பிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் – அ.பாக்கியம்

கால்நடை வணிகத்தையே குற்றமாக்குகிற ஒரு கொடூரமான செயல்முறையை இந்த அறிவிக்கை ஏற்படுத்துகிறது. அத்துடன், விற்கப்படுகிற ஒரு விலங்கு விவசாய நோக்கத்திற்குத்தான் பயன்படுத்தப்படுமேயன்றி இறைச்சிக்காக அல்ல என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பை விற்பவர் மீது சுமத்துகிறது. கால்நடை சந்தைக்குத் தனது விலங்கை கொண்டுவரக்கூடிய ஒரு விவசாயிக்கு, அதை வாங்குகிறவரின் நோக்கம் என்ன என்பது எப்படித் தெரிந்திருக்க முடியும்?
இப்போது புரிகிறதா? விவசாயி தன் சொந்த பொருளை விற்க வேண்டுமென்றால் பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும். நடக்கிற காரியமா? இல்லை. இது மோடி அரசின் அடாவடி நடவடிக்கை. இந்தியாவின் விவசாயிகள் ஏற்கெனவே பெரும் துயரத்தைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் – சரவணத்தமிழன்

உண்மையில் தமக்கு பின்னால் பெருந்திரள் மக்களை திரட்டவும் காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுக்கவுமே பசுபாதுகாப்பை வலியுறுத்துவதாக ஆர்.எஸ்.எஸ் குரு கோல்வால்கர் ஒப்புக்கொண்டதை ஆதாரப்புர்வமாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

வாய் ஜாலங்கள் – செ.முத்துக்கண்ணன்

இந்தியாவின் பெரிய பொதுத்துறையான ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு பதில் இன்று வரை அந்த துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையையே மோடி அரசு செய்து வருகிறது, அதன் உச்சகட்டம் இரயில்வேக்கான தனிப் பட்ஜெட்டை எடுத்துவிட்டு பொது பட்ஜெட்டோடு இணைத்துவிட்டு ரயில்வேக்கான நிதியை குறைத்து தனக்கான நிதியை ரயில்வே தானே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவு எதை நோக்கி தள்ளுகிறது.

புறப்படுவோம்.. அவர்கள் வருகிறார்கள் – அகிலன்

நான் என்ன உண்ண வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அது இப்போது நாக்பூரில் தீர்மானிக்கப்படுகிறது.

கல்வித்துறையிலுள்ள சில நல்ல அம்சங்களைக் கூட நிராகரிக்கிறது புதிய கல்விக் கொள்கை – கே.கே.ராகேஷ், மாநிலங்களவை உறுப்பினர்

குருகுலக் கல்வி முறையை பெருமையுடன் பேசுகிறது இந்த அறிக்கை. குருகுலக் கல்வி முறையில் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும். பிராமணர்களும், சத்திரியர்களும் மட்டுமே அன்று கல்வி கற்க முடியும். சூத்திரர்கள் வேதங்களை படிப்பது மட்டுமல்ல கேட்பது கூட குற்றமாக கருதி அவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அத்தகைய கல்வி முறையை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது மத்திய அரசு.

மாரீச மான் – க.கனகராஜ்

இந்துத்துவாவை வரையறுத்த சாவர்க்கர் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நாத்திகர். அவரது மனைவி மரணமடைந்த போது இந்து முறைப்படி அடக்கம் செய்யக்கூடாது என்றும், சடங்குகள் எதுவும் செய்யக்கூடாது என்றும் உறுதியாக மறுத்து விட்டார். அவருடைய இந்துத்துவாவை கடைபிடிப்பவர்கள்தான் இந்துத்துவா என்பதை இந்து மதத்தோடும், மக்களோடும், கடவுளோடும் சில உணவுப்பழக்க வழக்கங்கள், உடை பழக்க வழக்கங்களோடும் இணைத்து மக்களை மோத விடுகிறார்கள்.

மோடி அரசு: வரம் கொடுத்த மக்களுக்கு சாபங்கள்…!

என்னைத் தேர்ந்தெடுங்கள் அனைத்தையும் மாற்றிக் காட்டுகிறேன் என்று கேட்டு பிரதமராகிய மோடி அரசின் 2 ஆண்டு அனுபவம் பயங்கர கனவாய் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது.

கருத்துரிமை தாகங்கள் ஒடுக்குமுறை யாகங்கள்

உலகத்தையே அடிமைப்படுத்த முயன்ற ஹிட்லர் தன்னை விமரிசித்தவர்களைச் சிறையில் அடைத்தது இனவாத ஒடுக்குமுறைக்கு பொருத்தமானதொரு எடுத்துக்காட்டு. இலங்கையில் தமிழ் மக்களின் சம உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த சிங்களப் பத்திரிகையாளர்களும் வாயடைக்கப்பட்டதைக் கண்டோம்.

ஹபீஸ் – வேதிக் சந்திப்பு : கேழ்வரகில் வழிந்தோடும் நெய்..

ஹபீஸ் சையீத் பாகிஸ்தான் நாட்டுக்காரர். ஜமாத்-உத்தவா அமைப்பின் தலைவர். இதன் துணை அமைப்பு லஷ்கர்-இ-தொய்பா. இந்த அமைப்பு இந்தியாவில் 1998க்குப் பிறகு 10க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி 500 மேற்பட்ட பொதுமக்கள், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரை கொன்றொழித்தது.

காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை!

காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக் கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்து கொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான்.