தலித் அர்ச்சகர்: இந்து ஆகமத்திற்கு முன் கைகட்டி நிற்கிறதா இந்திய சட்டம்?

கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக அரசாங்கம் நாளொரு அறிவிப்பு செய்து இந்திய தேசியத்தையே அதிர வைத்துக்கொண்டிருக்கிறது. அப்படி சமீபமாக அறிவித்த அறிவிப்புகள் எல்லாமே செம ஹாட் அறிவிப்புகள் தான். அதில் ஒன்று தான், 6 தலித்துகள் உள்பட பிராமணர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக நியமித்த அறிவிப்பு. கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1,200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. திருவாங்கூர் தேவசம் போர்டு என்பது கேரள அரசின் தேவசம் போர்டு என்று அறியமுடிகிறது. அந்த […]

வெறுப்பின் நிழல் படிந்த உலகின் மத்தியில் – பேரா.விஜய பிரசாத்

கேரளாவில் இன்னும் பல பிரச்சனைகள் இருக்ககத்தான் செய்கிறது. அது ஒன்றும் சொர்க்கம் அல்ல. கேரள மாதிரி என்று ஒன்றில்லை. 2006 லிருந்து 2016 ல் வரிவருவாயின் பங்கு குறைந்துள்ளது. ஆனாலும் பொதுத்துறை நிறுவனத்தை லாபகரமாக இயக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கருவூலத்தின் இதயம் போன்ற வர்த்தக வரி வருவாயும் குறைந்து வருகிறது. ஆனபோதும் அரசை இவை பெரிதாக சிந்திப்பதை தடுக்க முடியவில்லை. கேரள கூட்டுறவு வங்கி என்பதை புதிதாக உருவாக்கி அதன் மூலம் பெரிய அளவில் நிதிதிரட்டி மாநிலத்தின் உள்கட்டமைப்பை மீட்டுருவாக்கம் செய்கின்றனர். பெரிய பிரச்சினைகளுக்கு தைரியமான சிந்தனை தேவைப்படுகிறது.
ஆனபோதும் பெரிய செய்கைகளுக்கான சைகைகளை மேற்கொண்டே பயணிக்கிறது.