தர்ம் சங்கட் மெய்ன் – திரை விமர்சனம் . . . . . .

தோழர் ஞாட்பன் சிவாவின் பரிந்துரையின் பேரில் சமீபத்தில் ஒரு சிறப்பான திரைப்படம் பார்த்தேன். ஃபவாத் கானின் இயக்கத்தில் 2015-ல் வெளிவந்த ’தர்ம் சங்கட் மே’ என்கிற ஒரு ஹிந்தி திரைப்படம். காது ஜவ்வுகளைக் கிழிக்கும்படியான கதாநாயகனின் இரைச்சல் சத்தங்களோ, லாஜிக்கே இல்லாத பஞ்ச் வசனங்களோ, சண்டைகளோ இல்லாமல் ஒரு சினிமா எப்படி இயல்பானதாக, நமக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது இந்தப் படம். ஒரு குழந்தையின் பெற்றோரின் மதமே வலுக்கட்டாயமாக அந்தக் குழந்தையின் மீது திணிக்கப்படுகிறது. […]

கோவை வன்முறைகளும் படிப்பினைகளும்….!

முதலில் கோவையின் கம்யூனிஸ, பெரியாரிய, தலித்திய  மற்றும் முற்போக்கு அமைப்புகளுக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும். 97ஆம் ஆண்டினை போலவே பிணம் திண்ண காத்திருந்த காவி பயங்கரவாதிகளின் எண்ணத்தில் மண் அள்ளிப் போட்டதால். கூடவே சீண்டலுக்கு செவி சாய்க்காமல் எந்த வித எதிர் வன்முரையிலும் ஈடுபடாமல் இருந்த இஸ்லாமிய மக்களுக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கும் நன்றிகள். 97 ஆம் ஆண்டு நிகழ்வுகளின் அனுபவ படிப்பினையும், அறிவியலின் வளர்ச்சியும் இம்முறை கொஞ்சம் உதவி செய்துள்ளது. 97ல் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவர்களின் நிலை என்ன? […]