பாலஸ்தீனம் வரலாறும் சினிமாவும் (இ.பா.சிந்தன்) ஓர் அறிமுகம் – மணிநாத்

நாஜி ஹிட்லரால் பாதிக்கப்பட்ட யூதர்கள் உலக அனுதாபத்தை அறுவடை செய்ய “நாங்கள் வேறு எந்த தேசத்திற்கு இடம் பெயர்ந்தாலும் அங்கேயும் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளாகமாட்டோம் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. எங்களுக்கு தனி தேசம் அமைவதே நியாயம்” என்கிறார்கள் . ஐரோப்பாவிலிருந்து இனவெறிகொள்கையையும், எண்ணங்களையும் அழித்து விடுவதுதானே யூதர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழியாக இருக்கமுடியும்? அதைவிடுத்து தனி தேசம் உருவாக்குவது என்று முடிவெடுத்து பாலஸ்தீனத்தின் பூர்வக்குடிகளை கொன்று குவித்துவிட்டு எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை துரத்தியடித்துவிட்டு அந்தஇடத்தில் தன் நாடு […]

2016 – எழுதிய கட்டுரைகளும், ஒரு கோப்பைத் தேநீரும்…

சிறுவயதில் தினத்தந்தியின் குடும்பமலரில் கவிதைகள் வெளியாகவேண்டும் என்பதற்காக, அதன் மொழிநடையான பிற்போக்கு/ஆணாதிக்க காதல் கவிதைகள் பலவும் எழுதியிருக்கிறேன். அதில் ஒருகவிதையை வாசித்துவிட்டு நண்பரொருவர் கடுமையான விமர்சனத்தை வைத்தார்,   “இந்தவாரம் குடும்பமலரில் உன்னோட கவிதையை வாசித்தேன். இப்படியெல்லாம் எழுதலன்னாதான் என்ன? சமூகத்திற்கு எந்தவகையிலும் பயன்படாத குப்பைகளை எழுதித்தான் நீ எழுத்தாளர் ஆகனும்னா, அப்படியொரு எழுத்தாளனாகி என்ன கிழிக்கப்போற?” என்றார். வெறுமனே பேருக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே பிற்போக்குத்தனங்களை எங்கேயும் எப்போதும் எழுதிவிடக்கூடாது என்பதை உணர்த்தினார் அந்த நண்பர். அதனை […]