுதோ பேருந்துகளில் ஆயித்தரை  என்று எழுதிய போது சிலர் […]

நம்பிக்கைவாதி: சாமியார் அசீமானந்தா – (பகுதி 6)

முந்தைய பகுதி: நம்பிக்கைவாதி 1 நம்பிக்கைவாதி 2 நம்பிக்கைவாதி 3 நம்பிக்கைவாதி 4 நம்பிக்கைவாதி 5 தேசியப் புலனாய்வுக் கழகத்தின் பளபளப்பான டெல்லித் தலைமையகத்தில், அடக்கமான மூன்றடுக்குக் கட்டடத்தில் காவல்துறை மேலதிகாரி சூபிரண்டன்ட் ஆஃப் போலீஸ் விஷால் கார்க் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தின் கண்ணாடிச் சுவரின் எதிரில் ‘அஜ்மீர்குண்டு வெடிப்பு’, ‘சம்ஜுதா குண்டுவெடிப்பு’.’சுனில்ஜோஷி கொலை’ மற்றும் ‘எழுதுபொருள்கள்’ என்று தலைப்பிடப்பட்ட நான்கு இழுப்பறைகள். விஷால் கார்க்-ன் மேசையின் பின்பக்கம் உள்ள ஒரு வெண்பலகையில் கார்க் புலனாய்வு […]