“என் பெயர் சா.ராஜலட்சுமி”

சேலம் நெடுஞ்சாலையில் ஆத்தூரை கடக்கும் போது இடது பக்கம் தென்படும் மலை பகுதியின் கடைசி குன்றில் தான் அந்த கிராமம் இருக்கிறது. இந்தியாவின் அரசியலைமப்பு சட்டத்திற்க்கோ, வளர்ச்சிக்கோ, பொருளாதாரத்திற்கோ எந்த வகையிலும் தொடர்பற்ற ஒரு கிராமம், பட்டேல் சிலையின் மிக உயரமான 182 மீட்டர் உயரத்தில் இருந்து பார்த்தால்கூட அதிகார அமைப்பின் கண்ணுக்கு புலப்படாத ஒரு சேரி, முதலமைச்சரின் மாவட்டம், அதிமுகவின் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி தான் இந்த தாளவாய்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஈச்சம்பட்டி. தாளவாய்ப்பட்டியில் இருந்து […]

கொலைக்களமாக மாறும் தமிழகம் – கே.எஸ்.கார்த்திக்

‘கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், பலாத்காரம் இவற்றில் கூலிப்படையினரின் தொடர்பு பற்றி தமிழக உள்துறை செயலாளரும், காவல்துறை தலைவரும் அறிக்கை தரவேண்டும்” என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் ‘ஒருங்கிணைக்கப்பட்ட கொலைக் கும்பல்களை இரும்புகரம் கொண்டு ஒடுக்காவிட்டால் பொது அமைதி கெடும், கூலிப்படைகளை ஒடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு ஏதேனும் உள்ளதா?” என்றும் கேள்வி எழுப்பியது.

#ஸ்வாதி – கொலை, வெறுப்பை எப்படி வீழ்த்துவது?

இந்த வெறுப்பை வீழ்த்தாமல்… கொலைகளை எப்படி வீழ்த்துவோம்? வெறுப்புக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுவது நம்மால் முடியும்தானே?

கொலை செய்வது கௌரவமானதா?

விலங்குகள் கூட உணவுக்காக மட்டுமே மற்ற விலங்கை கொல்கிறது. அதுவும் கூட தன் இனத்தைக் கொல்வது கிடையாது. ஆனால், மனிதர்கள்? குடும்பக் கலாச்சாரத்தையே தன் அடையாளமாகக் கொண்டுள்ள நம் நாட்டில் தான் தாத்தா, தந்தை, தாய் மற்றும் சகோதரரால் தங்கள் வீட்டுப் பெண்களை கொலை செய்யும் “உயர்ந்த” கலாச்சாரம் இருக்கிறது.

ஆபிரகாம் லிங்கன்: கொலைக் கதை சொல்லும் கனவு…

“ நான் ரொம்பவும் பயந்தும் மிரண்டும் போனேன். என் முன்னால் ஒரு சவம் படுக்க வைக்கும் பாடை இருந்தது.அதில் ஒரு பிணமும் கூட இருந்தது. எனக்கு அதைப் பார்க்க ரொம்பவும் பயமாக இருந்தது. அந்தப் பிணத்தின் மேல், இறுதிச் சடங்கிற்கு உரிய அனைத்து வகை உடுப்புகளும் மிகுந்த அலங்காரத்துடன் இருந்தன. அந்த பிணத்தைச் சுற்றி ஏராளமான இராணுவ வீரர்கள் இம்மியும் அசையாமல் அதனைப் பாதுகாத்து நின்று கொண்டிருந்தனர். அவ்விடத்தில் லட்சக் கணக்கான கணக்கிலடங்கா மக்கள் கூடி பிணத்தைப் பார்த்து கதறி கதறி அழுதனர். விம்மி விம்மி மறுகினர். வாயை மூடி தேம்பித்தேம்பி அழுதனர். ஆனால் அந்த பிணத்தின் முகம் மட்டும் மூடப்பட்டு இருந்தது. எனக்கு அது யாரென தெரியவில்லை.அனைவரும் ரொம்பவும் துக்கப்பட்டு விசனத்துடன் அழுது கொண்டே இருந்தனர். அவர்களை யாரும் கட்டுப்படுத்தவே முடியவில்லை.கட்டுப்படுத்தவும் இல்லை.”